தமிழில் தேட.....

Sunday, February 24, 2019

ராசாத்தி மனசுல - (ராசாவே உன்னை நம்பி)

படம்: ராசாவே உன்னை நம்பி
இசை: இளையராஜா

*********************************

பெண்: ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்புத்தான்
இந்த ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்புத்தான்
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது

ஆண்: ராசாவின் மனசுல
என் ராசாத்தி நெனப்புத்தான்
இந்த ராசாவின் மனசுல
என் ராசாத்தி நெனப்புத்தான்

*********************************

பெண்: முள்ளிருக்கும் பாதை
நீ நடந்த போதும்
முள்ளெடுத்து போட்டு
நீ நடக்கலாகும்
வீதியிலே நீ நடந்தா
கண்களெல்லாம் ஒன் மேலேதான்
முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம்
கண்கள் தச்சா தாங்காதையா

ஆண்: நெதமும் உன் நெனப்பு
வந்து வெரட்டும் வீட்டில
ஒன்னை சேர்ந்தாலும் உன் உருவம்
என்னை வாட்டும் வெளியிலே
இது ஏனோ அடி மானே
அத நானோ அறியேனே

பெண்: ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்புத்தான்
இந்த ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்புத்தான்

*********************************

ஆண்: செந்துருக்க கோலம்
வானத்துல பாரு
வந்து இந்த நேரம்
போட்டு வச்சதாரு
சேரும் இள நெஞ்சங்களை
வாழ்த்து சொல்ல போட்டாகளா
ஊருக்குள்ள சொல்லாததை
வெளியில் சொல்லித் தந்தாகளா

பெண்: வானம் பாடுது
இந்த பூமி பாடுது
ஊரும் வாழ்த்துது
இந்த உலகம் வாழ்த்துது
தடை ஏதும் கிடையாது
அதை நானும் அறிவேனே

ஆண்: ராசாவின் மனசுல
என் ராசாத்தி நெனப்புத்தான்
பெண்: இந்த ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்புத்தான்

ஆண்: புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது

பெண்: புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது

ஆண் & பெண் : லாலா லாலாலா லல லாலால லாலாலா
லாலா லாலாலா லல லாலால லாலாலா

*********************************

நீலக்குயிலே உன்னோடு நான் - (மகுடி)

படம்: மகுடி
இசை: இளையராஜா

*********************************

பெண்: க ப க ரி சா        ரி ச    ச த சா
ஆண்: க ப க ரி சா        ரி ச     ச த சா

பெண்: ச ரி க ப க ரி   க ப க ரி   ச ரி சா
ஆண்: ச ரி க ப க ரி   க ப க ரி   ச ரி சா

பெண்: க ப த ப    க ப க ரி   ச ரி   க ப கா
ஆண்: க ப த ப    க ப கரி    ச ரி    க ப கா

பெண்: த ப த ப த ப
ஆண்: க ப த ப த ப
பெண்: த ப த ப த ப
ஆண்: க ப த ப க ப

ஆண் & பெண்: சா ..ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

*********************************

பெண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
உள்ளம்   ம் பாமாலை பாடுதே

ஆண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
உள்ளம்   ம் பாமாலை பாடுதே

பெண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்

ஆண்: நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்

பெண்: அதிகாலை நான் பாடும் பூபாலமே
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு

ஆண்: நாள்தோறும் நான் பாடும் தேவாரமே
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அல்லு

பெண்: ஆகாயம் பூமி ஆனந்த காட்சி

ஆண்: சந்தோசம் பொங்க சங்கீதம் சாட்சி

பெண்: திசைகளில் எழும் புது
இசை அமுதே     வா    வா 

ஆண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்

பெண்: நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்

ஆண்: இந்நாளிலே சங்கீதமும்
சந்தோசமும் ஒன்றானதே

பெண்: உள்ளம் பாமாலை பாடுதே

ஆண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்

பெண்: நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்

*********************************

பெண்: நீர் கொண்டு போகின்ற கார்மேகமே
தூறல்கள் நீ போட தாகம் தீரும்

ஆண்: நதி பாயும் அலையோசை சுதியாகவே
நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்

பெண்:மலர்க்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்

ஆண்: பணிவாடைக் காற்று பல்லாங்கு பாடும்

பெண்: செவிகளில் விழும்
சுர லய சுகமே வா     வா

பெண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்

ஆண் : நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்

பெண்: இந்நாளிலே சங்கீதமும்
சந்தோசமும் ஒன்றானதே

ஆண்: உள்ளம் பாமாலை பாடுதே

பெண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்

ஆண் : நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்

*********************************

Friday, February 22, 2019

அட மச்சம் உள்ள மச்சான் - (சின்ன வீடு)

படம்: சின்ன வீடு
இசை: இளையராஜா

*********************************

ஆண் : ஓம் காமசூத்ராய நமஹ
ஓம் வாத்சாயனாய நமஹ
ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ

பெண் : நான் அத்தினி
நான் சித்தினி
நான் பத்மினி
நான் சங்கினி

*********************************

பெண் : அட மச்சம் உள்ள
மச்சான் நான் புதுவித ரகம்
ஆண் : நாதின் தின்ன நாதின் தின்ன திரனா
பெண் : கைய வச்சா உள்ளே
துள்ளும் நீ நெனைக்கிற சுகம்
ஆண் : நாதின் தின்ன திரனா
பெண் : ஆ ரகசிய வரம்
ஆண் : தக்க திமிதா
பெண் : ஆ தருகிற மரம்
ஆண் : தரிகிட தத்தும் தா
பெண் : ஆ ரகசிய வரம்
பெண் : ஆ தருகிற மரம்
பெண் : நீ அடிக்கடி வா ஹோய்
ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்
பெண் : அட மச்சம் உள்ள
மச்சான் நான் புதுவித ரகம்
ஆண் : நாதின் தின்ன நாதின் தின்ன திரனா
பெண் : கைய வச்சா உள்ளே
துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆண் : நாதின் தின்ன திரனா

