தமிழில் தேட.....

Friday, March 29, 2019

பேரைச் சொல்லவா அது நியாயம் - (குரு)



படம்: குரு
இசை: இளையராஜா

*********************************

பெண் : பேரைச் சொல்லவா அது நியாயம் ஆகுமா
பேரைச் சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஸ்ரீ ராகம்
என்னாளுமே நீயல்லவா
என் கண்ணனே என் மன்னவா

ஆண் : தங்க மாங்கனி என் தர்ம தேவதை
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
நான் பாடும் ஸ்ரீ ராகம் என்னாளுமே
நீயல்லவா என் பூங்கொடி இதை சொல்லவா

பெண் : பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா

*********************************

ஆண் : இடை ஒரு கொடி இதழ் ஒரு கனி
இன்பலோகமே உன் கண்கள் தானடி

பெண் : மலரது முகம் அணைவது சுகம்
ஒன்று போதுமே இனி உங்கள் தேன் மொழி

ஆண் : நான் தேடினேன் பூந்தோட்டமே வந்தது

பெண் : நான் கேட்டது அருகே நின்றது
ஆண் : இனிமேல் பறக்கட்டும் பறவைகள் இரண்டும்

பெண் : பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
ஆண் : ப ப ப பா ப ப ப பா

*********************************

பெண் : புது மழை இது சுவை தரும் மது
வைர பூச்சரம் அது இதழில் வந்தது

ஆண் : இனியது இது கனிந்தது அது
இளமை என்பது உன் உடலில் உள்ளது

பெண் : நீ போட்டது என் கண்ணிலே மந்திரம்

ஆண் : நான் பார்த்தது அழகின் ஆலயம்

பெண் : இதுதான் உலகத்தை ரசிக்கின்ற பருவம்

ஆண் : தங்க மாங்கனி என் தர்ம தேவதை

பெண் : ப ப ப பா ப ப ப பா

*********************************

ஆண் : நவமணி ரதம் நடை பெறும் விதம்
நமது கோவிலில் இனி நல்ல உற்சவம்

பெண் : கவிதைகள் தரும் கலை உந்தன் வசம்
கங்கை ஆறு போல் இனி பொங்கும் மங்களம்

ஆண் : ஓராயிரம் தேனாறுகள் வந்தன

பெண் : நீராடுவோம் தினமும் நீந்துவோம்

ஆண் : சரிதான் நடக்கடும் இளமையின் ரசனை

பெண் : பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா

ஆண் : தங்க மாங்கனி என் தர்ம தேவதை

பெண் : நான் பாடும் ஸ்ரீ ராகம்
லா ல லா லா ல லா

ஆண் : லா ல லா லா ல லா
ப ப ப பா ப ப ப பா

*********************************

Thursday, March 28, 2019

தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - (தூறல் நின்னு போச்சு)



படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா

*********************************

பெண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

பெண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

*********************************

ஆண் : காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி
உன்சேலையில் பூவேலைகள்
உன்மேனியில் பூஞ்சோலைகள்

பெண் : அந்தி பூவிரியும் அதன் ரகசியம்
சந்தித்தால் தெரியும்
இவளின் கனவு தணியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்

ஆண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

*********************************

பெண் : ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது

ஆண் : ல ல ல ல லால்ல லால்ல லால்லா லால்லா

பெண் : கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளில் நீராடினாள்

ஆண் : ரா ரா ரர ரா ரா… ரா ர ரா ர ரா ரா

ஆண் : அன்பே ஆடை கொடு எனை
அனுதினம் அள்ளிச் சூடி விடு

பெண் : இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு

ஆண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

பெண் : மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி

இருவரும்: தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

*********************************

Monday, March 25, 2019

இன்னும் என்னை என்ன செய்ய - (சிங்காரவேலன்)



படம்: சிங்காரவேலன்
இசை: இளையராஜா

*********************************

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய
போகிறாய் அன்பே அன்பே யே
என்னை கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே
கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் சிங்கார லீலா

இன்னும் என்னை என்ன செய்ய
போகிறாய் அன்பே அன்பே யே
என்னை கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே

*********************************

ஆண் : பாடி வரும் வான் மதியே
பார்வைகளின் பூம்பணியே
தேவ சுக தேன் கனியே மோக பரி பூரணியே

பெண் : பூவோடு தான் சேரும்
இளங்காற்று போராடும் போது
சேராமல் திராது இடம்
பார்த்து தீர்மானம் போடு

ஆண் : புது புது விடுகதை
தொடதொட தொடர்கிறதே

பெண் : இன்னும் என்னை என்ன
செய்ய போகிறாய் அன்பே அன்பே
என்னை கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே
உன்னை சேர்ந்தாள் பாவை
இன்னும் அங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்கர வேலா

*********************************

பெண் : தேன் கவிதை தூது விடும்
நாயகனே மாயவனே
நூலூடையாய் ஏங்க விடும்
வான் அமுது சாகரனே

ஆண் : நீதானே நான் பாடும் சுகமான ஆகாசவாணி
பாடமல் கூடமல் உறங்காது ரீங்கார தேனீ

பெண் : தடைகளை கடந்தினி
மடைகளை திரந்திட வா

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய
போகிறாய் அன்பே அன்பே யே

பெண் : அஹா என்னை கண்டால்
என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே

ஆண் : கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்

பெண் : சொல்லு சொல்லு சிங்கரவேலா

ஆண் : இன்னும் என்னை என்ன
செய்ய போகிறாய் அன்பே அன்பே

பெண் : என்னை கண்டால்
என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே அன்பே

*********************************

சிந்திய வெண்மணி சிப்பியில் - (பூந்தோட்டக் காவல்காரன்)

படம்: பூந்தோட்டக் காவல்காரன்
இசை: இளையராஜா

*********************************

ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம்
பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு

*********************************

ஆண் : பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்

பெண் : அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்

ஆண் : இன்றைக்கும் என்றைக்கும்
நீ எந்தன் பக்கத்தில்

பெண் : இன்பத்தை வர்ணிக்கும்
என்னுள்ளம் சொர்க்கத்தில்

ஆண் : மெல்லிய நூலிடை வாடியதேன்
மன்மத காவியம் மூடியதேன்

இருவரும்: அள்ளியும்
கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை பாடியதேன்

ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம்
பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

*********************************

ஆண் : தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே

பெண் : காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே

ஆண் : வீட்டுக்கும் நாட்டுக்கும்
நான் பாடும் பாட்டுக்கும்

பெண் : எத்திக்கும் தித்திக்கும்
என் இன்ப கூட்டுக்கும்

ஆண் : என் மகன் காவிய நாயகனே
என் உயிர் தேசத்து காவலனே

இருவரும்: வாடிய பூமியில்
கார்முகிலாய் மழை தூவிடும்
மானிடன் என் மகனே

ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம்
பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

*********************************

Sunday, March 24, 2019

ஆறடிச் சுவரு தான் ஆசையைத் தடுக்குமா - (இது நம்ம பூமி)



படம்: இது நம்ம பூமி
இசை: இளையராஜா

*********************************

ஆண் : ஆறடிச் சுவரு தான் ஆசையைத் தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே
காட்டாறும் இளங்குயில்களின்
பாட்டாறும்
காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ
ஆறடிச் சுவரு தான் ஆசையைத் தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

*********************************

ஆண் : ஆழ்கடல் அலைகளும்
ஓயுமோ பிறர் ஆணையால் ஓ 
பூமியில் மலைகளும்
சாயுமோ வெறும் சூறையால் ஓ
காவல் தனை தாண்டியே
காதல் இசை தீண்டுமே
நீயெங்கே ஓ ஓ  ஓ ஓ 
நான் அங்கே ஓஓ  ஓஓ  ஓஓ 

ஆறடிச் சுவரு தான் ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

*********************************

பெண் : ராத்திரி வலம் வரும்
பால் நிலா என்னை வாட்டுதே ஓ 
நேத்திரம் துயில் கொள்ளும்
வேளையில் அனல் மூட்டுதே ஓ 
வாடும் மலர் தோரணம்
நீயும் இதன் காரணம்
நீயெங்கே ஓ  ஓ  ஓ ஓ 
நான் அங்கே ஓஓ  ஓஓ  ஓஓ 

ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

*********************************

பெண் : வானெலாம் நிலம் வளம்
நீரெலாம் உன்னை பார்க்கிறேன் ஓ 

ஆண் : காத்திரு நலம் பெறும்
நாள் வரும் சிறை மீட்கிறேன் ஓ 

பெண் : போதும் படும் வேதனை
காதல் தரும் சோதனை

ஆண் : நீயெங்கே ஓ ஓ  ஓ ஓ
நான் அங்கே ஓஓ  ஓஓ  ஓஓ

பெண் : ஆறடிச் சுவரு தான் ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே

ஆண் : கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

பெண் : காட்டாறும்
இளங்குயில்களின் பாட்டாறும்

ஆண் : காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ
ஆறடிச் சுவரு தான் ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

*********************************

உன் மனசுல பாட்டுத்தான் - (பாண்டி நாட்டுத் தங்கம்)

படம்: பாண்டி நாட்டுத் தங்கம்
இசை: இளையராஜா

*********************************

பெண் : உன் மனசுல
பாட்டுத்தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத்தான் தவிக்குது

பெண் : உன் மனசுல
பாட்டுத் தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத் தான் தவிக்குது
இது உன்னை மட்டும்
பாடும் பூங்குயில்
தினம் எண்ணி எண்ணி
வாடும் பெண்மயில்
மனசு முழுதும்
சருகாய்க் கருக
மயங்கும் நினைவும்
மெழுகாய் உருக

பெண் : உன் மனசுல
பாட்டுத்தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத்தான் தவிக்குது

*********************************

ஆண் : பாட்டாலே புள்ளி வச்சு
பார்வையிலே கிள்ளி வச்சு
பூப்போல என்னை சேர்ந்த தேவியே
காத்தோட வந்து வந்து
காதோட சொன்ன சிந்து
கேக்காம போகும் வேறு பாதையே
நெஞ்சோடு கூடு கட்டி
சேர்ந்திருந்த ஜோடிதான்
இப்போது தனித்தனியா
போனதென்ன கோலந்தான்
எட்டுத்திக்கும் ஒன்னை எண்ணி
இந்த மனம் தேடும்
பட்டுக்குயில் உன்னை மட்டும்
நாளும் பாடும்

பெண் : உன் மனசுல
பாட்டுத்தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத்தான் தவிக்குது

*********************************

ஆண் : ஆஹா ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஆஆஆஆ
ஆஹா ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ

பெண் : நீ பாடும் ராகம் வந்து
என் உசுர தொட்டதையா
நெஞ்சை விட்டு நேசம் பாசம் போகல
பூச்சூடும் வேலையில
முள்ளு ஒண்ணு தச்சதையா
பொன்னாரம் சூடும் காலம் கூடல
உன்னோடு வாழ்ந்திருந்தா
ஊருக்கெல்லாம் ராணி நான்
உண்ணாம தனிச்சிருந்து
வாடுதையா மேனிதான்
உங்களத்தான் எண்ணி எண்ணி
என் உசுரு தேடும்
கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள
கலந்தே வாழும்

பெண் : உன் மனசுல
பாட்டுத்தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத்தான் தவிக்குது

ஆண் : இது ஒன்னை மட்டும்
பாடும் பூங்குயில்
ஒன்னை எண்ணி எண்ணி
வாடும் பூங்குயில்
மனசு முழுதும் சருகாய்க் கருக
மயங்கும் நினைவே மெழுகாய் உருக

பெண் : உன் மனசுல
பாட்டுத்தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத்தான் தவிக்குது

*********************************

Thursday, March 21, 2019

பூவே செம்பூவே உன் வாசம் - (சொல்லத்துடிக்கிது மனசு)

படம்: சொல்லத்துடிக்கிது மனசு
இசை: இளையராஜா

*********************************

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்,

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே

*********************************

நிழல் போல நானும்
ஆ ஆ ஆஆஅ

நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோரும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே

*********************************

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே

*********************************

சின்ன சின்ன ரோஜா பூவே - (பூவிழி வாசலிலே)

படம்: பூவிழி வாசலிலே
இசை: இளையராஜா

*********************************

சின்ன சின்ன ரோஜா பூவே
செல்லக் கண்ணே நீ யாரு
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெற்ற தாய் யாரு

சொல்லிக் கொள்ள வாயும் இல்லை
அள்ளிக்கொள்ள தாயும் இல்லை
ஏனோ சோதனை
இளநெஞ்சில் வேதனை

*********************************

சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே
என்ன என்ன ஆசையுண்டோ
உள்ளம் தன்னை மூடிவைத்த
தெய்வம் வந்தா சொல்லும் இங்கே
ஊரும் இல்லை பேரும் இல்லை
உண்மை சொல்ல யாரும் இல்லை
நீயும் இனி நானும் ஒரு ஜீவன் தானடா
சோலைக்கிளி போலே என் தோளில் ஆடடா
இது பேசா ஓவியம்
இதில் சோகம் ஆயிரம்

சின்ன சின்ன ரோஜா பூவே
செல்லக் கண்ணே நீ யாரு
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெற்ற தாய் யாரு

*********************************

கண்ணில் உன்னைக் காணும்போது
எண்ணம் எங்கோ போகுதைய்யா
என்னை விட்டுப் போன பிள்ளை
இங்கே உந்தன் கோலம் கொண்டு
வந்ததென்று எண்ணுகின்றேன்
வாழ்த்து சொல்லி பாடுகின்றேன்
கங்கை நீ என்றால் கரை இங்கு நானடா
வானம் நான் என்றால் விடிவெள்ளி நீயடா
என் வாழ்வில் நிம்மதி அது உந்தன் சன்னதி

சின்ன சின்ன ரோஜா பூவே
செல்லக் கண்ணே நீ யாரு

சொல்லிக் கொள்ள வாயும் இல்லை
அள்ளிக்கொள்ள தாயும் இல்லை
ஏனோ சோதனை
இளநெஞ்சில் வேதனை

*********************************

Wednesday, March 20, 2019

ஒரு கிளியின் தனிமையிலே - (பூவிழி வாசலிலே)

படம்: பூவிழி வாசலிலே
இசை: இளையராஜா

*********************************

ஆண்: ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு

கோரஸ்: உறவு உறவு உறவு உறவு

ஆண்: இரு கிளிகள் உறவினிலே
புது கிளி ஒன்று வரவு

கோரஸ்: வரவு வரவு வரவு வரவு

ஆண்: விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெலாம் நினைவு பறந்து வர

ஆண்: தினம் தினம் உறவு உறவு

கோரஸ்: புதிது புதிது

ஆண்: வரவு வரவு

கோரஸ்: இனிது இனிது

ஆண்: கனவு கனவு

கோரஸ்: புதிய கனவு

ஆண்: ஆஆ ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு

கோரஸ்: உறவு உறவு உறவு உறவு

ஆண்: இரு கிளிகள் உறவினிலே
புது கிளி ஒன்று வரவு

*********************************

பெண்: முத்து இரத்தினம் உனக்குச் சூட
முத்திரைக் கவி இசைந்து பாட
நித்தம் நித்திரை கரைந்து ஓட
சித்தம் நித்தமும் நினத்து கூட
சிறு மழழை மொழிதனிலே

கோரஸ்: இனிமை தவழ இதயம் மகிழ

பெண்: இரு மலரின் விழிகளிலே

கோரஸ்: இரவும் மறைய பகலும் தெரிய

பெண்: ஆசையால் உன்னை அள்ள வேண்டும்
அன்பினால் என்னை கொள்ள வேண்டும்
சேரும் நாள் இதுதான்

பெண்: ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு

கோரஸ்: உறவு உறவு உறவு உறவு

பெண்: இரு கிளிகள் உறவினிலே
புது கிளி ஒன்று வரவு

கோரஸ்: வரவு வரவு வரவு வரவு

*********************************

ல ல லா லா லலல லலலா லாலாலா
ல ல லா லா லலல லலலா லாலாலா
ல ல லா லா லலல லலலா லாலாலா
ல ல லா லா லலல லலலா லாலாலா
லலலலலா லலலல லால லாலா
லலலலலா லலலல லால லாலா

