தமிழில் தேட.....

Tuesday, June 9, 2020

அழகிய கலை நிலவே (கருணைக் கடலே) - ராஜரிஷி பாடல் வரிகள்


படம்: ராஜரிஷி
இசை: இளையராஜா

*********************************

ஆண் குழு: கருணைக் கடலே
பெண் குழு: வாழ்க வாழ்க
ஆண் குழு: காக்கும் நிழலே
பெண் குழு: வாழ்க வாழ்க
ஆண் குழு: அறத்தின் வடிவே
பெண் குழு: வாழ்க வாழ்க
ஆண் குழு: அரசர்க்கரசே
பெண் குழு: வாழ்க வாழ்க
ஆண் குழு: வாழ்க வாழ்க
பெண் குழு: வாழ்க வாழ்க
குழு: வாழ்க வாழ்க

பெண்:
அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே
இமய மலை போல் புகழில் உயர்ந்தாய்
உனது கொடையால் மனதில் நிறைந்தாய்
நலம் பெறவே
ஆஆஆஆ ஆஆஆஆ

அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே

பெண் குழு:
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க

*********************************

பெண்:
முரசு கொட்டி வருகிற பகைவரின்
செருக்கினை தகர்த்திடும் புஜபலம் உடையவனே
பனி மலையில் உறைகிற பிறை மதி
சிவனது திருவடி தினம் தினம் தொழுபவனே
ஏழைகளின் இதயம் குளிரவே
ஆளுகின்ற தருமத்தின் துணைவா
காசினிக்கு ஒளியை கொடுக்கவே
கண் விழித்து எழுந்திடும் தலைவா
ராஜதிலகா
ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

பெண் குழு:
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க

*********************************

பெண்:
சதுர் மறைகள் புகழ்ந்திடும் வகையினில்
பெரியவர் வழியினில் கடமைகள் புரிவபனே
தினமும் உன்னை திருமகள் கலைமகள்
இருவரும் வலம் வரும் பெருமைகள் உடையவனே
காவியங்கள் புகழும் முதல்வனே
கண்ணியங்கள் தழைத்திட வருக
ஞானியர்கள் வணங்கும் அறிஞனே
புண்ணியங்கள் பொலிந்திட வருக
வீர வடிவே

நிஸஸ நீப பநிநி பாம மப கமப
கமப கம பநி பஸநிப கமப கமப ஸகமப
தரிகிட தரிகிட தரிகிட தாம்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தரிகிடத தீம்த தரிகிடத தீம்த
தரிகிடத தீம்த தரிகிடத தீம்த

அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே
இமய மலை போல் புகழில் உயர்ந்தாய்
உனது கொடையால் மனதில் நிறைந்தாய்
நலம் பெறவே
ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ

அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே

பெண் குழு:
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...