தமிழில் தேட.....

Tuesday, May 14, 2019

பூத்து பூத்து - கும்பக்கரை தங்கய்யா



படம்: கும்பக்கரை தங்கய்யா
இசை: இளையராஜா

******************************************

பெண்: ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ

ஆண்: பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்

பெண்: ஒரு அச்சாரம் தான்
வைக்காமலே ஹோ
புது மச்சான் வந்தான்
மச்சான் வந்தான் ஹோ

ஆண்: பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு

******************************************

பெண்: வைக்காத செந்தூரம் தான்
வச்சு வந்தேன் உன்னோடு நான்
இப்போது நீ
தந்தால் என்ன
முத்தாரம் தான்

ஆண்: வண்டாடும் கண்ணோரம் தான்
வஞ்சி இளம் பெண்ணோடு நான்
வந்தேனம்மா
கொண்டாடத்தான்
இந்நேரம் தான்

பெண்: மொட்டானதே
இளம் மேனி மேனி
தொட்டாடவே
வரும் மாமன் நீ

ஆண்: மேளம் ஒரு இடி இடிக்குது
வானம் புது குடை புடிக்குது
வா வா வா மானே

பெண்: பூத்து பூத்து
குலுங்குதய்யா பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்

ஆண்: ஒரு அச்சாரம் தான்
வைக்காமலே ஹோ
புது மச்சான் வந்தான்
மச்சான் வந்தான் ஹோ
பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ

******************************************

ஆண்: பட்டோட பொன்னாடத் தான்
பார்த்த மனம் உன்னோடு தான்
கட்டாமலே
எட்டாமலே
தள்ளாடுதே

பெண்: தோளோடு தோளாகத்தான்
மேலோடு மேலாகத் தான்
துள்ளாமலே
நில்லாமலே
வந்தான் மச்சான்

ஆண்: செம்மேனியா
செந்தாழம் பூவா
அது உன்மேனியா
ஹ பொன் மேனியா

பெண்: பார்த்தா
உடல் சிலு சிலுக்குது
பார்வை பட கிளுகிளுக்குது
வா வா வா மாமா

ஆண்: பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்
ஹஹ்ஹ மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்

பெண்: ஒரு அச்சாரம் தான்
வைக்காமலே ஹோ
புது மச்சான் வந்தான்
மச்சான் வந்தான் ஹோ

ஆண்: பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு
பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...