ஆண்: கட்டளைப்படி கிடைத்த வேதம்
தொட்டணைப்பதே எனக்கு போதும்

பெண்: மொட்டு மல்லிகை எடுத்து தூவும்
முத்து புன்னகை எனக்கு போதும்

ஆண்: ஒரு இறைவன் வரைந்த கதை

கோரஸ்: புதிய கவிதை இனிய கவிதை

பெண்: கதை முடிவும் தெரிவதில்லை

கோரஸ்:இளைய மனது இழுத்த கவிதை

ஆண்: பாசம் என்றொரு ராகம் கேட்கும்
பார்வை அன்பெனும் நீரை வார்க்கும்
பாடும் நாள் இதுதான்

ஆண்: ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு

கோரஸ்: உறவு உறவு உறவு உறவு

பெண்: இரு கிளிகள் உறவினிலே
புது கிளி ஒன்று வரவு

கோரஸ்: வரவு வரவு வரவு வரவு

ஆண்: விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெலாம் நினைவு பறந்து வர

தினம் தினம் உறவு உறவு

கோரஸ்: புதிது புதிது

ஆண்: வரவு வரவு

கோரஸ்: இனிது இனிது

ஆண்: கனவு கனவு

கோரஸ்: புதிய கனவு

ஆண்: ஆஆ ஒரு கிளியின்
தனிமையிலே சிறு கிளியின் உறவு

கோரஸ்: உறவ உறவ உறவு உறவு
ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு
இரு கிளிகள் உறவினிலே
புது கிளி ஒன்று வரவு
ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு

*********************************

Tuesday, March 19, 2019

பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம் - (நம்மவர்)



படம்: நம்மவர்
இசை: மஹேஷ் மஹாதேவன்

*********************************

பெண்: பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்
ஆண்: குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்
பெண்: ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்
ஆண்: சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்
பெண்: சண்டையும் சங்கீதம்

பெண்: பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்
ஆண்: குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்
பெண்: ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்
ஆண்: சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்
பெண்: சண்டையும் சங்கீதம்

*********************************

பெண்: லா ல லலலா லலலாலா
ஆண்: லலலா லலலா லாலா

பெண்: லா ல லா லா லா
‌ஆண்: ம்‌ம்‌ம்‌ம்‌ம்
பெண்: லா ல லா லா லா
‌ஆண்: ‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்
பெண்: லா ல லா லா லலா லலலா
‌ஆண்: ‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்

பெண்: ஸ்ருதியில் சேரும் ராகம் என்றும் கற்கண்டு
ஆண்: பூவில் பாடும் வண்டு என்ன ஸ்ருதி கொண்டு
பெண்: நீங்கள் போடும் சந்தம் இன்பம் ஆனந்தம்
ஆண்: மழையின் சந்தம் ஒன்றே என்றும் சுய சந்தம்
பெண்: நேசமாக நீங்கள் கேட்பதென்ன பாட்டு
ஆண்: மூங்கில் மீது காற்று மோதிய பழ பாட்டு

பெண்: பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்
ஆண்: குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்

*********************************

எங்கும் கடவுள் தேடும் தேவ சங்கீதம்
ஆண்: எதிலும் மனிதன் தேடும் எங்கள் சங்கீதம்
தேவலொகம் கேட்கும் ஜீவ சங்கீதம்
ஆண்: ஏழை குடிசை கேட்கும் எங்கள் சங்கீதம்
காசு மாலை தானே கலையின் சன்மானம்
ஆண்: கண்ணின் துளிகள் தானே கலைகளின் வெகுமானம்

பெண்: பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்
ஆண்: குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்
பெண்: ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்
ஆண்: சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்
பெண்: சண்டையும் சங்கீதம்

*********************************

சேலை கட்டும் பெண்ணுக்கொரு - (கொடி பறக்குது)

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா

*********************************

பெண் : ஓஹோஹோ ஓஹோஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ

ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ

கோரஸ்: ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்

பெண்: சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

ஆண்: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன்
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்

பெண் : வானத்து இந்திரரே வாருங்கள்
வாருங்கள்

ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம்
கூறுங்கள் கூறுங்கள்

பெண்: இதுப்போல் இதமோ
சுகமோ உலகத்தில் இல்லை

ஆண் : இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை

பெண்: சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

*********************************

கோரஸ்: ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்

பெண் : ஓஓஓஓ கூந்தலுக்குள்ளே
ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்

ஆண் : ஆ அஆஆ ஆயிரம்
உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்

பெண்: ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா

ஆண் : இதுப்போல் இதமோ
சுகமோ உலகத்தில் இல்லை

பெண் : இவளின் குணமோ
மனமோ மலருக்குள் இல்லை

ஆண் : சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன்
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்

*********************************

ஆண் : ம்ம்ம்ம்ம்

பெண் : ஓஓஓஓஓஓஓஓ

ஆண் : ம்ம்ம்ம்ம்

பெண் : ஓஓஓஓஓஓஓஓ

ஆண் : ஓஓஓஓ ஓ காதல்
வெண்ணிலா கையோடு வந்ததோ
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
பெண் : ஓ ஓஓஓஓ மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடுமந்திரம் பெண்ணோடு உள்ளதோ

ஆண் : மீனுக்கு
தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது
பெண் : இதுப்போல் இதமோ
சுகமோ உலகத்தில் இல்லை

ஆண் : இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை

பெண்: சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

ஆண் :சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன்
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்

பெண் : வானத்து இந்திரரே
வாருங்கள் வாருங்கள்

ஆண் : : பெண்ணுக்குள்
என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்

பெண்: இதுப்போல் இதமோ
சுகமோ உலகத்தில் இல்லை

ஆண் : இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை

*********************************

Monday, March 18, 2019

வெள்ளி கொலுசு மணி - (பொங்கி வரும் காவேரி)

படம்: பொங்கி வரும் காவேரி
இசை: இளையராஜா

*********************************

ஆண்: வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
பாடாத ராகம் சொல்லி
பாட்டு படிச்சதென்ன
கூடாம கூட வச்சு சேத்ததென்ன

பெண்: வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன

*********************************

பெண்: துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான்
மெல்ல மெல்ல வந்து அணைக்கும்
மஞ்சக் குளிக்கும் வஞ்சி மனச
கொஞ்சிக் கொஞ்சி அரவணைக்கும்

ஆண்: பொன்னி நதிப்போல நானும் உன்ன
பொத்தி பொத்தி எடுக்கட்டுமா
கண்ணுவழி பேசும் சின்னப்பொண்ண
கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா

பெண்: காத்து காத்து நானும்
பூத்துப் பூத்துப் போனேன்
சேந்து பாடும்போது
தேரில் ஏறலானேன்

ஆண்: உன் பேரச்சொல்லி பாடி வச்சா
ஊறுதம்மா தேனே

பெண்: வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி

ஆண்: சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன

பெண்: பாடாத ராகம் சொல்லி
பாட்டு படிச்சதென்ன

ஆண்: கூடாம கூட வச்சு சேத்ததென்ன

*********************************

ஆண்: கண்ணத்தொறந்தேன் நெஞ்சில் விழுந்த
உள்ளுக்குள்ள இன்ப சொகந்தான்
எண்ணம் முழுதும் பொங்கி வழியும்
வாங்கினது நல்ல வரம்தான்

பெண்: கண்ணத்தொறக்காம மூடிகிட்டேன்
நெஞ்சில் வச்சு அடச்சுபுட்டேன்
பூட்டு ஒண்ணப் போட்டு பூட்டிபுட்டேன்
சாவியத்தான் தொலச்சுபுட்டேன்

ஆண்: உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு
மெழுகப்போல நானும் உருகிப்போனேன் கேட்டு

பெண்: காலமெல்லாம் கேட்டிடத்தான்
காத்திருக்கேன் பாத்து

ஆண்: வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி
வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி

பெண்: சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
பாடாத ராகம் சொல்லி
பாட்டு படிச்சதென்ன
கூடாம கூட வச்சு சேத்ததென்ன

ஆண்: வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன

*********************************

அடி பூங்குயிலே பூங்குயிலே - (அரண்மனைக்கிளி)

படம்: அரண்மனைக்கிளி
இசை: இளையராஜா

*********************************


ஆண்: அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

பெண்: அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு

பெண் கோரஸ்:  பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

*********************************

ஆண்: ஆத்தங்கரை அந்தப்புரம் ஆக்கிகொள்ளவா
அந்த அக்கரைக்கும்
இக்கரைக்கும் கோட்டை கட்டவா

