தமிழில் தேட.....

Friday, February 22, 2019

ஏதோ நினைவுகள் கனவுகள் - (அகல் விளக்கு)

படம்: அகல் விளக்கு
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
ஏதோ நினைவுகள்,
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான்

இருவரும்:
ஏதோ

பெண்:
நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான்
ஏதோ

*********************************

பெண்:
மார்பினில் நானும்
மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்

வான் வெளி எங்கும்
என காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்

தேவைகள் எல்லாம்
தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்
தேடும் நாள் வேண்டும்

ஆண்:
ஏதோ நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே

*********************************

ஆண்:
நாடிய சொந்தம்
நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்

நாள் ஒரு வண்ணம்
நாம் காணும் என்னம்
அஹா அனந்தம்

காற்றினில் செல்லும்
என்ன காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும்
ஏக்கம் உள்ளாடும்

பெண்:
ஏதோ நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான்
ஏதோ

ஆண்: நினைவுகள்
பெண்: கனவுகள்
ஆண்: மனதிலே
பெண்: மலருதே
இருவரும்:
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...