ஆண் :
நாதிர் தனா திரனனா னா
தன நாதிர் தனா தன திரனனா திரனா
நாதிர் தனா நாதிர் தனா நாதிர் தனாஆ…
நாதிர் தனா நாதிர் தனா
நாதிர் தனா திரனன னா…

*********************************

பெண் :
என்னைக்கும் இல்லாம
இன்னைக்கு ஒன்கிட்ட ஆசை
எப்பப்ப வந்தாலும்
அப்பப்ப கல்யாணப் பூசை
ஒன்னுக்குள் ஒன்னாக
ஒன்றாகி நின்றானே சாமி
அதை கண்ணுக்கு முன்னால்
என்கிட்ட இப்போது காமி
ராகுகாலம் போனது
யோக நேரம் கூடுது
பாரிஜாதம் வாடுது
தாக சாந்தி தேடுது
மதில் மேலே வரும் பூனை எதில் பாயுமோ


ஆண் : பல மச்சம் உள்ள மச்சான்
நான் புதுவித ரகம்
நாதின் தின்ன நாதின் தின்ன திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும்
நீ நெனைக்கிற சொகம்
நாதின் தின்ன திரனா
ஆ ரகசிய வரம்
தக்க திமிதா
ஆ தருகிற மரம்
தரிகிட தத்தும் தா
ஏ ரகசிய வரம்
ஆ தருகிற மரம்
நீ அடிக்கடி வா ஹோய்
தரிகிடதோம் தரிகிடதோம்
பல மச்சம் உள்ள மச்சான்
நான் புதுவித ரகம்
நாதின் தின்ன நாதின் தின்ன திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும்
நீ நெனைக்கிற சொகம்
நாதின் தின்ன திரனா

*********************************

ஆண் :
எங்கெங்கு முந்தானை
கண்டாலும் உண்டாகும் போதை
சத்தங்களில்லாத
முத்தங்கள் என் காதல் கீதை
பெண் :
மெத்தைக்கும் வித்தைக்கும்
எப்போதும் பட்டத்து ராசா
உங்க கட்டுக்குள் வந்தாலே
மொட்டுக்கள் தள்ளாடும் லேசா
ஆண் :
நீரில்லாத மேடையில்
நீந்தப் போகும் மீனிது
பெண் :
பாயப் போகும் வேங்கையை
சாய வைக்கும் மானிது
ஆண் :
புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா

பெண் : அட மச்சம் உள்ள
மச்சான் நான் புதுவித ரகம்

ஆண் :
நாதின் தின்ன நாதின் தின்ன திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும்
நீ நெனைக்கிற சொகம்

ஆண் : நாதின் தின்ன திரனா
பெண் : ஆ ரகசிய வரம்
ஆண் : தக்க திமிதா
பெண் : ஆ தருகிற மரம்
ஆண் : தரிகிட தத்தும் தா
ஆண் : ஏ ரகசிய வரம்
ஆண் : ஆ தருகிற மரம்
பெண் : நீ அடிக்கடி வா ஹோய்
ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்
பெண் :
அட மச்சம் உள்ள
மச்சான் நான் புதுவித ரகம்
ஆண் :
நாதின் தின்ன நாதின் தின்ன திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும்
நீ நெனைக்கிற சொகம்
நாதின் தின்ன நாதின் தின்ன திரனனனா

*********************************

ஏதோ நினைவுகள் கனவுகள் - (அகல் விளக்கு)

படம்: அகல் விளக்கு
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
ஏதோ நினைவுகள்,
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான்

இருவரும்:
ஏதோ

பெண்:
நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான்
ஏதோ

*********************************

பெண்:
மார்பினில் நானும்
மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்

வான் வெளி எங்கும்
என காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்

தேவைகள் எல்லாம்
தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்
தேடும் நாள் வேண்டும்

ஆண்:
ஏதோ நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே

*********************************

ஆண்:
நாடிய சொந்தம்
நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்

நாள் ஒரு வண்ணம்
நாம் காணும் என்னம்
அஹா அனந்தம்

காற்றினில் செல்லும்
என்ன காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும்
ஏக்கம் உள்ளாடும்

பெண்:
ஏதோ நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான்
ஏதோ

ஆண்: நினைவுகள்
பெண்: கனவுகள்
ஆண்: மனதிலே
பெண்: மலருதே
இருவரும்:
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே

*********************************

Wednesday, February 20, 2019

அலை மீது தடுமாறுதே சிறு ஓடம் - (அன்புள்ள மலரே)

படம்: அன்புள்ள மலரே
இசை: இளையராஜா

*********************************

இருவரும்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆஅ ஆ ஆ ஆ

ஆ: அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

*********************************

ஆ: கண்ணில் இன்னும் சிந்தக் கண்ணீரில்லை
ஏதோ கொஞ்சம் இனிமை
பெ: பெண்ணைப் பெண்ணாய்க் காணும் காலமில்லை
போதும் போதும் தனிமை
ஆ: பிள்ளை என்னும் கொடிமுல்லை
கண்வளர இல்லை இல்லை கவலை
பெ: ஆ.ஆ..ஆ..ஆ..ஆ....
இந்த நேசம் சுகமாகுமே
இவள் வாழ்க்கை நிறம் மாறுமே
ஆ: என்றாலும் கண்ணோரம் ஓர் சோகமே

பெ: அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

*********************************

பெ: ஜன்னல் எங்கும் கண்கள் பார்க்கின்றதே
ஏதோ சொல்லிச் சிரிக்கும்
ஆ: தர்மம் பேசும் இந்த ஊருள்ளதே
சாகும் முன்பே எரிக்கும்
பெ: தானாய் ஏணி தரும் மேலே ஏற விடும்
மீண்டும் ஏணி பறிக்கும்

