தமிழில் தேட.....

Sunday, June 30, 2019

சங்கத் தமிழ்க் கவியே - மனதில் உறுதி வேண்டும் பாடல் வரிகள்



படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
சங்கத் தமிழ்க் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ

பெண்:
சங்கத் தமிழ்க் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ

ஆண்:
சங்கத் தமிழ்க் கவியே
ஏ ஏ ஏ ஏஏ ஏ

******************************************

பெண்:
மாதுளம் பூவிருக்க அதற்க்குள் வாசனைத் தேனிருக்க

ஆண்:
பாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க

பெண்:
காதலன் கண்ணுரங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க

ஆண்:
ஒரு புறம் நான் அணைக்க
ஆ ஆ ஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஒரு புறம் நான் அணைக்க
தழுவி மறு புறம் நீ அணைக்க

பெண்:
சாத்திரம் மீறியே கீர்த்தனம் பாட
சுகங்களில் லயிப்பவள் நான்
சங்கத் தமிழ்க் கவியே
சங்கத் தமிழ்க் கவியே

******************************************

பெண்:
பூங்குயில் பேதைத்தனைத் தேடத்தான் ஆண் குயில் பாடியதோ

ஆண்:
ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியதோ
பெண்:
காதலன் கைத்தொடத்தான்
காதலன் கைத்தொடத்தான் இந்தக் கண்களும் தேடியதோ

ஆண்:
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்

பெண்:
தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம் தினம் நான் தவித்தேன்

ஆண்:
சங்கத் தமிழ்க் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ

பெண்:
சங்கத் தமிழ்க் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ

ஆண்:
சங்கத் தமிழ்க் கவியே
ஏ ஏ ஏ ஏஏ ஏ

******************************************

புதிய பூவிது பூத்தது - தென்றலே என்னை தொடு பாடல் வரிகள்



படம்: தென்றலே என்னை தொடு
இசை: இளையராஜா

******************************************

ஆண் : புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பார்தது
தூது வந்ததோ
சேதி சொன்னதோ
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ஏன்

பெண் : புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பார்தது

******************************************

பெண் : ஜவ்வாது பெண்ணானது
இரண்டு செம்மீன்கள் கண்ணானது

ஆண் : பன்னீரில் ஒண்ணானது
பாச பந்தங்கள் உண்டானது

பெண் : என்ன சொல்லவோ
மயக்கம் அல்லவோ

ஆண் : கன்னி அல்லவோ
கலக்கம் அல்லவோ

ெண் : என்ன சொல்லவோ
மயக்கம் அல்லவோ

ஆண் : கன்னி அல்லவோ
கலக்கம் அல்லவோ

பெண் : தள்ளாடும் தேகங்களே
கோவில் தெப்பங்கள் போலாடுமோ

ஆண் : சத்தமின்றியே முத்தமிட்டதும்
கும்மாளம் தான் வா

பெண் : புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பார்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
தூது வந்ததோ சேதி சொன்னதோ
காதல் கொண்டதோ சொல்

ஆண் : புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பார்தது

******************************************

ஆண் : கல்யாணம் ஆகாமலே
ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது

பெண் : கூடாது கூடாதென
நாணம் காதோடு சொல்கின்றது

ஆண் : என்னை உன்னிடம்
இழுப்பதென்னவோ

பெண் : உள்ளமட்டிலும்
எடுப்பதென்னவோ

ஆண் : என்னை உன்னிடம்
இழுப்பதென்னவோ

பெண் : உள்ளமட்டிலும்
எடுப்பதென்னவோ

ஆண் : தண்டோடு பூவாடுது
வண்டு தாகங்கள் கொண்டாடுது

பெண் : உன்னை கண்டதும்
என்னை கண்டதும்
உண்டாகுமோ தேன்

ஆண் : புதிய பூவிது பூத்தது

பெண் : இளைய வண்டு தான் பார்தது

ஆண் : தூது வந்ததோ

பெண் : சேதி சொன்னதோ

ஆண் : தூது வந்ததோ

பெண் : சேதி சொன்னதோ

ஆண் : நாணம் கொண்டதோ ஏன்

பெண் : புதிய பூவிது பூத்தது

ஆண் : இளைய வண்டு தான் பார்தது

******************************************

ஏ‌பி‌சி நீ வாசி எல்லாம் - ஒரு கைதியின் டைரி பாடல் வரிகள்



படம்: ஒரு கைதியின் டைரி
இசை: இளையராஜா

******************************************

பெண்:
ஏ‌பி‌சி நீ வாசி எல்லாம்
என் கைராசி சோ ஈஸி

ஆண்:
ஏ‌பி‌சி நீ வாசி சோ ஈஸி உன் ராசி வா ரோஸி

பெண்:
அழகிய பள்ளியறை இது

ஆண்:
பள்ளியறை பள்ளி அறையா

பெண்:
பள்ளி வந்து சொல்லித் தர வந்தேன்

ஆண்:
சொல்லித் தந்து வரும் கலையா

பெண்:
ஏ‌பி‌சி நீ வாசி எல்லாம்
என் கைராசி சோ ஈஸி

******************************************

பெண்:
வரைமுறை என ஒன்று உண்டு
வாய் பொத்தி கேளுங்கள்

ஆண்:
புடவையும் மெல்ல விலகுது
ஏன் என்று பாருங்கள்

பெண்:
வரைமுறை என ஒன்று உண்டு
வாய் பொத்தி கேளுங்கள்

ஆண்:
புடவையும் மெல்ல விலகுது
ஏன் என்று பாருங்கள்

பெண்:
பார்வையை திருப்பிக்
கொண்டு (ஆண்: ல ல லா )
பாடங்கள் எழுதி விடு ல ல லா

ஆண்:
படிகிற வயசில்லையே (பெண்:ல ல லா )
படுக்கையை விரித்து விடு

பெண்:
என் பாடம் நான் சொல்ல

ஆண்:
பெண் பாடம் நான் சொல்ல
வா மெல்ல மெல்ல மெல்ல

பெண்:
ஏ‌பி‌சி நீ வாசி எல்லாம்
என் கைராசி சோ ஈஸி

******************************************

லலல லா லா லா
லலல லா லா லா
லலல ல லா லா ல லலலால
லலல ல லா லா ல லலலால

ஆண்:
இது ஒரு புது அனுபவம்
ஏழையின் சந்தோசம்

பெண்:
நுனி முதல் அடி வரையிலும்
பாய்ந்தது மின்சாரம்

ஆண்:
இது ஒரு புது அனுபவம்
ஏழையின் சந்தோசம்

பெண்:
நுனி முதல் அடி வரையிலும்
பாய்ந்தது மின்சாரம்

ஆண்:
உதட்டினில் இனிகிறதே (பெண்:ல ல லா )
கொடுத்தது பழ ரசமா அ ஆ ஆ

பெண்:
கொடுத்ததை திருப்பிக்
கொடு (ஆண்: அ ஆ ஆ)
அது என்ன இலவசமா

ஆண்:
ஆஹாஹா ஆரம்பம்

பெண்:
பூவுக்குள் பூகம்பம்

ஆண்:
தேன் சிந்தும் சிந்தும் சிந்தும்

பெண்:
ஏ‌பி‌சி நீ வாசி எல்லாம்
என் கைராசி சோ ஈஸி

ஆண்:
ஏ‌பி‌சி நீ வாசி சோ ஈஸி உன் ராசி வா ரோஸி

பெண்:
அழகிய பள்ளியறை இது

ஆண்:
பள்ளியறை பள்ளி அறையா

பெண்:
பள்ளி வந்து சொல்லித் தர வந்தேன்

ஆண்:
சொல்லித் தந்து வரும் கலையா

பெண்:
ஏ‌பி‌சி நீ வாசி எல்லாம்
என் கைராசி சோ ஈஸி

******************************************

Thursday, June 27, 2019

வா வா வசந்தமே - புதுக்கவிதை பாடல் வரிகள்



படம்: புதுக்கவிதை
இசை: இளையராஜா

******************************************

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

******************************************

ஆகாயமே எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ
பூ மேகமே எந்தன் கன்னம் தொட்டு போகுதோ
சோகம் போகும் உன் கண்கள் போதும்
சின்ன பாதம் நடந்ததால்
வலியும் தீர்ந்தது வழியும் தெரிந்தது ஓ

