படம்: நீ தொடும்போது
இசை: இளையராஜா
*********************************
ஆண்:
பண்பாடும் தாமரையே வாவா
இசையில் விளையும் தேமாங்கனி
பொன்பார்வை பூவின் பனி
பண்பாடும் தாமரையே வாவா
இசையில் விளையும் தேமாங்கனி
பொன்பார்வை பூவின் பனி
*********************************
ஆண்:
மயக்கம் கொண்டிருக்கும்
உன் இசைக்கும் உனக்கும் வணக்கம்
பெண்:
எனக்கும் பொன்மயக்கம்
உன் இதயம் இசையின் இயக்கம்
ஆண்:
கண்ணிலே போவது மின்னல் தானோ
சொர்க்கத்தை காட்டிடும் ஜன்னல்தானோ
பெண்:
ஆ ஆ ஆ
ஆனந்தமே வா வா
பூலோகமே உன்பாட்டில் தேனாகுமே
ஆண்:
பண்பாடும் தாமரையே வாவா
இசையில் விளையும் தேமாங்கனி
பொன்பார்வை பூவின் பனி
*********************************
பெண்:
இதற்கா சம்மதித்தேன் உன் மனதை
உயர்வாய் மதித்தேன்
ஆண்:
அதற்கா நான் கொடுத்தேன்
உன் இசைக்கே பிறவி எடுத்தேன்
பெண்:
பொங்கி தான் போனது கன்னித் தேனே
அன்பினால் நான் உன்னை மன்னித்தேனே
ஆண்:
ஆ ஆ ஆ
ஆனந்தமே வா வா
பெண்:
காமன் நிலா
கொண்டாடும் காதல் விழா
ஆண்:
பண்பாடும் தாமரையே வாவா
இசையில் விளையும் தேமாங்கனி
பொன்பார்வை பூவின் பனி
பெண்:
லா லா லா ஆஆஆ ஆ
லா ல லா லா லா
லா ல லா லா ல லா
லா லா ல லா.. ல லா லா ...லா ல ல லா
*********************************