ஆ: ஆ..ஆ தடுமாறும் இங்கு நியாயங்கள்
இதனால் தான் பல காயங்கள்

பெ: கண்ணீரில் தள்ளாடும் பெண் தீபங்கள்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

ஆ: அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
பெ: சுமை தாங்காமலே கரை தேடும்
ஆ: சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்
பெ: அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

*********************************

தவிக்குது தயங்குது ஒரு மனது - (நதியை தேடி வந்த கடல்)

படம்: நதியை தேடி வந்த கடல்
இசை: இளையராஜா

*********************************

ஆ: தவிக்குது தயங்குது ஒரு மனது
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
தவிக்குது தயங்குது ஒரு மனது

*********************************

பெ: ஏதோ ஒன்று நெஞ்சிலே
எழுந்ததென்ன உன்னிலே
எங்கோ சென்ற கண்ணிலே
ஏக்கம் என்ன பெண்ணிலே
மலர்ந்திடாத ஆசையே
மலருகின்ற நேரமே
எண்ணிய சுகம் என்னுடன் வரும்
லா லல லல...லா லல லல
கனி இதழ் சுவைதனில்
காதல் நீராடு
தவிக்குது தயங்குது ஒரு மனது

*********************************

ஆ: பொங்கும் ஆசை ஆற்றிலே
நனைந்ததெந்தன் உள்ளமே
எங்கும் இன்ப வெள்ளமே
எழுந்து பாய்ந்து செல்லுமே
தோன்றுகின்ற தாகமே
தொடருகின்ற காலமே
பார்ப்பதில் சுகம்
பலவித ரகம்
லா லல லல..லா லல லல
பசிக்கொரு உணவென
பாவை நீ வா வா
தவிக்குது தயங்குது ஒரு மனது

*********************************

ஆ: கங்கை கொண்ட சோழனின்
கனவில் வந்த தேவியே
பெ: மங்கை எந்தன் வாழ்விலே
மன்னன் நீயும் பாதியே
ஆ: சிலையை போன்ற தோற்றமே
தினமும் என்னை வாட்டுமே
பெ: இன்னிசை சுகம் இன்பத்தை தரும்
ஆ: லா லல லல.. லா லல லல
பெ: இரவிலும் பகலிலும்
மீட்ட நீ வா வா
ஆ: தவிக்குது
பெ: தயங்குது
ஆ: ஒரு மனது
பெ: தினம் தினம் தூங்காமலே
ஆ: ஒரு சுகம் காணாமலே
பெ: அது தொடர்ந்து
ஆ: எனை படர்ந்து
பெ: ஏதோ சொல்கின்றது
ஆ: மனம் எங்கோ செல்கின்றது
பெ: ஏதோ சொல்கின்றது
ஆ: மனம் எங்கோ செல்கின்றது

*********************************

Monday, February 18, 2019

சித்தகத்தி பூக்களே - (ராஜகுமாரன்)

படம்: ராஜகுமாரன்
இசை: இளையராஜா

*********************************

பெண் : சித்தகத்தி பூக்களே
சுத்தி வர பார்க்குதே
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே
அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும்
நீதான் ஹோய்...

ஆண் : சித்தகத்தி பூக்களே
சுத்தி வர பார்க்குதே
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே
அத்த மகளே அத்த மகளே சொத்து சுகம் யாவும்
நீதான் ஹோய்...

பெண் : சித்தகத்தி பூக்களே
சுத்தி வர பார்க்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே

கோரஸ் (பெண்) :
தும்..தும்..தும்...தும்...தும்..த...தும்
தும்..தும்..தும்...தும்...தும்..த...தும்
தும்..தும்..தும்...தும்...தும்..த...தும்
தும்..த...தும் .தும்..த...தும்

*********************************

பெண் : நாள் பாத்து பாத்து ஆளான நாத்து
தோள் சேர தானே வீசும் பூங்காத்து

ஆண் : ஆனந்த கூத்து நானாட பார்த்து
பூவோரம் தானே ஊறும் தேனூத்து

பெண் : நான் மாலை சூட நாள் பாரைய்யா
ஆதாரம் நீதான் வேறாரய்யா

ஆண் : பட்டிதொட்டி மேளம் கொட்டி முழங்க
தொட்டு விடு நாணம் விட்டு விலக

பெண் : திட்டமிட்டு வாழ வாரேன் மாமா
சட்டம் ஒண்ணு போடு ஹோய்

ஆண் : சித்தகத்தி பூக்களே
சுத்தி வர பார்க்குதே
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே

பெண் : அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம்
யாவும் நீதான் ஹோய்
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பார்க்குதே

ஆண் : அத்தி மர தோப்பிலே
ஒத்திகைய கேக்குதே

*********************************

ஆண் : ஆ ஆ ஆ ஆ...பூந்தேரில் ஏறி
ஏழேழு லோகம் ஊர்கோலமாக நாமும் போவோமா

பெண் : பாராளும் ஜோடி நாம் என்று பாடி
ஊராரும் நாளும் வாழ்த்த வாழ்வோமா

ஆண் : நீரின்றி வாழும் மீன் ஏதம்மா
நீ இன்றி நானும் வீண் தானம்மா

பெண் : பட்டு உடல் மீட்டு தொட்டு அணைக்க
தொட்டில் ஒண்ணு ஆட முத்து பிறக்க

ஆண் : கட்டிலறை பாடம் தாரேன் மானே
கட்டளையப் போடு ஹோய்
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பார்க்குதே
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே

பெண் : அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம்
யாவும் நீதான் ஹோய்
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பார்க்குதே

ஆண் : அத்தி மர தோப்பிலே
ஒத்திகைய கேக்குதே

*********************************

Sunday, February 17, 2019

நிலவே முகங்காட்டு - (எஜமான்)

படம்: எஜமான்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம்...