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

******************************************

என் வானிலே ஒரு தேவ மின்னல் வந்தது
என் நெஞ்சினை அது கிள்ளி விட்டுச் சென்றது
பாவை பூவை காலங்கள் காக்கும்
அந்த காதல் ரணங்களை
மறைத்து மூடுவேன்
சிரித்து வாழ்த்துவேன் ஓ

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

******************************************

Wednesday, June 26, 2019

குங்குமம் மஞ்சளுக்கு - எங்க முதலாளி பாடல் வரிகள்



படம்: எங்க முதலாளி
இசை: இளையராஜா

******************************************

குழு:
ஆ... ஆ
ஆஆ... ஆ... ஆஆ... ஆ...
ஆஆ... ஆ... ஆஆ... ஆ...


பெண்:
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்

ஆண்:
என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்

பெண்:
என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி

ஆண்:
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்

******************************************

ஆண்:
பூமேனி ஜாடை சொல்லும் கோலம் என்ன
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலம் என்ன

பெண்:
ஆசைக்கு நாணம் இல்லை தேடி வந்தேன்
பூஜைக்கு பாலும் பழம் கொண்டு வந்தேன்

ஆண்:
மஞ்சத்தில் உன்னை வைத்து சொர்க்கத்தை நான் வடிப்பேன்

பெண்:
நெஞ்சத்தில் உன்னை வைத்து இன்பத்தை நான் படித்தேன்

ஆண்:
ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே

பெண்:
பூத்தது மொட்டு ஒன்று சுகமே சுகமே

ஆண்:
எந்நாளும் இன்பம் ஒரு கோடி

பெண்:
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்

ஆண்:
என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி

பெண்:
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்

******************************************

ஆ... ஆ...ஆ...
ஆ...ஆ...ஆ...ஆ...

பெண்:
மார்கழி மாதத்தில் நான் ஆளானேன்
மாமனைத் தேடி தேடி நூலானேன்

ஆண்:
நூலை நான் மாலை ஆக்கி சூடட்டுமா
சூடாக முத்தக் கலை கூறடுமா

பெண்:
கூறான பார்வை என்னை வேலாக குத்துதய்யா

ஆண்:
வேலான விழிகள் என் மேல் பாயாமல் பாயுதம்மா

பெண்:
பாய்கின்ற பாதை எங்கும் சுகமே சுகமே

ஆண்:
பார்க்கின்ற பக்கம் எல்லாம் சுகமே சுகமே

பெண்:
எந்நாளும் இன்பம் ஒரு கோடி

ஆண்:
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்

பெண்:
என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....

ஆண்:
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்

பெண்:
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்

*************************************************

Tuesday, June 25, 2019

அந்த நிலாவ தான் - முதல் மரியாதை பாடல் வரிகள்



படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா

******************************************

பெண்:

அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக

அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக
அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக

ஆண்: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

பெண்: கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

ஆண்: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

பெண்: கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

ஆண்: அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக

******************************************

பெண்: மல்லு வேட்டி கட்டி இருக்கு
அதுமேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு

ஆண்: முத்தழகி கட்டி புடிச்சு
முத்தம் கொடுக்க மஞ்ச வந்து ஓட்டிகிடுச்சு

பெண்: மார்கழி மாசம்
பார்த்து மாருல குளிராச்சு

ஆண்: ஹும் ஏதுடா வம்பா போச்சு
லவிக்கையும் கிடையாது

பெண்: சக்கம்பட்டி சேலை கட்டி
பூத்திருக்கு பூஞ்சோல

ஆண்: பூவு ஒன்னு கண்ணடிச்சா
வண்டு வரும் பின்னால

பெண்: எக்கு தப்பு வேணாம் ஹும்ம் ஹும்ம்

ஆண்: அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக

பெண்: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

ஆண்: கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

பெண்: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

ஆண்: கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

பெண்: அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்

ஆண்: என் ராசாத்திக்காக

******************************************

ஆண்: ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா

பெண்: வெட்கத்தையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா

ஆண்: ஓடி வா ஓடை பக்கம் ஒதுங்கலாம் மெதுவாக

பெண்: அதுக்குள்ள வேணாமுங்க
ஆளுக வருவாக

ஆண்: காத்தடிச்சா தாங்காதடி
மல்லியை பூ மாராப்பு

பெண்: கையிருக்கு காவலுக்கு
வேணாமுங்க வீராப்பு

ஆண்: அடி போடி புள்ள எல்லாம் டூப்பு

பெண்: அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக
அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக

ஆண்: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

பெண்: கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

ஆண்: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

பெண்: கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

ஆண்: அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக

******************************************

Monday, June 24, 2019

தேவை இந்த பாவை - அந்த ஒரு நிமிடம் பாடல் வரிகள்



படம்: அந்த ஒரு நிமிடம்
இசை: இளையராஜா

******************************************

பெண்:
தேவை இந்த பாவை
தானே தெய்வ லோகம்
நான் தானே தினம் சாய்ந்தாடும்
தேர் போல வருவேன்
தேவை இந்த பாவை
நானே தெய்வ லோகம்

ஆண்:
ஹே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
ஹ ஹ ஹாஆஆஆஆ
அ அ அ அ ஆஆஆஆ
அ அ அ அ ஆஆஆஆ

ஹஹ்ஹா ஹ ஹா ஹ ஹா
ஹெஹ்ஹே ஹே ஹேஹ்ஹே
டர டர டர டராட்ட
தரா தரா தரா தரா

******************************************

ஆண்:
அழகே புது மலரே
அடியே இளங்கிளியே
இதழோ மது ரசமோ
முகமோ முழு நிலவோ
தொடுவேன் உன்னை தொடுவேன்
வருவேன் எனை தருவேன்
முறைத்தால் முகம் கெடுமே
சிரித்தால் சுகம் வருமே
அங்கங்கே அங்கங்கள் துடிக்க ஆ ஆ ஆ
என்னென்ன இன்பங்கள் படிக்க
எடுத்து கொடுக்க மானே
இங்கு வேடன் நானே
கண்ணி வைக்கும்
நாள் தானே இனி பாவங்கள் தூளாகும் பொழுது
ஹான் ராப்பா
பரப்ப ரபப்பா
ஹ ஹ ஹ ஹ
ரா ரா தராரே தரரா
தாகு தகு திகு

