தமிழில் தேட.....

Tuesday, July 30, 2019

பூங்காற்று உன் பேர் சொல்ல - வெற்றி விழா பாடல் வரிகள்



படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா

******************************************

ஆண் :
பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று

பெண் :
நீரூற்று என் தோள் கொஞ்ச
பார்த்தேனே இன்று

ஆண் :
தீர்த்தக்கரை ஓரத்திலே

பெண் :
தேன் சிட்டுகள் உள்ளத்திலே

ஆண் : கல்யாண வைபோகம் தான்

பெண் : நீரூற்று என் தோள் கொஞ்ச
பார்த்தேனே இன்று

குழு :
லா லா லா லா லா
லா லா லா லா லா
லா லா லா லா லா
லால லால

******************************************

ஆண் :
மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு
மோகப் பண் பாடுதே
மேலைக் காற்றோடு கை சேர்த்து
நாணல் காதல் கொண்டாடுதே

பெண் :
ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈரச் சிறகோடு இசைபாடித் திரியும்
நேரம் இது வல்லவா

ஆண் :
ஏதேதோ எண்ணம் தோன்ற
ஏகாந்தம் இங்கே

பெண் :
நான் காணும் வண்ணம் யாவும்
நீதானே அன்பே

ஆண் : வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்

பெண் : ஆசைகள் ஈடேறக் கூடும்

ஆண் :
பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று


******************************************

பெண் :
ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடு தான்
தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்

ஆண் :
நீல வான் கூட நிறம் மாறிப் போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா

பெண் :
ஓயாமல் உன்னைக் கொஞ்சும்
ஊதாப்பூ வண்ணம்

ஆண் :
ராஜாவின் ஆ முத்தம் கொள்ளும்
ரோஜாப்பூ கன்னம்

பெண் : வாடை தீண்டாத வாழைத் தோட்டம்

ஆண் : ஆனந்த எல்லைகள் காட்டும்

ஆண் :
பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று

பெண் :
நீரூற்று என் தோள் கொஞ்ச
பார்த்தேனே இன்று

ஆண் :
தீர்த்தக்கரை ஓரத்திலே

பெண் :
தேன் சிட்டுகள் உள்ளத்திலே

ஆண் :
கல்யாண வைபோகம் தான்
பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...