தமிழில் தேட.....

Tuesday, July 2, 2019

மயிலே மயிலே - கடவுள் அமைத்த மேடை பாடல் வரிகள்



படம்: கடவுள் அமைத்த மேடை
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே மயிலே மயிலே

பெண்:
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே மயிலே மயிலே

******************************************

ஆண்:
தென்றல் தாலாட்ட தென்னை
இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை
இருக்க அது தன்னை மறக்க

பெண்:
நீ அணைக்க நான் இருக்க
நாள் முழுக்க தேன் அளக்க

ஆண்:
கனி வாய் மலரே பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா நான் தொடவா

பெண்:
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஆண்:
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
பெண்:
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
ஆண்:
மயிலே மயிலே மயிலே மயிலே

******************************************

பெண்:
மஞ்சள் மாங்கல்யம் மன்னன்
வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன்
வழங்க கெட்டி மேளம் முழங்க

ஆண்:
பூங்குழலில்
தேனருவி தோளிரண்டும் நான் தழுவி

பெண்:
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய் நான் வருவேன்

ஆண்:
மயிலே மயிலே உன் தோகை இங்கே
பெண்:
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஆண்:
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
பெண்:
மயிலே மயிலே
மயிலே மயிலே

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...