******************************************

ஆண்:
சரியா இது முறையா
தனிமை சுகம் தருமா?
இதழால் உன்னை தொடுவேன்
இளமைக் கனி பறிப்பேன்
அடித்தால் உன்னை அணைப்பேன்
துடித்தால் துணை இருப்பேன்
நெருப்பாய் வரும் நிலவே (ஏ ஏ ஏ)
சிரிப்பாய் ஒரு தரமே
வெட்கம் ஏன் பக்கம் வா பழக
ஆ ஆ ஆ
அம்மம்மா கண்ணம்மா சொல்லம்மா
இழுத்து அணைக்க
தத்த ரித்த ஜனு தகிட தீம்த ஜனு
ததீம் தோம்த ஜனு தகிடதோம்
தத்த ரித்த ஜனு தகிட தீம்த ஜனு
ததீம் தோம்த ஜனு தகிடதோம்
நிஸகம  பம  பம  பம  கரிஸ
கமபநி ஸநி ஸநி ஸநி தபம
ப நி ஸ க ரி ஸ
கம பஸ நிதப
ஸநிதப நிதபம,தபமக பமகரி மானே
இங்கு வேடன் நானே கண்ணி வைக்கும்
நாள் தானே இனி பாவங்கள்
ஹா ஹா ஹா ஹா தூளாகும் பொழுது
தா தூ து தகுதுக தகுதுக
மானே தராரே தாரா
ஹேய் ஹேய்
தார்ரா தரார்ரா ரபப்பா

******************************************

சிங்களத்து சின்னக் குயிலே - புன்னகை மன்னன் பாடல் வரிகள்



படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா

******************************************

ஆண் :
ஜிங்கள ஜிங்கள
ஜிங்கள ஜிங்கள ஜிங்கள
ஜிங்கள ஜிங்கள ஜிங்கள

பெண் :
ஜிங்கள ஜிங்கா
ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
கன்னம் வலிக்கும் கிள்ளாதே
கல்லுளி மங்கா
கூ

ஆண் : சிங்களத்து சின்னக்
குயிலே எனக்கு ஒரு மந்திரத்தை
சொல்லு மயிலே
சிங்களத்து சின்னக்
குயிலே எனக்கு ஒரு மந்திரத்தை
சொல்லு மயிலே
ஜிங்கள ஜிங்கா
ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா
ஜிங்கள ஜிங்கா
கூ

******************************************

ஆண் :
அன்பே நீ இன்றி அலைகள் ஆடாது
கண்கள் சாய்ந்தாலும் இமைகள் மூடாது
பூவே நீ இன்றி பொழுதும் போகாது
காதல் இல்லாமல் கவிதை வாழாது

பெண் :
ஆதரிக்க நல்ல இளைஞன்
மனம் விட்டு
காதலிக்க நல்ல கவிஞன்

ஆண் :
காதலிக்க வந்த கலைஞன்
இவன் என்றும்
தாவணிக்கு நல்ல தலைவன்

பெண் :
தடை ஏது தலைவா
இடை மேலே உடை நீயே
பூ மஞ்சம் நீ போட வா
எனக்கென்ன சிங்களத்து
சின்னக் குயில் நான் உனக்கொரு
மந்திரத்த சொல்லும் மயில் நான்
சிங்களத்து சின்னக் குயில் நான்
உனக்கொரு மந்திரத்த சொல்லும்
மயில் நான்

ஆண் : ஜிங்கள ஜிங்கா
ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா
ஜிங்கள ஜிங்கா
கூ

******************************************

பெண் :
நிலவே நான் தானா நிஜமா வீண் கேலி
உந்தன் மடி தானே நிலவின் நாற்காலி
ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி
காமன் பூச்சூடும் கலையில் நீ ஞானி

ஆண் :
ஆத்திரத்தில் தொட்டு வைக்கிறேன்
இருக்கட்டும்
ராத்திரிக்கு விட்டு வைக்கிறேன்

பெண் :
விட்டு விடு தத்தளிக்கிறேன்
என்னை விட்டு
எட்டி நில்லு எச்சரிக்கிறேன்

ஆண் :
பிடிவாதம் தகுமா
கொடி ஒன்று கனி ரெண்டு
வாங்காமல் தாங்காதம்மா

ஆண் :
சிங்களத்து சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்த
சொல்லு மயிலே சிங்களத்து
சின்னக் குயிலே எனக்கு ஒரு
மந்திரத்த சொல்லு மயிலே

பெண் :
ஜிங்கள ஜிங்கா
ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
கன்னம் வலிக்கும் கிள்ளாதே
கல்லுளி மங்கா
கூ

ஆண் :
ஜிங்கள ஜிங்கா
ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா
ஜிங்கள ஜிங்கா
கூ

******************************************

Sunday, June 23, 2019

மழை வருது மழை வருது - ராஜா கைய வெச்சா பாடல் வரிகள்



படம்: ராஜா கைய வெச்சா
இசை: இளையராஜா

******************************************

ஆண்: லாலால லாலால லாலா
லாலால லாலால லாலா
லாலா லாலாலலா
லல லாலா லாலலா
மழை வருது மழை வருது
குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்

பெண்: வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே

ஆண்: மழை போல் நீயே
பொழிந்தாய் தேனே

பெண்: மழை வருது மழை வருது
குடை கொண்டு வா

ஆண்: மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா

பெண்: மன்னா உன் பேரன்பிலே

ஆண்: மழை போல் நீயே
பொழிந்தாய் தேனே

பெண்: மழை வருது மழை வருது
குடை கொண்டு வா

ஆண்: மானே உன் மாராப்பிலே

******************************************

பெண்: இரவும் இல்லை

ஆண்: பகலும் இல்லை

பெண்: இணைந்த கையில்

ஆண்: பிரிவும் இல்லை

பெண்: சுகங்கள் யாவும்
அளந்து பார்போம்

ஆண்: நதிகள் மீதும்
நடந்து பார்ப்போம்
நதிகள் மீதும்
நடந்து பார்ப்போம்

பெண்: சுகங்கள் யாவும்
அளந்து பார்ப்போம்
உனது தோளில் நான் பிள்ளை போலே
உறங்க வேண்டும் கண்ணா வா

ஆண்: மழை வருது மழை வருது
குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்

பெண்: வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே

ஆண்: மழை போல் நீயே
பொழிந்தாய் தேனே

பெண்: மழை வருது மழை வருது
குடை கொண்டு வா

ஆண்: மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா

பெண்: மன்னா உன் பேரன்பிலே

******************************************

ஆண்: கடந்த காலம்

பெண்: மறந்து போவோம்

ஆண்: கரங்கள் சேர்த்து

பெண்: நடந்து போவோம்

ஆண்: உலகம் எங்கும்
நமது ஆட்சி

பெண்: நிலமும் வானும்
அதற்கு சாட்சி
நிலமும் வானும்
நமது ஆட்சி

ஆண்: உலகம் எங்கும்
அதற்கு சாட்சி
இளைய தென்றல் தாலாட்டு பாடும்
இனிய ராகம் கேட்கும் வா

பெண்: வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே ஹோய்

ஆண்: மழை வருது மழை வருது
குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே
மழை போல் நீயே
பொழிந்தாய் தேனே

பெண்: மழை வருது மழை வருது
குடை கொண்டு வா

ஆண்: மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா

பெண்: மன்னா உன் பேரன்பிலே

******************************************

காதல் கவிதைகள் - கோபுர வாசலிலே பாடல் வரிகள்



படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
காதல் கவிதைகள் படித்திடும்
நேரம் இதழோரம்
இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்
இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட

இருவரும்: இதம் தரும் காதல்

பெண்: கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்
இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்
இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட

இருவரும்: இதம் தரும் காதல்

ஆண்: கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்

******************************************

ஆண்: கைவீசிடும் தென்றல்
கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ
அமுதோ சிலையழகோ

பெண்: பண் பாடிடும் சந்தம்
உன் நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ
நதியோ கலையழகோ

ஆண்: மேகமொன்று நேரில் இங்கு
வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில்
சேர்த்துக் கொண்டதடி

பெண்: இது தொடரும் வளரும் மலரும்
இனிக் கனவும் நினைவும் உனையே

ஆண்: தொடர்ந்திடும்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்

பெண்: இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்

ஆண்: இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்

பெண்: அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட

ஆண்: இதம் தரும் காதல் கவிதைகள்
படித்திடும் நேரம்

பெண்: இதழோரம்
இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்

ஆண்: புது மோகம்

******************************************

பெண்: பூ மாலைகள் கொஞ்சும்
பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால்
அணைத்தால் அது இனிமை

ஆண்: தோள் சேர்ந்திடும் கங்கை
செவ்வாழையின் தங்கை
எனை ஒருநாள் பலநாள்
தொடர்ந்தால் அது புதுமை

பெண்: கோவிலுக்குள்
ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்குக்
காத்திருந்து காட்சி தந்ததோ

ஆண்: இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய்

பெண்: தினம்தினம்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்

ஆண்: இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்

பெண்: இதயம் இடம் மாறும்

ஆண்: ம்

பெண்: இளமை பரிமாறும்

ஆண்: அமுதும் வழிந்தோடும்

பெண்: ம்

ஆண்: அழகில் கலந்தாட

பெண்: இதம் தரும்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்

ஆண்: இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்

பெண்: புது மோகம்

******************************************

Thursday, June 20, 2019

இளங்காத்து வீசுதே - பிதாமகன் பாடல் வரிகள்



படம்: பிதாமகன்
இசை: இளையராஜா

******************************************


இளங்காத்து வீசுதே எசை போல பேசுதே
இளங்காத்து வீசுதே எசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே
கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் பிடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் பிடிக்குதே
மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல்
காத்தில் மிதக்குதே
இளங்காத்து வீசுதே எசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே

******************************************


பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சு இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னமடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல
யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல
இளங்காத்து வீசுதே எசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே

******************************************


ஓ… மனசுல என்ன ஆகாயம்
தினம்தினம் அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா
அதிசயத்தை யாரு புரிஞ்சா
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம்தோறும்
மலர் தொடுக்க நாரு எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே
தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல
கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் பிடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் பிடிக்குதே
மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல்
காத்தில் மிதக்குதே

******************************************

Wednesday, June 19, 2019

வராது வந்த நாயகன் - தாலாட்டுப்பாடவா பாடல் வரிகள்



படம்: தாலாட்டுப்பாடவா
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
முதா கராத்த மோதகம்
சதாவி முக்தி சாதகம்
கலா தராவ தம்சகம்
விலாசி லோக ரக்ஷகம்
அநாய கைக நாயகம்
விநாசி தேப்ர தைத்யகம்

பெண்:
நதா சுபாஷு நாஷகம்
நமாமி தம் விநாயகம்
முதா கராத்த மோதகம்
சதாவி முக்தி சாதகம்
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்

பெண்:
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிறந் தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிறந் தரம் நிறைந்தவன்

******************************************

ஆண்:
தொடாமலும் படாமலும்
உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும்
விடாது இந்த வாலிபம்

பெண்:
உன்னோடு தான் பின்னோடு தான்
வந்தாடும் இந்த மோகனம்
கையோடு தான் மெய்யோடு தான்
கொஞ்சாமல் என்ன தாமதம்

ஆண்:
உன் பார்வை யாவும் நூதனம்
பெண் பாவை நீ என் சீதனம்

பெண்:
உன் வார்த்தை அன்பின் சாசனம்
பெண் உள்ளம் உந்தன் ஆசனம்

ஆண்:
அள்ளாமலும் கிள்ளாமலும்
தள்ளாடும் இந்த பூவனம்

பெண்:
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிறந் தரம் நிறைந்தவன்

ஆண்:
வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

பெண்:
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்

ஆண்:
தராதரம் புரிந்தவன்
நிறந் தரம் நிறைந்தவன்

பெண்:
லாலா லாலா லாலா லாலா
லாலா லாலா லாலா லாலா

******************************************

பெண்:
கல்யாணமும் வைபோகமும்
கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே
என் மாலை உந்தன் தோள் வரும்

ஆண்:
சல்லாபமும் உல்லாசமும்
கண் காணும் நேரம் சோபனம்
சொல்லாமலும் கொள்ளாமலும்
திண்டாடும் பாவம் பெண்மனம்

பெண்:
இந்நேரம் அந்த நியாபகம்
உண்டாக நீயும் காரணம்

ஆண்:
கண்ணார நாமும் காணலாம்
செவ்வாழைப் பந்தல் தோரணம்

பெண்:
என் ஆசையும் உன் ஆசையும்
அந்நாளில் தானே பூரணம்

ஆண்:
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிறந் தரம் நிறைந்தவன்

பெண்:
வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

ஆண்:
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்

பெண்:
தராதரம் புரிந்தவன்
நிறந் தரம் நிறைந்தவன்

******************************************

Tuesday, June 18, 2019

வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா - தாலாட்டுப்பாடவா பாடல் வரிகள்



படம்: தாலாட்டுப்பாடவா
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா

பெண் குழு:  ஆ ஆ ஆ ஆ

ஆண்:
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா
தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா

******************************************

பெண்:
உன்னை விட சொந்தம் எது
அன்பை விட சொர்க்கம் எது
உன்னை விட்டு நெஞ்சம் இது
எங்கே வாழப் போகின்றது

ஆண்:
கண்ணைத் தொட்டு வாழும் இமை
என்றும் தனியாகாதம்மா
உன்னையன்றி என் ஜீவன்தான்
இங்கே இனி வாழாதம்மா

பெண்:
உன்னோடு இல்லாத என்
வாழ்வு எப்போதும் ஏது ஏது

ஆண்:
ஒன்றான பின்னாலும் கண்மூட
நேரங்கள் ஏது ஏது

பெண்:
இது வானம் என வாழும் இனி மாறாது

ஆண்:
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா

******************************************

ஆண்:
சிந்தும் மழைச் சாரல் விழ
அங்கம் அதில் மோகம் எழ
சொந்தம் ஒரு போர்வை தர
சொர்க்கம் அது நேரில் வர

பெண்:
கன்னம் மது தேனைத் தர
கண்ணன் அதை நேரில் பெற
கன்னிக் குயில் தோளில் வர
இன்பம் சுகம் இங்கே வர

ஆண்:
எந்நாளும் இல்லாத எண்ணங்கள்
முன்னோட ஏக்கம் கூட

பெண்:
என்னுள்ளம் காணாத வண்ணங்கள்
வந்தாட தூக்கம் ஓட

ஆண்:
அலை போல மனம் ஓட புதுப் பண் பாட

பெண்:
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்ணுமணிதான் இளங்காளைய மறந்திடுமா
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்ணுமணிதான் இளங்காளைய மறந்திடுமா
தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்ணுமணிதான் இளங்காளைய மறந்திடுமா