பெண்: மாமன் கையில் பூவை
தந்து சூடிக்கொள்ளவா
அடி ஆசையென்னும் ஊஞ்சல்
கட்டி ஆடிக்கொள்ளவா

ஆண்: சொல்லு சொல்லு திட்டமென்ன
சொல்லுவது கஷ்டமா
பொத்தி பொத்தி வெச்சதென்ன
என்னனவோ இஷ்டமா

பெண்: கூவாம கூவுறியே
குக்கூ குக்கூ பாட்டு
மாட்டாம மாட்டிப்புட்டா சொக்குபொடி போட்டு

ஆண்: யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

பெண் கோரஸ்: பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

*********************************

பெண்: ஊரையெல்லாம்
சுத்தி வந்த ஒத்த கிளியே
இப்போ ஓரிடத்தில்
நின்றதென்ன சொல்லு கிளியே

ஆண்: சொந்த பந்தம்
யாரும் இன்றி வந்த கிளியே
ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே

பெண்: வேறு விட்ட ஆலங்கன்னு
வானம் தொட பாக்குது
வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது

ஆண்: பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு
பாடுகிற பாட்டுலதான் நீயும் அதை கூறு

பெண்: யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

பெண் கோரஸ்: பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

பெண்: யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

ஆண்: வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு

பெண் கோரஸ்: பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

*********************************

Sunday, March 17, 2019

எங்கிருந்தோ இளங்குயிலின் - (பிரம்மா)

படம்: பிரம்மா
இசை: இளையராஜா

*********************************

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விறைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்
கொண்ட சஞ்சலங்கள் மறைய

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்

*********************************

நீங்காமல் தானே நிழல் போலே நானே
வருவேன் உன் பின்னோடு எந்நாளும் தான்
பூப்போன்ற மனதை பொல்லாத மனதாய்
தவறாக எடைப்போட்டு சென்றாலும்தான்
பாலைப்போல கள்ளும் கூட வெண்மையானது
பருகிடாது விளங்கிடாது உண்மையானது
நீயும் காணக்கூடும் இங்கும் ஓர் தினம்
இந்த பால் மனம்

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்

*********************************

பூர்வீகம் உனக்கு எதுவென்று எனக்கு
மறைத்தாலும் என் கண்கள் ஏமாறுமா
புரியாத புதிராய் விளங்காத விடையாய்
இருந்தாலும் உண்மைகள் பொய்யாகுமா
என்னை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லையே
வேலி மீது குற்றம் சொன்ன தோட்டம் இல்லையே
நண்பன் என்று என்னை ஏற்கும் நாள் வரும்
அந்த நாள் வரும்

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விறைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்
கொண்ட சஞ்சலங்கள் மறைய

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்

*********************************

Saturday, March 16, 2019

ஆகாய வெண்ணிலாவே - (அரங்கேற்றவேளை)

படம்: அரங்கேற்றவேளை
இசை: இளையராஜா

*********************************

ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ...

பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ..

ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்: மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட

பெண்: உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

*********************************

ஆண்: தேவார சந்தம் கொண்டு
தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு
தலை வாசல் வந்ததின்று

பெண்: தென்பாண்டி மன்னன் என்று
திரு மேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை
படியேறி வந்ததின்று..

ஆண்: இளநீரும் பாலும் தேனும்
இதழோரம் வாங்க வேண்டும்

பெண்: கொடுத்தாலும் காதல் தாபம்
குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண்: கடல் போன்ற ஆசையில்
மடல் வாழை மேனி தான் ஆட

பெண்: நடு ஜாம வேளையில்
நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்: மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய்க் கூட

பெண்: உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

*********************************

பெண்: தேவாதி தேவர் கூட்டம்
துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி
வீசும் கோவில் தீபம்

ஆண்: வாடாத பாரிஜாதம்
நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி
பேச்சில் கேட்கக் கூடும்

பெண்: அடியாளின் ஜீவன்
மேவி அதிகாரம் செய்வதென்ன

ஆண்: அலங்கார தேவ தேவி
அவதாரம் செய்ததென்ன

பெண்: இசை வீணை வாடுதோ
இதமான கைகளை மீட்ட

ஆண்: சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

பெண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

ஆண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

பெண்: மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட

ஆண்: உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

பெண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

ஆண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

*********************************

Friday, March 15, 2019

பாட்டிங்கே ரபப்பா - (பூவிழி வாசலிலே)

படம்: பூவிழி வாசலிலே
இசை: இளையராஜா

*********************************

பெண் கோரஸ்:
பாட்டிங்கே ரபப்பா
ஆட்டமிங்கே ரபப்பா
இன்னிசையோடு மெல்ல நீ சேர
தேனுடன் பாலும் பூவுடன் ஓட
பாட்டிங்கே ரபப்பா
ஆட்டமிங்கே

*********************************

ஆண்:
பகலில் மனிதர்க்கு மதியே துணை
இரவில் பலருக்கு மதுவே துணை
வேறொன்றும் தெரியாது ஏக்கங்கள் புரியாது
ஏற்றிய பாரம் தாங்காது
இறக்கிட நீயும் வா
ஏங்கிய உள்ளம் தூங்காது
அமைதியை மீண்டும் தா
வா பூவே வா

பெண் கோரஸ்:
பாட்டிங்கே ரபப்பா
ஆட்டமிங்கே

பெண் கோரஸ்:
தா தர ரத்தா தத்தா
தரரா ரரரா
தா தர ரத்தா தத்தா
தரரா
தா தர ரத்தா தத்தா
தரரா ரரரா
தா தர ரத்தா தத்தா
தரரா
தா தரரா ரா ரா
தகு திகு திகு தகு திகு திகு தகு திகு
தகு திகு திகு தகு திகு திகு தகு திகு

*********************************

ஆண்:
அசையும் அசைவுகள் இசையின் நிழல்
அமைதி திருவிழி இறைவன் மடல்
பூவே நீ சாமந்தி
பொழுதில் நீ பொன்னந்தி
எனக்கொரு ராகம் நீ தானே
புது புது கீதம் தா
தனி தனி வாழ்க்கை ஏதேது
இனியெதும் இனிமை தான்
வா பூவே வா

பெண் கோரஸ்:
பாட்டிங்கே ரபப்பா
ஆட்டமிங்கே ரபப்பா
இன்னிசையோடு மெல்ல நீ சேர
தேனுடன் பாலும் பூவுடன் ஓட
பாட்டிங்கே ரபப்பா
ஆட்டமிங்கே

*********************************

Thursday, March 14, 2019

மந்திரம் சொன்னேன் வந்துவிடு - (வேதம் புதிது)

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்

*********************************

ஆண்: மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே அதன்
பொருளைச் சொல்வாய் செந்தேனே
புதிய பாடம் சொல்வேனே அதன்
பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு வந்தேனே
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு

*********************************

ஆண்: கண்மணி உனக்கொண்ணு தெரியுமா
அந்த இடுப்பில் இருக்குது என் மனசு

பெண்: என் மனம் உனக்கென்ன புரியுமா
தண்ணிக் குடத்தில் துடிக்குது என்னுயிரு

ஆண்: நீ குளித்தால் நதியில் மணமிருக்கும்

பெண்: நீ ரசித்தால் கவியின் குணமிருக்கும்

ஆண்: வந்துவிட்டேன் மெல்ல மெல்ல

பெண்: தந்துவிட்டேன் என்ன சொல்ல

ஆண்: பாவமல்ல வேதங்கள் தடையல்ல
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு

*********************************

ஆண்: பொருத்தம் நமக்குள் இல்லையென்று
நீ நினைத்ததுண்டோ நெஞ்சுக்குள்ள

பெண்: தாமிரபரணி ஆத்துத் தண்ணி
அது ஜாதி பேதம் பார்ப்பதில்ல

ஆண்: நீ நினைத்தால் திருநீரணிந்திருப்பேன்

பெண்: நீ தடுத்தால் கோயில் மறந்திருப்பேன்

ஆண்: தொட்டதெல்லாம் வெற்றியடி

பெண்: வெற்றி தந்தாள் அல்லிக் கொடி

ஆண்: கட்டிப் பிடி

பெண்: காதல் வேதம் கற்பிக்க வா
காதில் வந்து ஒப்பிக்க வா
காதல் என்னை அழைக்குது
எங்கள் வேதம் என்னைத் தடுக்குது
காதல் பெரிதா வேதம் பெரிதா

