படம்: ப்ரியங்கா
இசை: இளையராஜா
*********************************
ஆண்:
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே
*********************************
கோரஸ்:
ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
ஹோயகோய ஹோயே
ஹோயகோய ஹோயே
ஆண்:
உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே
ஓயாமலே என்னைப் பந்தாடுதே
உன் பூ முகம் கண்ணில் நின்றாடுதே
நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே
படித்தால் இனித்திடும் புதினம்
உன்னை நான் மறப்பது கடினம்
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
வலைக்குள் தவித்திடும் தவிப்பு
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால் மேனி
சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே
*********************************
பெண்:
ஆஹா ஓஹோ ஓஹோ ஹோ
ஓஹோ ஹோஹோஹோஹோ
ஓஹோ ஹோஹோஹோஹோ
ஆ ஹா ஆ ஹா
ஆண்:
செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே
கூந்தல் பனை தோரணம் ஆனதே
பூ மாலையாய் தோன்றும் பூஞ்சோலையே
எங்கெங்கும் கல்யாணக் கோலங்களே
மண நாள் நினைவுகள் மலரும்
மனதில் மலையென வளரும்
வருவேன் வருவேன் கிளியே
விழிக்குள் இருக்கும் விழியே
இணைந்தால் இருவர் இணைந்தால்
இன்ப வரவும் உறவும் சுகமே
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
வன குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே
*********************************