******************************************

Monday, June 17, 2019

உன் பார்வையில் ஓராயிரம் - அம்மன் கோவில் கிழக்காலே பாடல் வரிகள்



படம்: அம்மன் கோவில் கிழக்காலே
இசை: இளையராஜா

******************************************

பெண்:
உன் பார்வையில் ஓராயிரம்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே

******************************************

பெண்: அசைத்து இசைத்தது
வளைக்கரம்தான்

ஆண்: இசைந்து இசைத்தது
புது ஸ்வரம் தான்

பெண்: சிரித்த சிரிப்பொலி
சிலம்பொலிதான்

ஆண்: கழுத்தில் இருப்பது
வலம்புரிதான்
இருக்கும் வரைக்கும்
எடுத்துக்கொடுக்கும்

பெண்: இருக்கும் வரைக்கும்
எடுத்துக்கொடுக்கும்

ஆண்: மனதை மயிலிடம்
இழந்தேனே

பெண்: மயங்கி தினம் தினம்
விழுந்தேனே

ஆண்: மறந்து

பெண்: இருந்து

ஆண்: பறந்து தினம் மகிழ

பெண்: உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே

******************************************

பெண்: அணைத்து நனைந்தது
தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய்
தனித்துப் பறந்தேன்
நினைக்க மறந்தாய்
தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகச்சிறை இருப்பாயோ
இருந்து
விருந்து
இரண்டு மனம் இணைய

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான்
எழுதுவேன்
காற்றில் நானே

******************************************

Sunday, June 16, 2019

கண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும் பாடல் வரிகள்



படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா

******************************************

கோரஸ்:
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்

பெண்:
கண்ணா வருவாயா
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை
நதியோரம் நடந்து
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்

கோரஸ்:
கண்ணா கண்ணா கண்ணா

******************************************

ஆண்:
ஆ. ஆ. ஆ. ஆ.
நீலவானும் நிலவும் நீரும்
நீயென காண்கிறேன்

பெண்":
உண்ணும் போதும்
உறங்கும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்

ஆண்:
கண்னன் வந்து நீந்திடாது
காய்ந்து போகும் பாற்கடல்

பெண்:
உன்னை இங்கு ஆடை போல
ஏற்றுக்கொள்ளும் பூவுடல்

ஆண்:
வேறில்லையே பிருந்தாவனம்

பெண்:
விடிந்தாலும் நம் ஆலிங்கணம்

ஆண்:
சொர்க்கம் இதுவோ
மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை
நதியோரம் நடந்து
மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்

******************************************

கோரஸ்:
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்

ஆண்:
மல்லிகைப் பஞ்சணையிட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம்  தீர்க்கவா
மல்லிகைப் பஞ்சணையிட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம் தீர்க்கவா

பெண்:
மன்மத மந்திரம் சொல்லி
வந்தனல் சுந்தரவள்ளி
ராகம்  சேர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி
வந்தனல் சுந்தரவள்ளி
ராகம்  சேர்க்கவா

ஆண்:
கொடி இடை ஒடிவதன் முன்னம்
மடியினில் எடுத்திடவா

பெண்:
மலர்விழி மயங்கிடும் வண்ணம்
மதுரசம் கொடுத்திடவா

ஆண்:
இரவு முழுதும் உறவு மழையிலே

பெண்:
இருவர் உடலும் நனையும் பொழுதிலே

ஆண்:
ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே

பெண்:
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்

ஆண்:
மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்

பெண்:
மாலை மலர்ச்சோலை
நதியோரம் நடந்து

ஆண்:
மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்

கோரஸ்:
கண்ணா கண்ணா  கண்ணா

******************************************

மாமரத்து பூ எடுத்து - ஊமை விழிகள் பாடல் வரிகள்



படம்: ஊமை விழிகள்
இசை: மனோஜ் க்யான்

******************************************

ஆண்:  மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம் விரைவில் அரங்கேறிடும்
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடவா

******************************************

ஆண்:  ஓ ஓ ஓ  ஓ ஓ ஓ ஓ
கோரஸ்: ஹோய்யா
ஆண்:  ஓ ஓ ஓ  ஓ ஓ ஓ ஓ
கோரஸ்: ஹோய்யா

பெண்: கூந்தலில் பூச்சூடினேன்
கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது.
ஆ ஆ ஆ
கூடவந்த நாணம் தடுக்குது
கூந்தலில் பூச்சூடினேன் கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது
ஆ ஆ ஆ
கூடவந்த நாணம் தடுக்குது

ஆண்: கடலோடு பிறந்தாலும்
இந்த அலைகள் ஏங்குது
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது

ஆண்:  மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடவா

******************************************

ஆண்: சித்திரப்பூவிழி பாரம்மா
சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா.
ஓ ஓ ஓ
முத்து ரதம் எனக்குத்தானம்மா
சித்திரப்பூவிழி பாரம்மா
சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா.
ஓ ஓ ஓ
முத்து ரதம் எனக்குத்தானம்மா

பெண்: உனக்காக உயிர் வாழ
இந்த பிறவி எடுத்தது
உயிரோடு உயிரான இந்த உறவு நிலைத்தது
மாமரத்து பூ எடுத்து மங்கை என்னை தேடிவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி ஓடிவா
கண்ணா புது நாடகம் விரைவில் அரங்கேறட்டும்

இருவரும்: மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடலாம்
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடலாம்

******************************************

Friday, June 14, 2019

சங்கீத வானில் சந்தோஷம் - சின்ன பூவே மெல்ல பேசு பாடல் வரிகள்



படம்: சின்ன பூவே மெல்ல பேசு
இசை: S A ராஜ்குமார்

******************************************

ஆண்: சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே
தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன்
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் எங்கெங்கும்
உன் மஞ்சம் தானே

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

******************************************

பெண்: ஆ ஆ ஆ ஆஹா ஆஹா ஆஹா ஆ ஆ ஆ
ஆனந்த ராகங்களில் நான்
ஆலாபனை செய்கிறேன்

ஆண்: வா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நான் உந்தன் கீதம் தன்னை
ஆராதனை செய்கிறேன்
கன்னங்களில் ஒரு வான் வண்ணமே
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே

பெண்: கண்ணா உந்தன் குழல் ராகங்களால்
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே

ஆண்: ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

******************************************

ஆண்: ஆ ஆ ஆ ஆஹா ஆஹா ஆஹா ஆ ஆ ஆ
பொன்மாலை வேளைகளில்
உன் வாசல் நான் தேடினேன்

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கண்ணென்னும் ஓடங்களில்
கரைதேடி நான் ஓடினேன்

ஆண்: கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே
காணும் முகம் இன்று எனை வா ட்டுதே

பெண்: கண் மைகளில் சுகம் வளர்கின்றதே
உன்னில் தினம் உடல் கரைகின்றதே

ஆண்: இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

பெண்: தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன்
காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் என்றென்றும்
உன் மஞ்சம் தானே

ஆண்: சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே

பெண்: இந்த ஏகாந்த வேளையில்
மௌனங்கள் தேடும்

ஆண்: என் காதல் பூமயிலே

******************************************

விழியிலே மணி விழியில் - நூறாவது நாள் பாடல் வரிகள்



படம்: நூறாவது நாள்
இசை: இளையராஜா

******************************************

ஆண்: விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்

பெண்: ம்ம் ம்ம்

ஆண்: உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்

ஆண்: விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்

பெண்: ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில்
நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்

