படம்: வாழ்க்கை
இசை: இளையராஜா
******************************************
ஆண்: ஆ ஆ ஆ
பெண்: ஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆண்: ம் ம்
பெண்: ம் ம்
ஆண்:
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்
பெண்:
இனிவரும் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவன் பாதம் போதும்
ஆண்:
இனி வரும் காலம்
மாறலாம் நம் காதல் மாறுமா
******************************************
ஆண்:
எந்தன் தோளில் நீ சாய்ந்தால்
இன்னும் என்ன மௌனமா
பெண்:
புல்லின் மீது பூ வீழ்ந்தால்
ஓசை என்ன கேட்குமா
ஆண்: மல்லிகைக் கொடி தோளைச் சுற்றுதே
பெண்: தேவன் தொட்டதால் பூமி சுற்றுதே
ஆண்:
உடலில் காந்தம் கொண்டு
தழுவும் தங்கம் ஒன்று
பெண்:
இதழ்களில் ஈரம் போல இன்று
இனி வரும் காலம் மாறலாம்
நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
ஆண்:
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்
இனி வரும் காலம் மாறலாம்
நம் காதல் மாறுமா
******************************************
பெண்:
காலம் என்னும் தேனாற்றில்
நாம் இரண்டு ஓடங்கள்
ஆண்:
வாழ்ந்து காட்டும் நம் வாழ்க்கை
வையகத்தின் பாடங்கள்
பெண்: உள்ளங்கைகளால் உன்னை மூடுவேன்
ஆண்: உன்னைக் காக்கவே மண்ணில் வாழுவேன்
பெண்:
வாழும் காலம் யாவும்
மடியில் சாய்ந்தால் போதும்
ஆண்:
தோள்களில் தூங்கும் பாரிஜாதம்
இனி வரும் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
பெண்:
தடைகள் தோன்றும் போதும்
தலைவன் பாதம் போதும்
இனி வரும் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
இருவர்: காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...