ஆண்:
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் ச்ரூதி மீட்டு
இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே
இது தாய் மடியே

பெண்:
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் ச்ரூதி மீட்டு
இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே
இது தாய் மடியே

ஆண்:
நிலவே முகங்காட்டு

*********************************

பெண்:
பனி போல நீரின் ஓடையே
கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா

ஆண்:
காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா

பெண்:
நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா

ஆண்:
எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே

நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு

பெண்:
அணைத்தேன் உனையே
இது தாய் மடியே

*********************************

ஆண்:
சுமை போட்டு பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை நீரும் கண்ணின் நீரென்றால்
தினம் குடிப்பவன் நானே

பெண்:
மாலையோடு நடக்கும் தேரைய்யா
நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா
உன்னை மீற யாரைய்யா

ஆண்:
மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே

பெண்:
இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் ச்ரூதி மீட்டு
இனிதான மொழி பேசு

ஆண்:
இளம் பூங்கொடியே
இது தாய் மடியே
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு...

*********************************

Saturday, February 16, 2019

ஒரு கணம் ஒரு யுகமாக - (நாடோடி தென்றல்)

படம்: நாடோடி தென்றல்
இசை: இளையராஜா

*********************************

பெ: ஓ ஓ ஓ ஓ ஓ …
ஓஓ ஓஓ ஓ
ஆ  ஆ  ஆ ஆ
ஆ ஆஆஆ ஆ ஆ

பெ: ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம் தினம் உனை எதிர்பார்த்து
மனம் ஏங்க வேண்டுமோ..

ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம் தினம் உனை எதிர்பார்த்து
மனம் ஏங்க வேண்டுமோ..

தென்றலும் உனை பாடுதே
வெண்மதி உனை தேடுதே
இது காதல் ராகமே
புரியாத மோகமே …

ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ..

*********************************

பெ: வான் மீது விண்மீன்கள்
வேடிக்கை பார்க்கின்றதே
உன் தூது வாராமல்
நெஞ்சுக்குள் வேர்க்கின்றதே

நெஞ்சுக்குள் நீ போட்ட
மூக்குத்தி மின்னல்களே
வஞ்சிக்குள் உன் காதல்
எண்ணத்தின் பின்னல்களே..

ஓ ஓ …..

இது காதல் ராகமே
புரியாத மோகமே …

ஆ: ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ..

வானமும் பூந்தென்றலும்
வாழ்த்துதே மலர் தூவுதே
இது காதல் ராகமே
புரியாத மோகமே …

*********************************

ஆ: மேகத்தில் ஈரம் போல்
கண்ணுக்குள் நீர் ஏனம்மா..
பூமிக்குள் வைரம் போல்
நெஞ்சத்தில் நீ தானம்மா..

சோகங்கள் சொல்லாமல்
ஓடட்டும் காதல் பெண்ணே
சொந்தங்கள் போகாமல்
கூடட்டும் ஊடல் பெண்ணே..

ஓ ஓ …..

இது காதல் ராகமே
புரியாத மோகமே …

பெ: ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம் தினம் உனை எதிர்பார்த்து
மனம் ஏங்க வேண்டுமோ..

ஆ: வானமும் பூந்தென்றலும்
வாழ்த்துதே மலர் தூவுதே

பெ: இது காதல் ராகமே
புரியாத மோகமே …

இருவரும்: ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ..

பொத்திவச்ச மல்லிக மொட்டு - (மண் வாசனை)

படம்: மண் வாசனை
இசை: இளையராஜா

*********************************

பெண்:
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே...
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே

ஆண்:
ஆ..ஆ

பெண்:
ரொம்ப நாளனதே...

ஆண்:
ம்ம்..பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே...
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே...

*********************************

ஆண்:
மாலையிட காத்து அல்லி இருக்கு...
தாலிசெய்ய நேத்து சொல்லி இருக்கு...

பெண்:
இது சாயங்காலமா...மடிசாயும் காலமா...

ஆண்:
முல்ல பூச்சூடு...மெல்ல பாய்போடு

பெண்:
அட வாடகாத்து சூடு ஏத்துது

ஆண்:
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு

பெண்:
பேசிபேசி ராசியானதே...
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே...

*********************************

பெண்:
ஆத்துகுள்ள நேத்து ஒன்ன நெனச்சேன்...
வெக்க நேரம் போக மஞ்சக் குளிச்சேன்...

ஆண்:
கொஞ்சம் மறஞ்சு பாக்கவா
இல்ல முதுகு தேய்க்கவா...

பெண்:
அது கூடாது...இது தாங்காது...

ஆண்:
சின்ன காம்புதானே பூவதாங்குது...

பெண்:
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு

ஆண்:
பேசிபேசி ராசியானதே...
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே...

பெண்:
ஆளானதே ரொம்ப நாளனதே...

*********************************

Thursday, February 14, 2019

தேடும் கண் பார்வை - (மெல்ல திறந்தது கதவு)

படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...
பெண்:
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...
ஆண்:
தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...

*********************************

ஆண்:
காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
பெண்:
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
ஆண்:
கனிவாய்... மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...
பெண்:
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

*********************************

ஆண்:
தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
பெண்:
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
ஆண்:
பிரிந்தோம்... இணைவோம்...
பெண்:
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...
ஆண்:
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
பெண்:
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
ஆண்:
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
பெண்:
வெறும் மாயமாகுமோ...
ஆண்:
தேடும் கண் பார்வை தவிக்க...
பெண்:
துடிக்க...

