படம்: பாட்டுப் பாடவா
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி
அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
ஆண்:
நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி
அம்பில் எனை தாக்காதே
******************************************
ஆண்:
நாணம் எல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்தால்
நான் அணைப்பேன் உன்னை பூங்கரத்தால்
பெண்:
ஏகாந்த வேளையில் ஏன் இந்த ஊடல்கள்
ஆரம்பம் ஆனதோ ஆனந்த தேடல்கள்
ஆண்:
தேன் கூட்டில் உள்ள தேன்
யாவும் மனம் வேண்டிடாதோ
நூல் கூட இடை நுழையாமல் எனைச்
சேர்ந்திடாதோ சொல் நில்
பெண்:
நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி
அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
நில் நில் நில் பதில் சொல்
சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி
அம்பில் எனை தாக்காதே
******************************************
பெண்:
ஓவியமாய் உன்னை தீட்டி வைத்தேன்
உள் மனதில் அதை மாட்டி வைத்தேன்
ஆண்:
மீன் விழுந்த கண்ணில்
நான் விழுந்தேன் அன்பே
ஊர் மறந்து எந்தன் பேர் மறந்தேன் அன்பே
பெண்:
கூ கூ கூ என கை
கோர்த்து குயில் கூவிடாதோ
பூ பூத்து பனிப்பூ பூத்து
மடி தாவிடாதோ சொல்
பெண்:
நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல் எனை வாட்டாதே
ஆண்:
வில் வில் வில் உன்
விழி அம்பில் எனை தாக்காதே
பெண்:
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
ஆண்:
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
பெண்:
நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல் எனை வாட்டாதே
ஆண்:
வில் வில் வில் உன்
விழி அம்பில் எனை தாக்காதே
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...