இருவரும்: காதல்தானே ஜெயிக்குது

ஆண்: மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்
சம்மதம் எங்கே தந்துவிட்டாள்
காலம் நேரம் பாராமல் பிறர்
கண்கள் ஏதும் காணாமல்
காலம் நேரம் பாராமல் பிறர்
கண்கள் ஏதும் காணாமல்

இருவரும்: ஆற்று மணலில் பேர்கள்
எழுதி அழகு பார்ப்போம் அன்பே வா
அழகு பார்ப்போம் அன்பே வா
அழகு பார்ப்போம் அன்பே வா

*********************************

Wednesday, March 13, 2019

சிட்டுக்குருவி வெட்கப்படுது - (சின்ன வீடு)

படம்: சின்ன வீடு
இசை: இளையராஜா

*********************************

பெண்: தரதத் தத்தத்
ஆண்: தத்தத்
பெண்: தரதத் தத்தத்
ஆண் & பெண்: தத்தத்
தரதத் தரதத் தரதத்தா
ஆண்: தரதத் தத்தத்
பெண்: தரதத் தத்தத்
ஆண்: தத்தத்
பெண்: தரதத் தத்தத்
ஆண் & பெண்: தத்தத்
தரதத் தரதத் தரதத்தா
ஆண்: தத்தத் தத்தத்
பெண்: தரதத்
ஆண் & பெண்: தத்தத் தத்தத்
பெண்: தரதத்
ஆண் & பெண்: தத்தத் தத்தத்
தரதத் தரதத் தரதத் தரதத் தரதத் தரதா

பெண்: சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

ஆண்: சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

பெண்: சிட்டுக்குருவி வெட்கப்படுது
ஆண்: பெட்டைக்குருவி கற்றுத் தருது

*********************************

பெண்: தத்தை தத்தித் தவழும்
தோளைத் தொத்தித் தழுவும்
மெத்தை யுத்தம் நிகழும்

ஆண்: நித்தம் இன்பத் தருணம்
இன்பம் கொட்டித் தரணும்
என்றும் சரணம் சரணம்

பெண்: இந்தக் கட்டில் கிளிதான்
கட்டுப்படுமே விட்டுத்தருமே அடடா
ஆண்: மச்சக் குருவி முத்தம் தருதே
உச்சந்தலையில் பித்தம் வரு தே
பெண்: முத்தச் சுவடு சிந்தும் உதடு
சுற்றுப் பயணம் எங்கும் வருமே

ஆண்: பட்டுச் சிறகுப் பறவை
பருவச் சுமையைப் பெறுமே

பெண்: சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது

ஆண்: தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது

பெண்: அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

ஆண்: சிட்டுக்குருவி வெட்கப்படுது

பெண்: பெட்டைக்குருவி கற்றுத் தருது

*********************************

ஆண்: நித்தம் எச்சில் இரவு
இன்பம் மட்டும் வரவு
முத்தம் மொத்தச் செலவு

பெண்: மொட்டுக் கட்டும் அழகு
பட்டுக் கட்டும் பொழுது
கிட்டத் தொட்டுப் பழகு

ஆண்: ஆஹா கள்ளக் கனியே அள்ளச் சுகமே
வெட்கப் பறவை விட்டுத் தருமோ

பெண்: மன்னன் மகிழும் தெப்பக் குளமும்
செப்புக் குடமும் இவளே

ஆண்: அங்கம் முழுதும் தங்கப் புதையல்
மெத்தைக் கடலில் முத்துக் குளியல்

பெண்: பட்டுச் சிறகுப் பறவை
பருவச் சுமையைப் பெறுமே

ஆண்: சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

பெண்: சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

ஆண்: சிட்டுக்குருவி (பெண்: சிட்டுக்குருவி)
ஆண்: வெட்கப்படுது (பெண்: வெட்கப்படுது)
ஆண்: பெட்டைக்குருவி (பெண்: பெட்டைக்குருவி)
ஆண்: கற்றுத் தருது (பெண்: கற்றுத் தருது)
ஆண்: தத்தத் தரத (பெண்: தத்தத் தரத)
ஆண்: தத்தத் தரத (பெண்: தத்தத் தரத)
ஆண்: தத்தத் தரத (பெண்: தத்தத் தரத)
ஆண்: தத்தத் தரத (பெண்: தத்தத் தரத)

*********************************

மகராஜனோடு ராணி வந்து சேரும் - (சதி லீலாவதி)



படம்: சதி லீலாவதி
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்

பெண்:
மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்

ஆண்:
இது மன்மத சாம்ராஜ்யம்
புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது
தினம் கூடும் கூடும் ஆனந்தம்
மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்

பெண்:
கங்கைக்கொரு வங்கக்கடல் போல் வந்தான்
அவன் வந்தான்
மங்கைக்கொரு இன்பக்கனா அவன் தந்தான்
அவன் தந்தான்

ஆண்:
கண்ணில் என்ன வண்ணங்கள்
சின்னச் சின்ன மின்னல்கள்
கண்ணில் என்ன வண்ணங்கள்
சின்னச் சின்ன மின்னல்கள்
ஓர் காதல் பூத்ததோ

பெண்:
பக்கத் துணை வாய்க்காமல்
பெண் வாடினாளோ

ஆண்:
பக்கம் வந்து கை சேர
பண் பாடினாளோ

பெண்:
ஒரு ராகம் ஒரு தாளம் இணைகூடும்போது கானம்தான்
ராஜனோடு ராணி வந்து சேரும்

ஆண்:
இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம் புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்

*********************************

ஆண்:
மன்னன் தொட தன்னைத் தந்தாள் பூம்பாவை
பூம்பாவை
என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள் பேராசை
பேராசை

பெண்:
சந்திக்கின்ற சந்தர்ப்பம்
சின்னப் பெண்ணின் விண்ணப்பம்
சந்திக்கின்ற சந்தர்ப்பம்
சின்னப் பெண்ணின் விண்ணப்பம்
நீ கேட்க வேண்டுமோ

ஆண்:
இலக்கணம் பார்க்காது
ஓர் பாடல் கூற

பெண்:
இடைவெளி தோன்றாது
ஓர் ஜோடி சேர

ஆண்:
என்ன வேகம் என்ன தாகம்
ஒரு காவல் தாண்டக் கூடுமோ
ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்

பெண்:
இது மன்மத சாம்ராஜ்யம்
புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது
தினம் கூடும் கூடும் ஆனந்தம்

இருவரும்:
ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்

*********************************

Monday, March 11, 2019

மாருகோ மாருகோ - (சதி லீலாவதி)

படம்: சதி லீலாவதி
இசை: இளையராஜா

*********************************

ஆண்: என்ன பாட்டு பாடோனும்

பெண்: தஞ்சாவூர் தண்ணிக்கிட்ட ஆத்தங்கரையில
பாகவதரெல்லாம் பாடுவாங்களோ
அந்த பாட்டு பாடுங்க மாமா

ஆண்: தண்ணிக்கிட்ட பாகவதர்
திருவயாத்த சொல்றியா நீ

பெண்: ஹான்ஹக்கா அதான் அதே

ஆண்:  கெட்டது போ
னததரினா.... னா....

பெண்: ஆஹா

ஆண்: தானா.... னா....

பெண்: அப்படிபோடுங்கோ
மாமா ஏன் பாட்ட நிறுத்திப்புட்டிங்கோ
உங்க சங்கீதத்துல தொபக்கடிருனு குதிச்சு
நீச்சல் அடிக்கலாம்ன்னு ஓடோடிவந்த
என்ன ஏமாத்திப்புடாதீங்கோ மாமா
பாடுங்கோ மாமா பாடுங்கோ

ஆண்: னா.... னனனா....
தா.... னா.... தானா ஆஆ....
மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

பெண்: கேட்ட மாதிரி இருக்குது

ஆண்: ஆஹா வந்துரூச்சு ஆசையில் ஓடி வந்தேன்
ஆஹா வந்துரூச்சு ஆசையில் ஓடி வந்தேன்
வாடி என் கப்பக்கிழங்கே

பெண்: கப்பக்கிழங்கா

ஆண்: மாருகோ மாருகோ மாருகோ மாருகோ
மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகோ ஜோருகோ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

*********************************

பெண்: நேத்து ராத்திரி தூக்கம் போச்சு
இஞ்சி இடுப்பழகா ஹோய்

ஆண்: ஹாஹாஹா ச்சி

பெண்: மஞ்ச சிவப்பழகா ஹோய்

ஆண்: யம்மா....
சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
இளமை இதோ இதோ ஹோய்

பெண்: யம்மா....