******************************************

ஆண்: ஆ ஆஆ ஆ ஆ ஆஆ

ஆண்: கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது

பெண்: ஆ அஹஹ்ஹ

ஆண்: கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது (பெண்: ஹாஹா -சிரிப்பு overlap)

ஆண்:
இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்
இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே

பெண்: விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்

ஆண்: பா பா பா பா…

பெண்: னா னா னா னா

******************************************

பெண்: காதல் தேவன் உந்தன்
கைகள் தீட்டும் நகவரி

ஆண்: ஆஹா

பெண்:
காதல் தேவன் (ஆண்: ஹாஹா - overlap சிரிப்பு)
உந்தன் கைகள் தீட்டும் நகவரி
இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி
மடியில் தூங்க ஆதரி
விடிய விடிய என் பேரை உச்சரி
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்

ஆண்: ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில்
நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்

******************************************

Thursday, June 13, 2019

காதோரம் லோலாக்கு - சின்ன மாப்ளே பாடல் வரிகள்



படம்: சின்ன மாப்ளே
இசை: இளையராஜா

******************************************

பெண்:
காதோரம் லோலாக்கு கத சொல்லுதையா
காத்தாடும் மேலாக்கு ஒன பின்னுதையா

ஆண்:
காதோரம் லோலாக்கு கத சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு எனை பின்னுதடி

பெண்:
ஓம் முகத்த பாக்கையில
ஏம் முகத்த நான் மறந்தேன்

ஆண்:
காதோரம் லோலாக்கு கத சொல்லுதடி
காதோரம் லோலாக்கு

******************************************

பெண்:
நான் விரும்பும் மாப்பிளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
நான் விரும்பும் மாப்பிளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
வந்தாயே நீயும் வாசலத் தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி

ஆண்:
உன்னாட்டம் தான் தங்கத் தேரு
கண்டதில்ல எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி

பெண்:
நீ தொடத் தானே நான் பொறந்தேன்
நாளொரு வண்ணம் நான் வளந்தேன்

ஆண்:
காதோரம் லோலாக்கு கத சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு எனை பின்னுதடி

பெண்:
காதோரம் லோலாக்கு கத சொல்லுதையா
காதோரம் லோலாக்கு

******************************************

ஆண்:
வான வில்ல வெல கொடுத்து
வாங்கிடத் தான் காசிருக்கு
வான வில்ல வெல கொடுத்து
வாங்கிடத் தான் காசிருக்கு
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நானொரு ஏழை

பெண்:
எந்நாளும் நான் உந்தன் சொத்து
இஷ்டம் போல அள்ளிக் கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னத் தட்டு

ஆண்:
நானதுக்காக காத்திருந்தேன்
நீ வரும் பாத பாத்திருந்தேன்

பெண்:
காதோரம் லோலாக்கு கத சொல்லுதையா
காத்தாடும் மேலாக்கு ஒன பின்னுதையா

ஆண்:
ஓம் முகத்த பாக்கையில
ஏம் முகத்த நான் மறந்தேன்

பெண்:
காதோரம் லோலாக்கு கத சொல்லுதையா
காத்தாடும் மேலாக்கு ஒன பின்னுதையா

ஆண்:
காதோரம் லோலாக்கு கத சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு எனை பின்னுதடி

******************************************

ஒரு மைனா மைனா குருவி - உழைப்பாளி பாடல் வரிகள்



படம்: உழைப்பாளி
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
ஒரு மைனா மைனா குருவி
மனசார பாடுது மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ
சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல
ரெண்டல்ல வண்ண மீன்கள்

மெல்ல காதலிக்க எங்கெங்கோ
சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல
ரெண்டல்ல வண்ண மீன்கள்

பெண்:
ஒரு மைனா மைனா
குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய்
அது நைசா நைசா தழுவி
நதி போல ஆடுது ஜோடியை கூடுது
ஹோய் ஹோய்

******************************************

ஆண்:
மேல்நாட்டில் பெண்களிடம்
பார்க்காத சங்கதியை
கீழ்நாட்டில் பார்க்கும் பொழுது

பெண்:
அதை பாராட்டி பாட்டு எழுது

ஆண்:
பாவடை கட்டி கொண்ட
பாலாடை போலிருக்க
போராடும் இந்த மனது

பெண்:
இது பொல்லாத காளை வயது

ஆண்:
சின்ன பூச்சரமே ஒட்டிக்கோ
கட்டிக்கோ என்னை சேர்த்து
இன்னும் தேவை என்றால் ஒத்துக்கோ
கத்துக்கோ என்னை கெட்டு

பெண்:
ஒரு மைனா மைனா
குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய்

ஆண்:
அது நைசா நைசா
தழுவி நதி போல ஆடுது
ஜோடியை கூடுது
ஹோய் ஹோய்

******************************************

பெண்:
ஏதேனும் வேணும் என்றால்
காதோரம் மெல்லக் கடி
ஏராளம் அள்ளி தருவேன்...

ஆண்:
அது போதாமல் மீண்டும் வருவேன்

பெண்:
நான் தானே நீச்சல் கோலம்
நாள்தோறும் நீயும் வந்து
ஓயாமால் நீச்சல் பழகு

ஆண்:
அடி தாங்காது உந்தன் அழகு

பெண்:
அன்பு காயமெல்லாம் இன்றைக்கும்
என்றைக்கும் இன்பமாகும்
அன்பின் நேரம் எல்லாம்
இஷ்டம்போல் கட்டத்தான் இந்த தேகம்

ஆண்:
ஒரு மைனா மைனா குருவி
மனசார பாடுது மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய்

பெண்:
மெல்ல காதலிக்க எங்கெங்கோ
சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல
ரெண்டல்ல வண்ண மீன்கள்

ஆண்:
மெல்ல காதலிக்க எங்கெங்கோ
சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல
ரெண்டல்ல வண்ண மீன்கள்

பெண்:
ஒரு மைனா மைனா குருவி
மனசார பாடுது மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய்

ஆண்:
அது நைசா நைசா தழுவி
நதி போல ஆடுது ஜோடியை கூடுது
ஹோய் ஹோய்

******************************************

Wednesday, June 12, 2019

மானின் இரு கண்கள் கொண்ட - மாப்பிள்ளை பாடல் வரிகள்



படம்: மாப்பிள்ளை
இசை: இளையராஜா

******************************************

கோரஸ்:
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜம் ஜா
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜம் ஜா


ஆண்:
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே

பெண்:
உள்ளதெல்லாம்
அள்ளித் தரவா வா வா
வஞ்சி என்றும் வள்ளலல்லவா
காதல்
மல்லிகை வண்டாட்டம்தான்
போடு நீ கொண்டாட்டம்தான்

ஆண்:
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே

பெண்:
நன நன..நன்னா நன்னா.
நன நன..நன்னா நன்னா.

