படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
******************************************
ஆண் :
கால காலமாக வாழும்
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
காளிதாசன் கம்பன்கூட
கண்டதில்லை எங்கள் சொப்பனம்
பெண் :
பூமி எங்கள்
சீதனம்
வானம் எங்கள்
வாகனம்
ஆண் :
யாரடா நான்
நீயாடா ஹே
பகைவனே போ
பெண் :
கால காலமாக வாழும்
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
******************************************
பெண் :
வீசும் காற்றுக்கு
சட்டம் இல்லை
ஒரு வட்டம் இல்லை
தடை யாரும் இல்லை
ஆண் :
எங்கள் அன்புக்கு
தோல்வி இல்லை
ஒரு கேள்வி இல்லை
மலர் மாலை நாளை
பெண் :
முள்ளை யார் அள்ளிப் போட்டாலும்
முல்லை பூவாக மாறாதோ
முள்ளை யார் அள்ளி போட்டாலும்
முல்லை பூவாக மாறாதோ
ஆண் :
ஆஹா பூவுக்கு யார் இங்கு தீ வைப்பது
பகையே பகையே விலகு விலகு ஓடு
ஆண் :
கால காலமாக வாழும்
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
பெண் :
காளிதாசன் கம்பன்கூட
கண்டதில்லை எங்கள் சொப்பனம்
******************************************
ஆண் :
மோதி பார்க்காதே என்னை கண்டு
நீ வாழை தண்டு
இவன் யானை கன்று
பெண் :
நாளும் போராடும்
வீரம் உண்டு
சுயமானம் உண்டு
பகை வெல்வோம் இன்று
ஆண் :
பாதை இல்லாமல் போனாலும்
காதல் தேரோட்டம் நில்லாது
பாதை இல்லாமல் போனாலும்
காதல் தேரோட்டம் நில்லாது
பெண் :
பந்தம் நம் பந்தம்
என்றென்றும் தீ பந்தமே
ஆண் :
இணைவோம் இணைவோம்
பகையை சுடுவோம் நாமே
ஆண் : கால காலமாக
வாழும் காதலுக்கு நாங்கள்
அர்ப்பணம் காளிதாசன்
கம்பன்கூட கண்டதில்லை
எங்கள் சொப்பனம்
பெண் :
பூமி எங்கள் சீதனம்
வானம் எங்கள் வாகனம்
ஆண் :
யாரடா நான்
நீயாடா ஹே
பகைவனே போ
இருவரும் :
கால காலமாக வாழும்
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
காளிதாசன் கம்பன்கூட
கண்டதில்லை எங்கள் சொப்பனம்
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...