*********************************

Wednesday, February 13, 2019

பூ பூ பூ பூ பூத்த சோலை - (புது நெல்லு புது நாத்து)

படம்: புது நெல்லு புது நாத்து
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பெண்:
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
ஆண்:
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பெண்:
பூ பூ பூ பூஜை தினம்
ஆண்:
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்
பெண்:
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

*********************************

பெண்:
காற்றினில் காண மழை
கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாச வலை
பல விதத்தில் பாடுது பாவை நிலை
ஆண்:
மூச்சினில் ஓடிய நாதமென
முழுவதும் கீதமென
பெண்:
முடிமுதல் ஆதி வரை மோகமென
தொடர்கிற தாகமென
ஆண்:
பார்த்தொரு பார்வையில் பாடல் எழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பெண்:
பாராத விழி ஏங்கிட ஏங்கிட
பாடலை பாடி வர
பல சுகம் பெற
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
ஆண்:
பூ பூ பூ பூல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பெண்:
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
ஆண்:
பூ பூ பூ பூஜை தினம்
பெண்:
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்

ஆண்:
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

*********************************

ஆண்:
நேற்றொரு கோலமடி
நேசமிது போட்டது பாலமடி
ஏற்றுது பாரமடி
இரு விழிகள் எழுதிய கோலமடி
பெண்:
இரவுகள் முழுவதும் தலைவன் மடி
இனிமைகள் இணைந்த படி
ஆண்:
உறவுகள் உணர்வுகள் உயர்ந்த படி
உடலது நனைந்த படி
பெண்:
வார்த்தையில் கூடிய வாசனையே
வந்தனை உன் துணை எந்தனையே
ஆண்:
வாடாத ஒரு வாலிபம் வாலிபம்
வாசலில் வந்த படி
வரம் கொடுத்தது
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பெண்:
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
ஆண்:
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பெண்:
பூ பூ பூ பூஜை தினம்
ஆண்:
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்
பெண்:
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

*********************************

Tuesday, February 12, 2019

மணியே மணிக்குயிலே - (நாடோடித் தென்றல்)

படம்: நாடோடித் தென்றல்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
கொடியே கொடிமலரே கொடியிடையின் மணியழகே
(சிரிப்பு)


ஆண்:
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
கொடியே கொடிமலரே கொடியிடையின் நடையழகே
தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

பெண்:
ஓ ஓ ஓ ஓ ஓ
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே

ஆண்:
கொடியே கொடிமலரே கொடியிடையின் நடையழகே

*********************************

ஆண்:
பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே
வண்ணமயில் போல வந்த பாவையே

பெண்:
எண்ண இனிக்கும் நிலையே இன்பம் கொடுக்கும் கலையே
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே யே யே யே

ஆண்:
கண்ணிமையில் தூண்டிலிட்டு காதல்தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும் ஏந்திழையே

பெண்:
பெண்ணிவளை ஆதரித்து பேசித்தொட்டுக் காதலித்து
இன்பம்கொண்ட காரணத்தால் தூங்கலையே

ஆண்:
சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன் துடியிடையில் பாசம் வைத்தேன்
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

பெண்:
ஓ ஓ ஓ ஓ ஓ
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே

ஆண்:
கொடியே கொடிமலரே கொடியிடையின் நடையழகே

பெண்:
தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும்

ஆண்:
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

*********************************

பெண்:
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண்:
கண்ணிமைகளை வருத்தி கனவுகளைத் துரத்தி
மென்மனதினால் முடித்த மூக்குத்தி

ஆண்:
என்னுயிரிலே ஒருத்தி கண்டபடி எனைத் துரத்தி
அம்மனவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி

பெண்:
கோடிமணி ஓசை நெஞ்சில் கூடிவந்துதான் ஒலிக்க
ஓடிவந்து கேட்கவரும் தேவதைகள்

ஆண்:
சூடமலர் மாலை கொண்டு தூபமிட்டு தூண்டிவிட்டு
கூடவிட்டு வாழ்த்தவரும் வானவர்கள்

பெண்:
அந்தி வரும் நேரமம்மா ஆசைவிளக்கேற்றுதம்மா

ஆண்:
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

பெண்:
ஓ ஓ ஓ ஓ ஓ
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும்

ஆண்:
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

பெண்:
ஓ ஓ ஓ ஓ ஓ
நானன நான நான நா
ஓ ஓ ஓ ஓ ஓ
நானன நான நான நா

*********************************

சந்தன மார்பிலே - (நாடோடித் தென்றல்)

படம்: நாடோடித் தென்றல்
இசை: இளையராஜா

*********************************

குழு : ஓ  ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ

பெண் : சந்தன மார்பிலே
குங்குமம் சேர்ந்ததே
குழு : ஓ மதி ஓ மதி

பெண் : மங்கள நேரமே
இங்கொறு யாகமே
குழு : ஓ மதி ஓ மதி

பெண் : நாதங்கள் சாட்சி
வேதங்கள் சாட்சி..ஓ…

ஆண் : சந்தன மார்பிலே
குங்குமம் சேர்ந்ததே
குழு : ஓ மதி ஓ மதி

ஆண் : மங்கள நேரமே
இங்கொறு யாகமே
குழு : ஓ மதி ஓ மதி

*********************************

ஆண் : பல உலகம் போகும் யாத்திரை
நிழலுலகில் நேர்ந்ததே
பெண் : கனவுலகில் விழுந்த ஓர் பிறை
நினைவுழகில் விழுகுதே

ஆண் : வேள்வி வேள்வி காமதேவனே
தோல்வி தோல்வி காதல் போரிலே
வேள்வி வேள்வி காமதேவனே
தோல்வி தோல்வி காதல் போரிலே

பெண் : நாதங்கள் சாட்சி
வேதங்கள் சாட்சி..ஓ…

ஆண் : சந்தன மார்பிலே
குங்குமம் சேர்ந்ததே
குழு : ஓ மதி ஓ மதி

பெண் : மங்கள நேரமே
இங்கொறு யாகமே
குழு : ஓ மதி ஓ மதி

*********************************

குழு : ம் ம்ம் ம் ம் ம் ம் ம்ம்

பெண் : அலையலையாய் காதல் சங்கொலி
நாடு இரவில் முழங்குதே
ஆண் : மணி மணியாய் நாத கிண்கிணி
புது கவிதை பொழியுதே