******************************************

ஆண்:
முக்குளித்து முத்தெடுத்து
சொக்கத் தங்க நூலெடுத்து
வக்கணையாய் நான் தொடுத்து
வண்ணமொழி பெண்ணுக்கென காத்திருக்க

பெண்:
மைகுழலில் பூ முடித்து
மங்கலமாய் பொட்டு வைத்து
மெய்யணைக்க கையணைக்க
மன்னவனின் நல்வரவை
பார்த்திருக்க

ஆண்:
இன்னும் ஒரு ஏக்கம் என்ன
என்னைத் தொடக் கூடாதா

பெண்:
உன்னைத் தொட தேனும் பாலும்
வெள்ளமென ஓடாதா

ஆண்:
முன்னழகும் பின்னழகும் ஆட
இளமை ஒரு முத்திரையை
வைப்பதற்கும் வாட
மயக்கும் இள
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே

பெண்:
ஜூஜூஜூஜூ ஜூஜூஜூஜூ ஜூஜூ ஜூஜூ
லலலல லலலல லலா லலா

******************************************

கோரஸ்:
இயாஹூ யா யா யா
இயாஹூ யா யா யா
இயாஹூ யா யா யா
இயாஹூ யா யா யா
இயாஹூ இயாஹூ இயாஹூ யா
இயாஹூ இயாஹூ இயாஹூ யா

பெண்:
ஊசியிலை காடிருக்க
உச்சிமலை மேடிருக்க
பச்சக்கிளி கூடிருக்க
பக்கம் வர வெக்கம் என்ன
மாமனுக்கு

ஆண்:
புல்வெளியில் மெத்தையிட்டு
மெத்தையிலே உன்னையிட்டு
சத்தமிட்டு முத்தமிட
உத்திரவு இட்டுவிடு நீயெனக்கு

பெண்:
அந்திப்பகல் மோகம் வந்து
அங்கும் இங்கும் போராட

ஆண்:
எந்தப்புறம் காணும் போதும்
அந்தப்புரம் போலாக

பெண்:
செங்கரும்பு சாரெடுக்கத்தானே
உனக்கு ஒரு சம்மதத்தைத்
தந்துவிட்டேன் நானே

ஆண்:
மயக்கும் இள
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே

பெண்:
உள்ளதெல்லாம்
அள்ளித் தரவா வா வா
வஞ்சி என்றும் வள்ளலல்லவா
காதல்
மல்லிகை வண்டாட்டம்தான்
போடு நீ கொண்டாட்டம்தான்

ஆண்:
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே

பெண்:
நநநந நநநந நநா நநா
லலலல லலலல லலா லலா
******************************************

காலையில் கேட்டது - செந்தமிழ்ப்பாட்டு பாடல் வரிகள்



படம்: செந்தமிழ்ப்பாட்டு
இசை: இளையராஜா & எம் எஸ் விஸ்வநாதன்

******************************************

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

******************************************

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும்
மின்னல்கள் பாய்ந்ததோ

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ

பெண் : தேவனின் கைவிரல் பாவை மேல் பட்டது

ஆண் : தேவியின் கண்விழி
பானம் தான் விட்டது

பெண் : புதுவித அனுபவம்

ஆண் : ஆ..ஆஹ ஹா

பெண் : முதல் முதல் அறிமுகம்

ஆண் : ஓ..ஓஹொ ஹோ..

பெண் : புது வித அனுபவம்
முதல் முதல் அறிமுகம்
தேனும் பாலும் தொட தொட ஊறுது

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

******************************************

பெண் : தூக்கம் கண்விட்டு
சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி

பெண் : தூக்கம் கண்விட்டு
சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி

ஆண் : ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி

பெண் : காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி

ஆண் : ரகசியம் புரிந்தது

பெண் : ஆ..ஆஹ ஹா

ஆண் : அதிசயம் தெரிந்தது

பெண் : ஓ..ஓஹொ ஹோ..

ஆண் : ரகசியம் புரிந்தது
அதிசயம் தெரிந்தது
காற்றும் பூவும் கலந்துறவாடுது
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

******************************************

Tuesday, June 11, 2019

ஓ வானம்பாடி - சாதனை பாடல் வரிகள்



படம்: சாதனை
இசை: இளையராஜா

******************************************

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ அ ஆஅ ஆ
ஆஅ ஆஅ ஆஅ ஆ
ஆஅ ஆஅ ஆஅ ஆ
ஆஅ ஆஅ ஆஅ ஆ
ஆஅ ஆஅ ஆஅ ஆ

ஆ ஆ ஆ ஆ அ ஆஅ ஆ

ஆண்: ஓ வானம்பாடி உன்னை நாடி
எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
காண ஏங்கினேன் நாளும் வாடினேன்

பெண்: ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி

******************************************

ஆண்: போகமே என் யோகமே என் காதல் ராகமே
பெண்: கீதமே என் வேதமே என் ஜீவ நாதமே
ஆண்: பாவை உந்தன் பாதமே பாரிஜாதமே
பெண்: பாதை எங்கும் பூவனம் தாது தூவுமே
ஆண்: மண்ணில் சொர்க்கம் வந்ததே
பெண்: மார்பில் சாய்ந்து கொண்டதே
ஆண்: சிந்தாத முத்துக்கள்
செவ்வாயில் சிந்தக்கண்டேன் ஓ
வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி

பெண்: ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
ஆஅ ஆஅ ஆ


******************************************

பெண்: மன்னவன் கண் மூடினால்
என் வானில் ராத்திரி
ஆண்: மங்கையே உன் பார்வைதான்
என் வானில் வைகறை
பெண்: இன்பம் என்னும் வேதனை
இன்று பார்க்கிறேன்
ஆண்: நானும் கொஞ்சம் சோதனை
போட்டுப் பார்க்கிறேன்
பெண்: காற்று வந்து தீண்டுமோ
ஆண்: கற்பு என்ன ஆகுமோ
பெண்: பூங்காற்றும் தீண்டாமல்
நீ என்னை கட்டிக்கொள்வாய் ஓ
வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
காண ஏங்கினேன் நாளும் வாடினேன்

ஆண்: ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி

******************************************

ரோஜா ஒன்று முத்தம் - கொம்பேறி மூக்கன் பாடல் வரிகள்



படம்: கொம்பேறி மூக்கன்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
ரோஜா ஒன்று
முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும்
ஒன்றாய் இன்று சேரும்

பெண்:
மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து

ஆண்:
ரோஜா ஒன்று
முத்தம் கேட்கும் நேரம்

பெண்:
வானும் மண்ணும்
ஒன்றாய் இன்று சேரும்

******************************************

ஆண்:
தங்க மேனி தழுவும்
பட்டுச்சேலை நழுவும்

பெண்:
தென்றல் வந்து விளக்கும்
அது உங்களோடு பழக்கம்

ஆண்:
சொர்க்கம் எங்கே என்றே தேடி
வாசல் வந்தேன் மூடாதே

பெண்:
மேளம் கேட்கும் காலம் வந்தால்
சொர்க்கம் உண்டு வாடாதே

ஆண்:
அல்லிப்பூவின் மகளே
கன்னித்தேனை தா ஹோய்

பெண்:
ரோஜா ஒன்று
முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும்
ஒன்றாய் இன்று சேரும்

ஆண்:
மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று
முத்தம் கேட்கும் நேரம்

பெண்:
வானும் மண்ணும்
ஒன்றாய் இன்று சேரும்

******************************************

பெண்:
வெண்ணிலாவில் விருந்து
அங்கு போவோம் பறந்து

ஆண்:
விண்ணின் மீனை தொடுத்து
சேலையாக உடுத்து

பெண்:
தேகம் கொஞ்சம் நோகும் என்று
பூக்கள் எல்லாம் பாய் போட

ஆண்:
நம்மை பார்த்து காமன் தேசம்
ஜன்னல் சாத்தி வாயூற

பெண்:
கன்னிக்கோயில் திறந்து
பூஜை செய்ய வா ஹோய்

ஆண்:
ரோஜா ஒன்று
முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும்
ஒன்றாய் இன்று சேரும்

