தமிழில் தேட.....

Monday, June 8, 2020

ஆடையில் ஆடும் பொன் மணிகள் - ராஜரிஷி பாடல் வரிகள்



படம்: ராஜரிஷி
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

பெண்:
ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
கை வளை ஆட மை விழி ஆட
காதல் நெஞ்சம் ஆடுமே
மஞ்சம் தேடுமே

ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்

*********************************

பெண்:
குக்கு குகு கூ கூ கூ என்று குயில் கூவாதோ
சொர்க சுக லோகத்தில் ராகம் வருமே
தத்த தத தா தா தா நித்தம் உனை நீ தா தா
தத்தை இவள் பாதங்கள் தாளம் இடுமே

உந்தன் அருகே வந்து தழுவும் இன்ப நிலையம்
எந்தன் இடை தான் சொர்கபுரியே என்று புரியும்
பட்டுத் துகில் இது கலைந்தாடி வர
ஆசை சிறகினை விரிக்கின்றதே
தொட்டுத் தழுவிடும் சுகம் கோடி பெற
தோகை இள மனம் துடிக்கின்றதே
இவள் ஒரு சிறு கிளி ஒரு கொடி இரு கனி
குலுங்கிட நடமிடும் அபினய அழகு

ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
கை வளை ஆட மை விழி ஆட
காதல் நெஞ்சம் ஆடுமே மஞ்சம் தேடுமே

ஆடையில் ஆடும் பொன் மணிகள்

*********************************

ஆண்:
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

பெண்:
என் உடல் இது பொன் நிற அரவிந்தம்
ஏங்கிடும் இடை தாங்கிட வரலாம்  (ஆண் : ஓம் நமசிவாய)

எங்கிலும் இதில் சிந்திடும் மகரந்தம்
நித்தமும் அதில் முத்திரை இடலாம் (ஆண் : ஓம் நமசிவாய)

அஞ்சன நிறம் கொஞ்சிடும் இரு கண்கள்
ஆயிரம் கலை கூறிட வருமே (ஆண் : ஓம் நமசிவாய)

அந்தியில் வரும் இந்திர தனுசின்று
பார்த்தவர் விழி பூத்திட வருமே (ஆண் : ஓம் நமசிவாய)

மறை பயிலும் தவ முனியே
கலை பயில்வோம் வா
மது ரசமா இதழ் ரசமா நவ ரசமா வா

மாமுனி என வாழுவதா ஞானம் (ஆண் : ஓம் நமசிவாய)
காமனின் கலை தேறுவதே ஞானம் (ஆண் : ஓம் நமசிவாய)
நான்மறைகளை ஓதுவதா இன்பம் (ஆண் : ஓம் நமசிவாய)
நான்மறைவினில் கூடுவதே இன்பம் (ஆண் : ஓம் நமசிவாய)

மங்கையும் ஒரு கங்கையும் தலை மீதினில் (overlap ஆண் : ஓம் நமசிவாய)
கொண்டவன் சுகம் கண்டவன் சிவனே
முதலிது முடிவிது இதிலெது வருவது வா
இகம் இது பரம் இது அது தரும் சுகம் இது வா
தவம் இது வரம் இது அறிவிது அருளிது வா வா

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...