ஆண்: இனிமை இதோ இதோ ஹோய்

பெண்: மாமா....
நிலா காயுது

ஆண்: நேரம் நல்ல நேரம்

பெண்: நெஞ்சில் பாயுது

ஆண்: காமன் விடும் பானம்

பெண்: மாருகோ மாருகோ மாருகயி
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

ஆண்: ஆஹா வந்துரூச்சு ஸ்ஸ்ஸ்ஸ்
ஆசையில் ஓடி வந்தேன்
வாடி என் கப்பக்கிழங்கே
மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

*********************************

ஆண்:  என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
தண்ணி கருத்துறுச்சு ஹோய்
தவள சத்தம் கேட்டுறுச்சு ஹோய்

பெண்: போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ராஜா கைய வச்சா ஹோய்
ராங்கா போனதில்ல ஹோய்
ரம்பம் பம் பம்

ஆண்: ஆஹா ஹா ஆரம்பம்பம்

பெண்: ஹே ஹே பம்பம்பம்பம்

ஆண்: யாஹூ பேரின்பம்பம்பம் யே யே

பெண்: பொன்மேனி உருகுதே ஹோ
ஆஆஆஆ....

ஆண்: ரி க ரிக ரி க ரிக ரிக ரிக ரிக ரிக ரிக ரிக

பெண்: நி ச ரி பக

ஆண்: ம த நி சநி

பெண்: நி ச ரி ப ம த நி ச

ஆண்: ம க மரிக மநிரிச

இருவரும்: ப த நிரி சநிபநிபம கமரிச

பெண்: மாருகோ மாருகோ மாருகயி
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

ஆண்: ஆஹா வந்துரூச்சு ஆசையில் ஓடி வந்தேன்
ஆஹா வந்துரூச்சு ஆசையில் ஓடி வந்தேன்
வாடி என் கப்பக்கிழங்கே
மாருகோ மாருகோ மாருகயி
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

*********************************

Saturday, March 9, 2019

ஆயிரம் தாமரை மொட்டுக்களே - (அலைகள் ஓய்வதில்லை)

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா

*********************************
கோரஸ்: ஆஆஆஆஆஆஆஆ
தந்தனன தந்தனனன தந்தனனன தந்தனனன

பெண்: ஆ ஆ ஆ ஹா அஅ ஆ ஆ ஹா ஹா
நா நா நா நா நனநன (கோரஸ்: தந்தனனதந்தனன)
நா நா நா நா

பெண் :ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே

கோரஸ்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே

பெண் : இங்குரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை

கோரஸ்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே

*********************************

ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ
கொத்து மலரே அமுதம்
கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று

பெண் : ஆ ஆ ஆ
கொத்து மலரே அமுதம்
கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று

ஆண் : உள்ளிருக்கும் வேர்வை வந்து
நீர் வார்க்கும்

பெண் : புல்லரிக்கும் மேனி எங்கும்
பூ பூக்கும்
ஆண் : அடிக்கடி தாகம் வந்து
ஆளை குடிக்கும்

கோரஸ்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே

*********************************

கோரஸ்: ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
ஆ ஆ அ அ அ அ அ அ ஆ
ஆ ஆ அ அ அ அ அ ஆ ஆ
அ அ ஆ அ அ ஆ அ அ ஆ
அ அ ஆ அ அ ஆ அ அ ஆ
அ அ ஆ அ அ ஆ அ அ ஆ

ஆண்: ஹே
வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத்
தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம்
இரு தோளில் ஏறும்

பெண் : புல்வெளியின் மீது ரெண்டு
பூ மாலை
ஒன்றை ஒன்று சூடும் இது
பொன் மேடை

ஆண் : கள் வடியும் பூக்கள் தங்கள்
காம்பை மறக்கும்

கோரஸ்: ஆயிரம் தாமரை

பெண் : நன நன

கோரஸ்: ஆயிரம் தாமரை

பெண் : நனநன ந நன ந நனந

கோரஸ்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே

பெண் : இங்குரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை

கோரஸ்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே

*********************************

நதியில் ஆடும் பூவனம் - (காதல் ஓவியம்)

படம்: காதல் ஓவியம்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
அவித்யானா-மன்த-ச்திமிர-மிஹிர த்வீபனகரீ
ஜடானாம் சைதன்ய-ச்தபக மகரன்த ஶ்ருதிஜரீ |
தரித்ராணாம் சின்தாமணி குணனிகா ஜன்மஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா
முரரிபு வராஹச்ய பவதி|

பெண்:
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

ஆண்:
காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

*********************************

பெண்:
குளிக்கும் போது கூந்தலை
தனதாடை ஆக்கும் தேவதை
ஆண்:
அலையில் மிதக்கும் மாதுளை
இவள் பிரம்ம தேவன் சாதனை
பெண்:
தவங்கள் செய்யும் பூவினை
இன்று பறித்து செல்லும் காமனை

ஆண்:
எதிர்த்து நின்றால்.....
ஆஆ ஆஆஆஆஆஆஆஆ
எதிர்த்து நின்றால் வேதனை

பெண்:
அம்பு தொடுக்கும் போது நீ துணை
சோதனை.....
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

ஆண்:
காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்


ஆண்:
ஸ ரி நி. ஸ 
ப ம ரி க
ஸ ரி நி. ஸ  ப ம ரி க
த த ப ம
ம த நி ஸ் நி த ப ம
ம த நி ஸ்
ஸ் ஸ் ஸ் ஸ் 
ஸ் ஸ் ரி ரி
நி நி ஸ் ஸ்
த த த த
த த நி நி
ப ப த த
ரிமத நித பஸ்நித
ரிஸநித 
பமக தபம நிதப ஸ்நிதப
ஸஸ ரிரி கக ம 
ஸ்ஸ் நிநி தத பப ம
நி. ரி க ம ப

ஆண்:
சலங்கை ஓசை போதுமே
எந்தன் பசியும் தீர்ந்து போகுமே

பெண்:
உதய கானம் போதுமே
எந்தன் உயிரில் அமுதம் ஊருமே

ஆண்:
இரவு முழுதும் கீதமே

பெண்:
நிலவின் மடியில் ஈரமே

ஆண்:
விரல்கள் விருந்து கேட்குமே

பெண்:
ஒரு விளக்கு விழித்து பார்க்குமே

ஆண்:
இதழ்கள் இதழை தேடுமே

பெண்:
ஒரு கனவு படுக்கை போடுமே
போதுமே...
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

ஆண்:
காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்

இருவரும்:
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்.....ம் ம் ம்

*********************************

உறவுகள் தொடர்கதை - (அவள் அப்படித்தான்)

படம்: அவள் அப்படித்தான்
இசை: இளையராஜா

*********************************

உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே

*********************************

உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும்
சுமை தாங்கியாய் தாங்குவேன்

உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்

வேதனை தீரலாம்
வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே
நானும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே

*********************************

வாழ்வென்பதோ கீதம்
வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்

நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெலாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல்
கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது
இன்பம் பிறந்தது

உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே
இனி எல்லாம் சுகமே

*********************************

பூவாடை காற்று - (கோபுரங்கள் சாய்வதில்லை)

படம்: கோபுரங்கள் சாய்வதில்லை
இசை: இளையராஜா

*********************************

பெண்: பூவாடை காற்று
வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே
குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆ.ஆ.ஆ....