பெண் : வேதம் வேதம் காதல் வேதமே
ஒது ஒது காம தேவனே
வேதம் வேதம் காதல் வேதமே
ஒது ஒது காம தேவனே

ஆண் : நாதங்கள் சாட்சி
வேதங்கள் சாட்சி..ஓ…

பெண் : சந்தன மார்பிலே
குங்குமம் சேர்ந்ததே
குழு : ஓ மதி ஓ மதி

ஆண் : மங்கள நேரமே
இங்கொறு யாகமே
குழு : ஓ மதி ஓ மதி

பெண் : நாதங்கள் சாட்சி
வேதங்கள் சாட்சி..ஓ…

ஆண் : சந்தன மார்பிலே
குங்குமம் சேர்ந்ததே
குழு : ஓ மதி ஓ மதி

பெண் : மங்கள நேரமே
இங்கொறு யாகமே
குழு : ஓ மதி ஓ மதி

*********************************

Sunday, February 10, 2019

தில் தில் தில் தில் மனதில் - (மெல்ல திறந்தது கதவு)

படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
தில் தில் தில் தில்
மனதில்
ஒரு தல் தல் தல் தல்
காதல்

ஆண்:
தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
ஆஹா தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்

பெண்:
ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆண்:
ஆடல் பாடல் கூடல்

பெண்:
ஆஆஆஆ
தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்

*********************************

பெண்:
வளர்ந்த நாள் முதல் கார்குழலும்
அழைக்குதே உன்னைப் பூச்சூட
ஆண்:
மயக்கம் ஏனடி பூங்குயிலே
தவிக்கிறேன் அடி நான் கூட
பெண்:
விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்
ஆண்:
கைகள் படாத இடம்தான் இப்போது
ஆசை விடாத சுகம்தான் அப்போது
பெண்:
ஏக்கம் ஏதோ கேட்கும்

ஆண்:
ம்ம்ம்
தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

பெண்:
ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆண்:
ஆடல் பாடல் கூடல்

பெண்:
ஆ..
தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

*********************************

ஆண்:
மழைக்கு ஏங்கிய மாந்தளிரே
உனக்கு நான் சிறு தூறல்தான்
பெண்:
வியர்த்து வாடிய மெய்சிலிர்க்க
உனக்கு நான் மழைச்சாரல்
ஆண்:
அடுத்த கட்டம் நடப்பதெப்போ
எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ
பெண்:
மாலை இடாமல் வசந்தம் வராது
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது
ஆண்:
போதும் போதும் ஊடல்

பெண்:
ஆஆஆஆ
தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
ஆண்:
ஆஹா தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்

பெண்:
ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆண்:
ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

பெண்:
ஆடல் பாடல் கூடல்

*********************************

Saturday, February 9, 2019

தென்றல் தான் திங்கள் தான் - (கேளடி கண்மணி)

படம்: கேளடி கண்மணி
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
தென்றல் தான் திங்கள் தான்
நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் 
காதல் சந்தம்
ஆடும் காற்று  நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட

பெண்:
தென்றல் தான் திங்கள் தான்
நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் 
காதல் சந்தம்

*********************************

ஆண்:
காவேரி ஆற்றின் மீனிங்கே
காதோடு மோதும் ஆனந்தம்
பெண்:
தீராத காதல் தேனிங்கே
பாட்டோடு பாட்டாய் ஆரம்பம்
ஆண்:
பாராமலே போராடினேன்
தாளாத மோகம் ஏற
பெண்:
தூங்காமலே நான் வாடினேன்
சேராத தோள் தான் சேர
ஆண்:
தாவிடும் என் நெஞ்சத்தின் சந்தங்கள்
பாடிடும் உன்னை
பெண்:
தேடிடும் உன் நெஞ்சத்தின் மஞ்சத்தில் 
பாய்ந்திடும் என் எண்ணங்கள்
ஆண்:
நித்தம் நீ தித்தித்தாய்
பக்கம் தான் வா வா வா கூட 
பெண்:
தென்றல் தான் திங்கள் தான்
நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் 
காதல் சந்தம்
ஆடும் காற்று  நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட
ஆண்:
தென்றல் தான் திங்கள் தான்
நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் 
காதல் சந்தம்

*********************************

பெண்:
பூ மீது மோதும் தென்றல் தான்
பூமேனி சேர்ந்தால் தாங்காது
ஆண்:
பூவாடை மூடும் ஜாலத்தால்
பூபாளம் தானாய் தோன்றாது
பெண்:
நூலாடையின் மேலாடவும்
தேகம் தான் தீயாய் மாறும்
ஆண்:
தேனோடையில் நீராடவும்
மோகந்தான் மேலும் ஏறும்
பெண்:
தேடிடும் என் ராஜாவின் ரோஜாப்பூ
சேர்ந்திடும் உன்னை
ஆண்:
கேளடி என் ராஜாங்கம் நீதானே
சேரடி என் மன்றத்தில்
பெண்:
நித்தம் நீ தித்தித்தாய்
பக்கம் தான் வா வா வா கூட
ஆண்:
தென்றல் தான் திங்கள் தான்
நாளும் சிந்தும்
பெண்:
உன்னில் தான் என்னில் தான் 
காதல் சந்தம்
ஆண்:
ஆடும் காற்று  நெஞ்சில் தாளம் போட
பெண்:
ஆசை ஊற்று காதில் கானம் பாட
ஆண்:
நெஞ்சோடு தான் வா வா வா கூட
தென்றல் தான் திங்கள் தான்
நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் 
காதல் சந்தம்

*********************************

Friday, February 8, 2019

பூங்கொடிதான் பூத்ததம்மா - (இதயம்)

படம் :  இதயம்
இசை : இளையராஜா

*********************************

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா

*********************************

ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்
அதுதானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்

சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்
ஓ..ஓ..ஓ...ஓ...
ஓ...ஓ....ஓ...ஓ....ஓ...

