தமிழில் தேட.....

Sunday, July 21, 2019

கண் மலர்களின் அழைப்பிதழ் - தைப்பொங்கல் பாடல் வரிகள்



படம்: தைப்பொங்கல்
இசை: இளையராஜா

******************************************

ஆண்: கண் மலர்களின் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள் இளமையின் கனவுகள் தான்
காண்போமே சேர்ந்தே நாமே

கண் மலர்களின் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்

******************************************

பெண்: நானாளும் மனம் பூவோ
நீ நாளும் தமிழ் பாவோ

ஆண்: பூவாடும் விழி தானோ
நீ பாட மொழி ஏனோ

பெண்: என்ன இன்று (ஆண்: ஆஹா)
கண்ணில் என்னை வென்று (ஆண்: ஆஹா)
கன்னம் எண்ணுவதோ

ஆண்: என்னக்கென ஒரு கனமோ
விளக்கங்கள் தரும் மனமோ
நமக்கென விழித்திடும் மலர்களோ மனங்களோ

பெண்: கண் மலர்களின் அழைப்பிதழ்
ஆண்: லலல லலலா
பெண்: பொன் இதழ்களின் சிறப்பிதழ்
ஆண்: லல லலலா

******************************************

ஆண்: தாம்பூல நிறம் தானே
மாம்பூவின் இளம் மேனி

பெண்: ஆஆ தாங்காது இனி மேலே
தூங்காது மனம் நாளை

ஆண்: கண்ணில் என்ன (பெண்: லால)
மின்னல் கண்ட பின்னும் (பெண்: லால)
இன்னும் மின்னுவதோ

பெண்: உனக்கென்று ஒரு மனமோ
நமக்கென்று திருமணமோ
இணைக்கின்ற இயற்கையின் உறக்கமோ
மயக்கமோ

ஆண்: கண் மலர்களின் அழைப்பிதழ்
பெண்: லல லலா லல லலா
ஆண்: பொன் இதழ்களின் சிறப்பிதழ்
பெண்: லல லலா லல லலா

பெண்: இனி வரும் இரவுகள் இளமையின்
கனவுகள் தான் ( overlap ஆண்: லா)
இருவரும்: காண்போமே சேர்ந்தே நாமே

பெண்: லலலல லல லலா
ஆண்: லலல லலலா
பெண்: லலலல லல லலா
ஆண்: லலல லலலா

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...