பெண்: பூவாடை காற்று
ஆண்: ல ல ல ல

பெண்: வந்து ஆடை திண்டுமே
ஆண்: ல ல ல ல

பெண்: முந்தானை இங்கே
ஆண்: ல ல ல ல

பெண்: குடையாக மாறுமே
ஆண்: ல ல ல ல

*********************************

ஆண்:
பாதை தடுமாறும்
இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்
பாதை தடுமாறும்
இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்

பெண்:
காணாத பூவின் ஜாதி
நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி

ஆண்: இது தானே மோகம்
பெண்: ப பப் பா

ஆண்: ஒரு பூவின் தாகம்
பெண்: ப பப் பா

ஆண்:குடையோடு நனையாதோ பூங்கவனம்

பெண்: ஹோ பூவாடை காற்று
ஆண்: ல ல ல ல

பெண்: வந்து ஆடை திண்டுமே
ஆண்: ல, ல ல ல ல

பெண்: முந்தானை இங்கே
ஆண்: ல ல ல ல

பெண்: குடையாக மாறுமே
ஆண்: ல ல ல ல

*********************************

பெண்:
ஏங்கும் இளமாலை
விரல் திண்டும் சுகவேளை
கானாததன்ரோ ஆண் வாசணை

பெண்:
ஏங்கும் இளமாலை
விரல் திண்டும் சுகவேளை
கானாததன்ரோ
ஆண் வாசணை

ஆண்:
அம்பிகை தங்கை என்று
கின்டுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜா செண்டு
சூடு கண்டு

பெண்: இரு கண்னின் ஓரம்
ஆண்: ப பப் பா

பெண்: நிறம் மாறும் நேரம்
ஆண்: ப பப் பா

பெண்: மார்பில் விழும் மாலைகளில் ஆலிங்கனம்

ஆண்: ஹோ பூவாடை காற்று
பெண்: ல ல ல ல

ஆண்: வந்து ஆடை திண்டுமே
பெண்: ல ல ல ல

ஆண்: முந்தானை இங்கே
பெண்: ல ல ல ல

ஆண்: குடையாக மாறுமே
பெண்: ல ல ல ல
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈரவண்டுகள் தேன் குடிக்குமே
ஆ ஆ ஆ

பெண்: ஆ பூவாடை காற்று
ஆண்: ல ல ல ல

பெண்: வந்து ஆடை திண்டுமே
ஆண்: ல, ல ல ல

பெண்: முந்தானை இங்கே
ஆண்: ல ல ல ல

பெண்: குடையாக மாறுமே
ஆண்:ல ல ல ல

Friday, March 8, 2019

வருது வருது இளங்காற்று - (பிரம்மா)

படம்: பிரம்மா
இசை: இளையராஜா

*********************************

கோரஸ்:
ம் ம் ம் ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்
ம் ம் ம் ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆ ஆஅஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஅஆஆ ஆஆஆ ஆஆ


பெண்: வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

ஆண்: சிறகு முளைத்த கிளி போலே
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே
தனிமை நினைவு இனி ஏது
ஒரு தலைவன் தழுவ வரும்போது

பெண்:  வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

*********************************

ஆண்: நாடியெங்கும் ஓடிச்சென்று
நாளும் ஒரு சூடேற்றும் ரூபமே

பெண்:  நேசம் என்னும் நெய்யை விட்டு
நெஞ்சில் நிதம் நான் ஏற்றும் தீபமே

ஆண்: தோளில் உனை தாங்குவேன்
இதழ் தேனை தினம் வாங்குவேன்

பெண்:  கேளு பரிமாறுவேன்
அதில் நானும் பசியாறுவேன்

ஆண்: பாலும் தேனும் தீர தீர ஊறுமா

பெண்:  வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து

ஆண்: இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

*********************************

கோரஸ்:
துத்து துது துத்து துது துத்து துது
துத்து துது துத்து துது துத்து துது துத்து துது து
துத்து துது துத்து துது துத்து துது
துத்து துது துத்து துது துத்து துது துத்து துது து
துத்து துது துத்து துது துத்து துது து
துத்து துது துத்து துது துத்து துது து

பெண்:  ஊரைச் சுற்றும் தேரும் இன்று
சேரும் இடம் சேராமல் வாடுதே

ஆண்: தேவன் வந்தான்தேரைக்கண்டு
சோகம் இனி சொல்லாமல் ஓடுமே

பெண்:  நாளை சுப வேளைதான்
அதில் கூடும் மணமாலை தான்

ஆண்: நாளும் புது லீலைதான்
இனி ஏது இடைவேளை தான்

பெண்:  ஆடல் பாடல் ஆவல் தீர காணலாம்

ஆண்: வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

பெண்:  சிறகு முளைத்த கிளி போலே
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே
தனிமை நினைவு இனி ஏது
ஒரு தலைவன் தழுவ வரும்போது

ஆண்: வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து

பெண்:  இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

*********************************

அரும்பாகி மொட்டாகி பூவாகி - (எங்க ஊரு காவல்காரன்)

படம்: எங்க ஊரு காவல்காரன்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மால
எடுத்து வாரேன்
கழுத்தக் காட்டு
கையிரண்ட சேர்த்து
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

*********************************

பெண்:
ஜாதகத்த பாத்ததில்ல
சாதகம்தான் வேளையெல்லாம்
வேறெதையும் கேட்டதில்ல
போட்டுவிடு மாலையெல்லாம்

ஆண்:
மணக்கும் சந்தனம் பூசட்டுமா
இனிக்கும் சங்கதி பேசட்டுமா

பெண்:
எதுக்குங்கப்பனை கேக்கட்டுமா
அப்புறம் உன் கிட்ட பேசட்டுமா

ஆண்:
பொன் ஆவாரம்பூ
என் காதோரமா
ஸ்வரம் பாடும் இன்னேரம் பொன்னேரம்தான்
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

*********************************

ஆண்:
பாய் விரிச்சு நான் படுத்தா
பால் எடுத்து வாடி புள்ள
பல கதய பேசிப்புட்டா
பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள

பெண்:
பசிக்குப் பந்திய போடட்டுமா
ரசிச்சு உன் கிட்ட கூடட்டுமா

ஆண்:
தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா
புடிச்சுக் கையில சேக்கட்டுமா

பெண்:
எம் மச்சானுக்கு
அட என்னாச்சுது
அது பூவாயி பின்னால பித்தானது
அரும்பாகி மொட்டாகி பூவாகி

ஆண்:
பூப்போல பொன்னான பூவாயி

பெண்:
அரும்பாகி மொட்டாகி பூவாகி

ஆண்:
பூப்போல பொன்னான பூவாயி

பெண்:
தொடுத்த மால
எடுத்து வாரேன்

ஆண்:
கழுத்தக் காட்டு
கையிரண்ட சேர்த்து

பெண்:
அரும்பாகி மொட்டாகி பூவாகி

ஆண்:
பூப்போல பொன்னான பூவாயி

பெண்:
அரும்பாகி மொட்டாகி பூவாகி

ஆண்:
பூப்போல பொன்னான பூவாயி

*********************************

Thursday, March 7, 2019

அதிகாலை சுகவேளை - (நட்பு)

படம்: நட்பு
இசை: இளையராஜா

*********************************

பெண்: அதிகாலை சுகவேளை
உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை
உன் ஓலை வந்தது

ஆண்: காதல் சொன்ன காகிதம்
பூவாய்ப் போனது
வானில் போன தேவதை
வாழ்த்துச் சொன்னது

பெண்: ஒரு தத்தை கடிதத்தைத்
தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க
அதிகாலை சுகவேளை
உன் ஓலை வந்தது

ஆண்: அதிகாலை சுகவேளை
உன் ஓலை வந்தது

*********************************

ஆண்: அன்பே வா வா அணைக்கவா
நீ நிலவுக்குப் பிறந்தவளா

பெண்: போதை வண்டே பொறுத்திரு
இன்று மலருக்குத் திறப்பு விழா

ஆண்: உன்னை வந்து பாராமல்
தூக்கம் தொல்லையே

பெண்: உன்னை வந்து பார்த்தாலும்
தூக்கம் இல்லையே

ஆண்: ஒரு பாரம் உடை மீறும்
நிறம் மாறும் தனியே

பெண்: இதழோரம் அமுதூறும்
பரிமாறும் இனியே

ஆண்: அடி தப்பிப்போகக் கூடாதே
அதிகாலை சுகவேளை
உன் ஓலை வந்தது

பெண்: அதிகாலை சுகவேளை
உன் ஓலை வந்தது

*********************************

பெண்: தென்றல் வந்து தீண்டினால்
இந்ததளிர் என்ன தடை சொல்லுமா

ஆண்: பெண்மை பாரம் தாங்குமா
அந்த இடை ஒரு விடை சொல்லுமா

பெண்: என்னைச் சேர்ந்த உன்னுள்ளம்
ஈரம் மாறுமா

ஆண்: தங்கம் என்ன சுட்டாலும்
சாரம் போகுமா

பெண்: இளங்கோதை ஒரு பேதை
இவள் பாதை உனது

ஆண்: மலர்மாலை அணியாமல்
உறங்காது மனது

பெண்: இது போதும் சொர்க்கம் வேறேது
அதிகாலை சுகவேளை
உன் ஓலை வந்தது

ஆண்: அதிகாலை சுகவேளை
உன் ஓலை வந்தது

பெண்: காதல் சொன்ன காகிதம்
பூவாய்ப் போனது
வானில் போன தேவதை
வாழ்த்துச் சொன்னது

ஆண்: ஒரு தத்தை கடிதத்தைத்
தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க
அதிகாலை சுகவேளை
உன் ஓலை வந்தது

