தமிழில் தேட.....

Monday, May 20, 2019

வான் போலே வண்ணம் கொண்டு - சலங்கை ஒலி பாடல் வரிகள்



படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா

******************************************

பெண்:  வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
ஆஹா வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே
பல விந்தைகள் செய்பவனே

ஆண்: ஆ அ அ அ
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

******************************************

ஆண்:  மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக்கொண்டு திரிந்தாயே

மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக்கொண்டு திரிந்தாயே

பெண்: அன்னையின்றிப் தெரிந்தாயே
பெண்களோடு அலைந்தாயே
மோகனங்கள் பாடிவந்து மோகவலை விரித்தாயே

ஆண்:  ஆ அ அ

பெண்:  மோகனங்கள் பாடிவந்து
மோகவலை விரித்தாயே

ஆண்:  சேலைகளைத் திருடி
அன்று செய்த லீலை பலகோடி
பொன்னான காவியங்கள் போற்றிப்
பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

பெண்:  ஆ அ அ வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

******************************************

பெண்:  பெண்களுடை எடுப்பவனே
தங்கைக்குடை கொடுப்பவனே
பெண்களுடை எடுப்பவனே
தங்கைக்குடை கொடுப்பவனே

ஆண்: ராசலீலை புரிந்தவனே ராஜவேலை தெரிந்தவனே
கீதையெனும் சாரம் சொல்லி
கீர்த்தியினை வளர்த்தாயே

பெண்:  ஆ அ அ

ஆண்:  கீதையெனும் சாரம் சொல்லி
கீர்த்தியினை வளர்த்தாயே

பெண்: கவிகள் உனை வடிக்க
காலமெல்லாம் நிலைத்தாயே
வானில் உந்தன் கானமெல்லாம்
இன்றும் என்றும் வாழும் கண்ணா
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

ஆண்:  ஆ அ அ
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

பெண்: ஆஹா வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே

ஆண்:  ஆஹா வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே

பெண்: ஆ அ அ
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...