படம்: ஒரு ஓடை நதியாகிறது
இசை: இளையராஜா
*********************************
என் தேகம் அமுதம்
என் தேகம் அமுதம்
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம்
*********************************
முல்லை மலர் வாசம் வீசவில்லையா
பெண் மனசின் ஆசை பேசவில்லையா
பூத்திருப்பவள் தாரமல்லவா
காத்திருப்பதே பாரமல்லவா
துள்ளி எழும் பிள்ளை பிஞ்சு
சத்தம் இன்றி முத்தம் கொஞ்சு
விளக்கை அணைத்து விடு
என் தேகம் அமுதம்
மார்கழி மார்கழி மார்கழி
ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம்
ஆ ஆ ஆ
*********************************
வாவாவா வாவாவா ஆ
ஆஹாஹா ஆஹா ஹா ஆ
ஆ ஹா ஹா
வீணைகளின் மெளனம் ஓட வேண்டுமே
ஆளுக்கொரு ராகம் பாட வேண்டுமே
கூந்தல் இருக்கு போர்வை எதுக்கு
காலை வரைக்கும் காமன் வழக்கு
நெஞ்சம் எங்கும் மின்னல் அலை
பஞ்சமில்லை பன்னீர் மழை
எனக்கு பொறுக்கவில்லை
என் தேகம் அமுதம்
மார்கழி மார்கழி மார்கழி
ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம்
ம்ம் ம்ம் ஆ ஆ
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...