படம்: துடிக்கும் கரங்கள்
இசை: எஸ் பி பாலசுப்ரமணியம்
******************************************
பெண்: சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்
நீலாம்பரி கேட்கலாம்
ஆண்: சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்
நீலாம்பரி கேட்கலாம்
******************************************
ஆண்: மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள்
வான் தந்த காதல் சீதனம்
மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள்
வான் தந்த காதல் சீதனம் ஹா
பெண்: இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள்
இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள்
இசைவண்டு பாடும் மோகனம்
இசைவண்டு பாடும் மோகனம்
ஆண்: சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
பெண்: விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்
நீலாம்பரி கேட்கலாம்
******************************************
பெண்: நீ பார்க்கும் நேரங்கள்
நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன
நீ பார்க்கும் நேரங்கள்
நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன
ஆண்: இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு
இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு
உன் கண்கள் என்னை கொய்தன ஹா
உன் கண்கள் என்னை கொய்தன
பெண்: சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
ஆண்: விண்ணிலவு பாலூட்ட (பெண்: ஹா)
பெண்ணிலவு தாலாட்ட (பெண்: ஹா)
நீலாம்பரி கேட்கலாம் ஹா
நீலாம்பரி கேட்கலாம்
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...