தமிழில் தேட.....

Friday, July 19, 2019

ராத்திரியில் பூத்திருக்கும் - தங்கமகன் பாடல் வரிகள்



படம்: தங்கமகன்
இசை: இளையராஜா

******************************************

ஆண்: ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூது விடும் கண்ணோ

******************************************

பெண்: வீணையென்னும்
மேனியிலே தந்தியினை மீட்டும்

ஆண்: கை விரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

பெண்: வீணையென்னும்
மேனியிலே தந்தியினை மீட்டும்

ஆண்: கை விரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

பெண்: வானுலகே பூமியிலே
வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே
வந்தது போல் காட்டும்

ஆண்: ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும்
மோதும் ஓடும் புதிய அனுபவம்
ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர
தூதுவிடும் கண்ணோ

******************************************

ஆண்: மாங்கனிகள்
தொட்டிலிலே தூங்குதடி அங்கே

பெண்: மன்னவனின் பசியாற
மாலையிலே பரிமாற

ஆண்: மாங்கனிகள்
தொட்டிலிலே தூங்குதடி அங்கே

பெண்: மன்னவனின் பசியாற
மாலையிலே பரிமாற

ஆண்: வாழையிலை நீர்
தெளித்து போடடி என் கண்ணே
வாழையிலை நீர் தெளித்து
போடடி என் கண்ணே

பெண்: நாதசுரம் ஊதும் வரை
நெஞ்சம் இன்னும் கொஞ்சம்
பொறுமை அவசியம்
ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ

ஆண்: சேலைச் சோலையே
பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே
பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்

ஆண்: ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ

பெண்: ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...