இருவரும்: அதிகாலை சுகவேளை
உன் ஓலை வந்தது

*********************************

ஆகாய கங்கை - (தர்மயுத்தம்)

படம்: தர்மயுத்தம்
இசை: இளையராஜா

*********************************

பெண்: தா தரத்தா தரத்தா தரத்தா
தா ரர தா ரர தா ரர தா
தா ரர தா ரர தா ரர ஆ ஆ ஆ ஆ
தார தார தார தார தார தார தா

ஆண்: ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி
பொன் மான் விழித் தேடி
மேடை கட்டி
மேளம் தட்டி
பாடுதே மங்களம்
நாடுதே சங்கமம்

பெண்: குங்குமத் தேரில்
நான் தேடிய தேவன்
சீதாப் புகழ் ராமன்
தாளம் தொட்டு
ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்

*********************************

ஆண்: காதல் நெஞ்சில்
பெண்: ஹே ஹே ஹே ஹே
ஆண்: மேள தாளம்
பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: காதல் நெஞ்சில்
பெண்: ஹே ஹே ஹே ஹே
ஆண்: மேள தாளம்
பெண்: ஆ ஆ ஆ ஆ
ஆண்: காலை வேளை
பாடும் பூபாளம்
பெண்: மன்னா இனி
உன் தோளிலே
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
ஆண்: பூ மஞ்சம் உன் மேனி
என் நாளில் அரங்கேறுமோ
பெண்: குங்குமத் தேரில்
நான் தேடிய தேவன்
சீத்தா புகழ் ராமன்
ஆண்: மேடை கட்டி
மேளம் தட்டி
பெண்: பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்

பெண்: லா லலாலா லாலல்லா லாலலால
லலாலா லாலல்லா லாலலால
லா லலாலா லாலல்லா லாலலால
லலாலா லாலல்லா லாலலால
லா லா…

*********************************

பெண்: தேவை யாவும்
ஆண்: ஹே ஹே ஹே
பெண்: தெரிந்த பின்னும்
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: தேவை யாவும்
ஆண்: ஹே ஹே ஹே
பெண்: தெரிந்த பின்னும்
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: பூவை நெஞ்சில்
நாணம் போராடும்
ஆண்: ஊர் கூடியே உறவானதும்
தருவேன் பல நூறு
பருகக் கனிச் சாறு
பெண்: தளிரான என் மேனி
தாங்காது உன் மோகம்
ஆண்: ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி
பொன் மான் விழித் தேடி
பெண்: தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்
இரு: லாலலா லாலலா
லாலலா லாலலா

*********************************

Tuesday, March 5, 2019

பொன் மானே கோபம் ஏனோ - (ஒரு கைதியின் டைரி)

படம்: ஒரு கைதியின் டைரி
இசை: இளையராஜா

*********************************

ஆண்: பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால் குடம் கள்ளாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ

*********************************

ஆண்: காவல் காப்பவன்
கைதியாய் நிற்கிறேன் வா

பெண்: ஊடல் என்பது காதலின் கௌரவம் போ

ஆண்: ரெண்டு கண்களும் ஒன்று
ஒன்றின் மேல் கோபம் கொள்வதா
லால்ல லால்லலா லால்ல
லால்லலா லால்ல லால்லலா

பெண்: ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்

ஆண்: ஊடல் கூட அன்பின் அம்சம்

பெண்: நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ

ஆண்: பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ

*********************************

பெண்: எந்தன் கண்களில்
உன்னையே பார்க்கிறேன் வா

ஆண்: ரெண்டு பௌர்ணமி கண்களில்
பார்க்கிறேன் வா

பெண்: உன்னைப் பார்த்ததும் எந்தன்
பெண்மைதான் கண் திறந்ததே
லால்ல லால்லலா லால்ல
லால்லலா லால்ல லால்லலா

ஆண்: கண்ணே மேலும் காதல் பேசு

பெண்: நேரம் பார்த்து நீயும் பேசு

ஆண்: பார்வை பூவை நெஞ்சில் வீசு ஓஹோ

ஆண்: பொன் மானே

பெண்: ம்ஹும்

ஆண்: கோபம்

பெண்: ம்ஹும்

ஆண்: எங்கே

பெண்: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்

ஆண்: பொன் மானே

பெண்: ம்ஹும்

ஆண்: கோபம்

பெண்: ம்ஹும்

ஆண்: எங்கே

பெண்: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
பூக்கள் மோதினால் காயம் நேருமா
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா

ஆண்&பெண்: லா லால்லா லால்லா லால்லா
லா லால்லா லால்லா லால்லா

*********************************

சோலைப்பூவில் மாலைத்தென்றல் - (வெள்ளை ரோஜா)

படம்: வெள்ளை ரோஜா
இசை: இளையராஜா

*********************************

ஆண்: சோலைப்பூவில்
மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

பெண்: புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர்க்கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்
சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்

ஆண்: ஆசை கொண்ட நெஞ்சம்
ரெண்டும் ஆடும் காலம்

*********************************

பெண்: சந்தனக்காடு
நான் உன் செந்தமிழ் ஏடு

ஆண்: மான்விழி மாது
நீயோ மன்மதன் தூது

பெண்: மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே
மின்னல் தேடும் தாழம்பூவாய்
நானும் வந்தேனே

ஆண்: தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே
நீயும் வந்தாயே
தாவிப்பாயும் மீனைப்போலே
நானும் ஆனேனே

பெண்: விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை
உன்னில் இங்கே கண்டேனே

ஆண்: கள்ளில் இல்லா இன்பம் உந்தன்
சொல்லில் இங்கே கண்டேனே

பெண்: லல லல லல லல

ஆண்: லல லல லல (இணைந்து பாடவும்)
ஆண்: சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
பெண்: ஆசை கொண்ட நெஞ்சம்
ரெண்டும் ஆடும் காலம்

*********************************

ஆண்: செந்நிலம் மேலே
தண்ணீர் சேர்ந்தது போலே

பெண்:ஆனது நெஞ்சம்
நீ என் வாழ்க்கையின் சொந்தம்

ஆண்: என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில்
நாளும் நீராடு

பெண்: கங்கை வெள்ளம் வற்றும் போதும்
காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும் போதும்
சிந்தை தேயாது

ஆண்: மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்
உன்மேல் அன்பு மாறாது
பெண்: உன்னையன்றி தென்றல் கூட
எந்தன் தேகம் தீண்டாது

ஆண்: லல லல லல லல

பெண்: லல லல லா… (இணைந்து பாடவும்)

பெண்: சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

ஆண்: புது நாணம் கொள்ளாமல் (பெண்: ப.. ப் பா )
ஒரு வார்த்தை இல்லாமல் (பெண்: ப.. ப் பா )
மலர்க்கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்

இருவரும்: சோலைப்பூவில் மாலைத்தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

*********************************

Saturday, March 2, 2019

ராஜ ராஜ சோழன் - (ரெட்டை வால் குருவி)

படம்: ரெட்டை வால் குருவி
இசை: இளையராஜா

*********************************

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

*********************************

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை மீட்டும் போது பாயும் மின்சாரமே

உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம்கள் சொல்லும் என் தாயகம்

இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மொகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

*********************************

கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே

வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுமே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுமே

முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே

தேனோடை ஒரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே
பொன் மேனி கேளாய் ராணி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

பூவே காதல் தீவே

*********************************