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா

*********************************

தாய்கூட அழுகின்ற பி்ள்ளைக்குத்தானே
பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே
மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்குக் காதலென்ன
ஊமைக்குப் பாடலென்ன
ஓ..ஓ..ஓ...ஓ...
ஓ...ஓ....ஓ...ஓ....ஓ...

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா

*********************************

Thursday, February 7, 2019

ஏப்ரல் மேயிலே - (இதயம்)

படம் :  இதயம்
இசை : இளையராஜா

*********************************

ஏப்ரல் மேயிலே
பசுமையே இல்ல
காஞ்சு போச்சுடா
இந்த ஊரு பிடிக்கலே
உலகம் பிடிக்கலே
போரு போரு டா
இது தேவையா
அட போங்கய்யா ஜூன் ஜுலையா

பட்டாம்பூச்சிகள் பறக்குது பறக்குது
கண்ணாமூச்சிகள் நடக்குது நடக்குது
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே

ஏப்ரல் மேயிலே
பசுமையே இல்ல
காஞ்சு போச்சுடா
இந்த ஊரு பிடிக்கலே
உலகம் பிடிக்கலே
போரு போரு டா

*********************************

குர்தா மாக்சியும் சல்வார் கமீசும்
சுமந்த பெண்களே
எங்கே என்றுதான் இங்கே இன்றுதான்
வருந்தும் கண்களே
வீட்டில் நிற்கிற காவல்காரனும்
முறைச்சு பார்க்கிறான்
சோளகொல்லையின் பொம்மை போலவே
விரச்சு போகிறான்
டிரைவ் இன் ஹோட்டலும்
சாந்தோம் பீச்சும்
டல்லாய் தோன்றுதே பாருங்கள்
பன்னீர் பூக்களை பார்க்காதின்று
கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள்
நெஞ்சம் தாங்குமா
கண்கள் தூங்குமா
துன்பம் நீங்குமா

ஏப்ரல் மேயிலே
பசுமையே இல்ல
காஞ்சு போச்சுடா
இந்த ஊரு பிடிக்கலே
உலகம் பிடிக்கலே
போரு போரு டா

*********************************

காலேஜ் அழகியும் கான்வென்ட் குமரியும்
தேட்டர் போகிறார்
டாக்ஸி டிரைவரும் பாத்து பாத்து தான்
மீட்டர் போடுவார்
காலை மாலை தான் வேலை பார்ப்பவர்
மகிழ்ச்சி கொள்கிறார்
வாலைக்குமரிகள் சாலை கடக்கையில்
வாயை பிளக்கிறார்
ஸ்டெல்லா மேரிஸும் குயின் மேரிஸும்
தென்றல் வீசிடும் பூந்தோட்டம்
வஞ்சிப் பாவைகள் தோன்றும் போது
நெஞ்சம் போடுதே ஆட்டம்
எங்கள் பாடு தான் சக்க போடுதான்
படா ஜோரு தான்

ஏப்ரல் மேயிலே
பசுமையே இல்ல
காஞ்சு போச்சுடா
இந்த ஊரு பிடிக்கலே
உலகம் பிடிக்கலே
போரு போரு டா
இது தேவையா
அட போங்கய்யா
ஜூன் ஜுலையா

பட்டாம்பூச்சிகள் பறக்குது பறக்குது
கண்ணாமூச்சிகள் நடக்குது நடக்குது
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே

*********************************

Wednesday, February 6, 2019

கல்லுக்குள்ளே வந்த ஈரம் - (மனிதனின் மறுபக்கம்)

படம் : மனிதனின் மறுபக்கம்
இசை : இளையராஜா

*********************************

பெ: கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

பெ: கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன..
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன..
நீயென்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்
நீ தந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணா என்றென்றும்
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன..
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன..

*********************************

ஆ: வானத்தில் ஊஞ்சல்கட்டி
ஆடும் அந்த மேகம்
பூமிக்கு நீரைச்சிந்தும்
சொந்தம் என்னம்மா
நீயந்த வானம் இந்த
பூமி இங்கு நானே
நெஞ்சத்தின் தாகம்
என்று தீரும் சொல்லம்மா

பெ: காலங்கள் செல்ல செல்ல
ஆயுள் நின்று போகும்
ஆனாலும் காதல் என்னும்
சொந்தம் என்றும் வாழும்
நீலம்பூத்த கண்கள் ரெண்டும்
உன்னை வைத்து கொள்ளட்டும்
நீயும் நானும் மாலை சூடும்
காலம் எந்த காலம் இந்த
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

ஆ: நீயென்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்
நீ தந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணே என்றென்றும்
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

*********************************

பெ: பூவுக்கு தாலி கட்ட
போகும் தென்றல் காற்று
போகட்டும் நீயும் நின்று
வாழ்த்துச் சொல்லி போ
காதுக்குள் நாளை அந்த
மேளச்சத்தம் கேட்கும்
கையோடு நீயும் கொஞ்சம்
மாலை கட்டித்தா

ஆ: தாளத்தை தள்ளி வைத்து
ராகம் எங்கு போகும்
பாசத்தை தள்ளி வைத்து
ஜீவன் எங்கு வாழும்
பொன்னில் பாதி
பூவில் பாதி
பெண்ணின் வண்ணம்
நான் கண்டேன்
காதல் வேதம் கண்ணில் ஓதும்
கண்ணே கட்டிப்பொன்னே இந்த
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

பெ: நீயென்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்
நீ தந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணா என்றென்றும்
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன

