தமிழில் தேட.....

Wednesday, February 20, 2019

தவிக்குது தயங்குது ஒரு மனது - (நதியை தேடி வந்த கடல்)

படம்: நதியை தேடி வந்த கடல்
இசை: இளையராஜா

*********************************

ஆ: தவிக்குது தயங்குது ஒரு மனது
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
தவிக்குது தயங்குது ஒரு மனது

*********************************

பெ: ஏதோ ஒன்று நெஞ்சிலே
எழுந்ததென்ன உன்னிலே
எங்கோ சென்ற கண்ணிலே
ஏக்கம் என்ன பெண்ணிலே
மலர்ந்திடாத ஆசையே
மலருகின்ற நேரமே
எண்ணிய சுகம் என்னுடன் வரும்
லா லல லல...லா லல லல
கனி இதழ் சுவைதனில்
காதல் நீராடு
தவிக்குது தயங்குது ஒரு மனது

*********************************

ஆ: பொங்கும் ஆசை ஆற்றிலே
நனைந்ததெந்தன் உள்ளமே
எங்கும் இன்ப வெள்ளமே
எழுந்து பாய்ந்து செல்லுமே
தோன்றுகின்ற தாகமே
தொடருகின்ற காலமே
பார்ப்பதில் சுகம்
பலவித ரகம்
லா லல லல..லா லல லல
பசிக்கொரு உணவென
பாவை நீ வா வா
தவிக்குது தயங்குது ஒரு மனது

*********************************

ஆ: கங்கை கொண்ட சோழனின்
கனவில் வந்த தேவியே
பெ: மங்கை எந்தன் வாழ்விலே
மன்னன் நீயும் பாதியே
ஆ: சிலையை போன்ற தோற்றமே
தினமும் என்னை வாட்டுமே
பெ: இன்னிசை சுகம் இன்பத்தை தரும்
ஆ: லா லல லல.. லா லல லல
பெ: இரவிலும் பகலிலும்
மீட்ட நீ வா வா
ஆ: தவிக்குது
பெ: தயங்குது
ஆ: ஒரு மனது
பெ: தினம் தினம் தூங்காமலே
ஆ: ஒரு சுகம் காணாமலே
பெ: அது தொடர்ந்து
ஆ: எனை படர்ந்து
பெ: ஏதோ சொல்கின்றது
ஆ: மனம் எங்கோ செல்கின்றது
பெ: ஏதோ சொல்கின்றது
ஆ: மனம் எங்கோ செல்கின்றது

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...