தமிழில் தேட.....

Sunday, July 28, 2019

தேன் பூவே பூவே வா - அன்புள்ள ரஜினிகாந்த் பாடல் வரிகள்



படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம்
நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம்
நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்

பெண்:
உனை நினைத்தேன்
பூவே பூவே வா தென்றல் தேட

******************************************

ஆண்:
பனி விழும் புல்வெளியில்
தினம்தினம் பொன் பொழுதில்

பெண்:
கனி விழும் உன் மடியில்
கலந்திடும் உன் உறவில்

ஆண்:
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது

பெண்:
ஹோய் கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது

ஆண்:
தேவதேவி என்னோடு தான்

பெண்:
உனை நினைத்தேன்
பூவே பூவே வா தென்றல் தேட

ஆண்:
பூந்தேனே தேனே வா தாகம் கூட,,,,,

******************************************

பெண்:
இடையினில் உன் விரல்கள்
எழுதிடும் என் சுகங்கள்

ஆண்:
அணைக்கையில் உன் உடலில்
அழுந்திடும் என் நகங்கள்

பெண்:
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது

ஆண்:
ஹாஹாகாதல்
யோகம்தான் கட்டில் மீது

பெண்:
காணவேண்டும் உன்னோடு தான்

ஆண்:
உனை நினைத்தேன்
பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட

பெண்:
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்,

ஆண்:
உனை நினைத்தேன்
பூவே பூவே வா

பெண்:
லாலாலா ஆ லா ஆ
இருவரும்: லாலாஆ லாலாலா ஆ

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...