ஆ: நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

*********************************

Tuesday, February 5, 2019

கற்பூர பொம்மை ஒன்று- (கேளடி கண்மணி)

படம்: கேளடி கண்மணி
இசை: இளையராஜா

*********************************

ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கைகோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே
சபையேறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கைகோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே
சபையேறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று

*********************************

பூந்தேரிலே நீயாடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே
சபையேறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று

*********************************

தாயன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல யார் வந்தாலுமே
உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் சென்தேன்குழல்
முத்தே என் முத்தாரமே
சபையேறும் பாடல் நீ பாடம்மா  நீ பாடம்மா 

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கைகோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே
சபையேறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று

*********************************

நீ பாதி நான் பாதி கண்ணே - (கேளடி கண்மணி)

படம்: கேளடி கண்மணி
இசை: இளையராஜா

*********************************

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
ஆண் : நீ இல்லையேல் இனி நான் இல்லையே உயிர் நீயே
பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

*********************************

பெண் : வானப்பறவை வாழ நினைத்தால்
  வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
ஆண் : கானப்பறவை பாட நினைத்தால்
  கையில் விழுந்த பருவப்பாடல்
பெண் : மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த
  பொட்டுக்கொரு அர்த்தம் இருக்கும் உன்னாலே
ஆண் : மெல்லச் சிரிக்கும் உன் முத்து நகை
  ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே
பெண் : மெய்யானது உயிர் மெய்யாகவே தடை ஏது

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

*********************************

ஆண் : இடது விழியில் தூசி விழுந்தால்
  வலது விழியும் கலங்கி விடுமே
பெண் : இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
  இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
ஆண் : சொர்க்கம் எதற்கு என் பொன்னுலகம்
  பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா
பெண் : இந்த மனம்தான் என் மன்னவனும்
  வந்துலவும் நந்தவனம்தான் அன்பே வா
ஆண் : சுமையானது ஒரு சுகமானது சுவை நீதான்

பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
ஆண் : நீ இல்லையேல் இனி நான் இல்லையே உயிர் நீயே
பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

*********************************

Saturday, February 2, 2019

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - (இதயம்)

படம் :இதயம்
இசை : இளையராஜா

*********************************

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ் நாள் தோறும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா

*********************************

ஆறாத ஆசைகள் தோன்றும் என்னை தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்

அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்

மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் என்னாளும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ் நாள் தோறும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா

*********************************

யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ காற்று பனி காற்று

வினா தாள் போல் இங்கே கனா காணும் காளை
விடை போலே அங்கே நடை போடும் பாவை

ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள் இங்கு என்னாளோ

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா

வாழ் நாள் தோறும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா

என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா

*********************************

Friday, February 1, 2019

ஒரு ராகம் பாடலோடு - (ஆனந்த ராகம்)

படம்: ஆனந்த ராகம்
இசை: இளையராஜா

*********************************

ஆ.ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்..
பெ.ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...

ஆ.ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

பெ.தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது

ஆ.ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

*********************************

பெ.மாலை நேரக் காற்றில்
மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடினாலும்
என்னை ஆளும் தெய்வம் நீயே

ஆ.காதல் தேவி எங்கே
தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை
நேரில் வந்த நேரமே
என்னுள்ளம் இன்று வானில் போகுதே

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

*********************************

ஆ.ஏதோ நூறு ஜென்மம்
ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்
வாழும் காலம் யாவும்
துணையாக வேண்டும் என்றும்

பெ.காதல் தந்த பந்தம்
காதல் எனும் கீதம்
ஜீவனாதம் கேட்குதே
சேர்ந்து இன்பம் கூட்டுதே
வராத காலம் வந்து சேர்ந்ததே

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

ஆ.தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது

(இரு)ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

ஶ்ரீரங்க ரங்கநாதனின் - (மகாநதி)

படம்: மகாநதி
இசை: இளையராஜா

*********************************

பெண்: கங்கா ஷங்காஷ காவேரி
ஶ்ரீரங்கேச மனோஹரி
கல்யாணகாரி கலுஷாரி
நமஸ்தேஸ்து சுபாச்சரி

ஆ... ஆஆ.ஆ.ஆ..ஆ..ஆ.ஆ....
ஆ அ ஆ அ ஆ அ ஆஆ அஆ.

ஶ்ரீரங்க ரங்கநாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஶ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

ஶ்ரீரங்க ரங்கநாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஶ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீசூடி

இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை
நீசூடி தெய்வப்பாசுரம் பாடடி
ஶ்ரீரங்க ரங்கநாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஶ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

*********************************

பெண்: கொள்ளிடம் நீர்மீது
நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லிச் சாமரம் வீசும்
அந்நாளில் சோழமன்னர்கள்
ஆக்கிவைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன்
கோயில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வப்
பூந்தமிழ்ப் பாயிரம்......
ஶ்ரீரங்க ரங்கநாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஶ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை
நீசூடி தெய்வப்பாசுரம் பாடடி
ஶ்ரீரங்க ரங்கநாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஶ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

*********************************

ஆண்: கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகம் ஆகும்
கங்கையில் மேலான காவிரி தீர்த்தம்
மங்கள நீராட முன்வினை தீர்க்கும்
நீர்வண்ணம் எங்கும் மேவிட
நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர்வண்ணம் என்ன கூறுவேன் தெய்வலோகமே தானடி
வேறெங்கு சென்றபோதிலும்
இந்த இன்பங்கள் ஏதடி
ஶ்ரீரங்க ரங்கநாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஶ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென்கங்கை
நீராடித் தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை
நீசூடி தெய்வப்பாசுரம் பாடடி
ஸ்ரீரங்க ரங்கநாதனின்
பாதம் வந்தனம் செய்யடி

கோரஸ்: ஶ்ரீரங்கரங்கநாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஶ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

*********************************