தமிழில் தேட.....

Monday, May 20, 2019

வான் மேகங்களே - புதிய வார்ப்புகள்



படம்: புதிய வார்ப்புகள்
இசை: இளையராஜா

******************************************

பெண்: வான் மேகங்களே
வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே

ஆண்: வான் மேகங்களே
வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் சீதையை
வான் மேகங்களே

******************************************

பெண்: பாலிலே பழம் விழுந்து
தேனிலே நனைந்ததம்மா
பாலிலே பழம் விழுந்து
தேனிலே நனைந்ததம்மா
பூவிலே மாலை கட்டி
சூடுவேன் கண்ணா
கூ குக்குகூ
குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன்

ஆண்: வான் மேகங்களே
வாழ்த்துங்கள் பாடுங்கள்

******************************************

ஆண்: தென்றலே ஆசை கொண்டு
தோகையை கலந்ததம்மா
தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா
தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே
மா அம்மம்மா
நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்

பெண்: வான் மேகங்களே
வாழ்த்துங்கள் பாடுங்கள்

******************************************

பெண்: பள்ளியில் பாடம் சொல்லி
கேட்க நான் ஆசை கொண்டேன்

ஆண்: பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே

பெண்: டாண் டண்டண்டான்
சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ

ஆண்: வான் மேகங்களே
வாழ்த்துங்கள் பாடுங்கள்

பெண்: நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...