பெண்:
மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று
முத்தம் கேட்கும் நேரம்

ஆண்:
ம்‌ ம்‌ம்‌ம்‌
வானும் மண்ணும்
ஒன்றாய் இன்று சேரும்

******************************************

Wednesday, June 5, 2019

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட - உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் பாடல் வரிகள்



படம்: உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
இசை: இளையராஜா

******************************************

பெண்: ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ

பெண்: என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
அன்பே ஓடி வா அன்பால் கூட வா
ஓ பைங்கிளி
நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி

******************************************

பெண்: சொந்தம் பந்தம்
உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம்
என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி
நதி நீராட வரணும்
என்னை என்னை
நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத
இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு
என்னுயிரை தீயாக்கும்
மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு
அன்பே ஓடி வா
அன்பால் கூட வா
அன்பே ஓடி வா
அன்பால் கூட வா
ஓ பைங்கிளி நிதமும்

இருவரும்:என்னைத் தொட்டு

ஆண்: நெஞ்சைத் தொட்டு
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி

******************************************

ஆண்:  ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மஞ்சள் மஞ்சள்
கொஞ்சும் பொன்னான மலரே
ஊஞ்சல் ஊஞ்சல்
தன்னில் தானாடும் நிலவே
மின்னல் மின்னல்
கொடி போலாடும் அழகே
கண்ணல் கண்ணல்
மொழி நீ பாடு குயிலே
கட்டுக்குள்ள நிற்காது
திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே
அக்கறையும் இக்கரையும்
கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே
என்னில் நீயடி
உன்னில் நானடி
என்னில் நீயடி உன்னில் நானடி
ஓ பைங்கிளி
நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி
அன்பே ஓடி வா
அன்பால் கூட வா
ஓ பைங்கிளி
நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி

******************************************

Tuesday, June 4, 2019

கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச - என் ஜீவன் பாடுது பாடல் வரிகள்



படம்: என் ஜீவன் பாடுது
இசை: இளையராஜா

******************************************

ஆண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

இந்த நேரம்
பொன்னான நேரம் ஓ ஓ ஓ
வந்த கல்யாண காலம் ஆ ஆ
இந்த பொன்னான நேரம் ஓ ஓ ஓ
வந்த கல்யாண காலம் ஆ ஆ
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

பெண்: தனியா தவம் இருந்து
இந்த ராசாத்தி கேட்டதென்ன
மனம் போல் வரம் கொடுத்து
இந்த ராசாவும் வந்ததென்ன

******************************************

ஆண்: கன்னி மலர்களை நான் பறிக்க
பெண்: இன்பக் கலைகளை நான் படிக்க
ஆண்: கற்பு நிலைகளில் நான் பழக
பெண்: அன்பு உறவினில் நான் மயங்க
ஆண்: கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க
பெண்: மொட்டு மலர்ந்தது தேன்
கொடுக்க தேன் கொடுக்க

ஆண்: மாறாது இது மாறாது
பெண்: தீராது சுவை தீராது

ஆண்: ஆயிரம் காலமே

பெண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

******************************************

பெண்: அந்த சொகத்துக்கு நேரம் உண்டு
இந்த உறவுக்கு சாட்சி உண்டு
ஆண்: தொட்டு தொடர்வது சொந்தமம்மா
தொட்டில் வரை வரும் பந்தமம்மா

பெண்: அன்புக் கரங்களில்
நீ அணைக்க நீ அணைக்க
ஆண்: முத்துச் சரமென நீ சிரிக்க சிரிக்க

பெண்: மாறாது இது மாறாது
ஆண்: தீராது சுவை தீராது
பெண்: ஆயிரம் காலமே …
ஆண்: கட்டி வச்சிக்கோ எந்தன்
அன்பு மனச (பெண்: ஆஹ்)
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

பெண்: இந்த பொன்னான நேரம் ஓஓ
வந்த கல்யாண காலம் ஓஓ
இந்த பொன்னான நேரம் ஓஓ
வந்த கல்யாண காலம் ஓஓ

ஆண்: கட்டி வச்சிக்கோ எந்தன்
அன்பு மனச (பெண்: ம்ம்ஹ்)
தொட்டு வச்சிக்கோ உந்தன்
சொந்த மனச (பெண்: ஆஹ்)

பெண்: கட்டி வச்சிக்கோ எந்தன்
அன்பு மனச (ஆண்: ஏய்)
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

******************************************

என்ன சத்தம் இந்த நேரம் - புன்னகை மன்னன் பாடல் வரிகள்



படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா

******************************************

என்ன சத்தம் இந்த நேரம்
குயிலின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம்
நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா
அடடா ஆ ஆ ஆ
என்ன சத்தம் இந்த நேரம்
குயிலின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம்
நதியின் ஒலியா

******************************************

கன்னத்தில் முத்தத்தின் ஈரம்
அது காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணீர்
அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால்
மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள்
ஒரு பூப்போலே

மன்னவனே உன் விழியால்
பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள்
ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ

என்ன சத்தம் இந்த நேரம்
குயிலின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம்
நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா
அடடா. ஆ ஆ ஆ

என்ன சத்தம் இந்த நேரம்
குயிலின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம்
நதியின் ஒலியா

******************************************

கூந்தலில் நுழைந்த கைகள்
ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை
அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை
அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும்
ஓசை இசையாகாதோ

மங்கையிவள் வாய் திறந்தால்
மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை
உச்சரித்தே பேசும்
யாரிவர்கள்
இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்

என்ன சத்தம் இந்த நேரம்
குயிலின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம்
நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா
அடடா ஆ ஆ ஆ

என்ன சத்தம் இந்த நேரம்
குயிலின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம்
நதியின் ஒலியா

******************************************

Monday, June 3, 2019

ஒரு மைனா குஞ்சு - ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி பாடல் வரிகள்



படம்: ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
ஒரு மைனா குஞ்சு மாதுளம் பிஞ்சு
மாமனை கொஞ்ச வந்தாளாம் டண்டக்கு டண்டான்
டண்டண்டான் டண்டக்கு டண்டான்
அவ நைசா பேசி செவ்விள நீரும்
தேன்கனி சாரும் தந்தாளாம்
டண்டக்கு டண்டான்
டண்டண்டான் டண்டக்கு டண்டான்
வானம் வெளுக்கும் ஹோய்
நேரம் வரைக்கும் ஹோய்
மோக கடலில் ஹோய்
நெஞ்சம் மிதக்கும் ஹோய்
மைனா குஞ்சு
மைனா குஞ்சு மைனா குஞ்சு
யம்மம்மமம்மா
மைனா குஞ்சு மாதுளம் பிஞ்சு
மாமனை கொஞ்ச வந்தாளாம் டண்டக்கு டண்டான்
டண்டண்டான் டண்டக்கு டண்டான்
அவ நைசா பேசி செவ்விள நீரும்
தேன்கனி சாரும் தந்தாளாம்
டண்டக்கு டண்டான்
டண்டண்டான் டண்டக்கு டண்டான்

******************************************

பெண்:
மிஞ்சு சத்தம் மெட்டி சத்தம்
கொஞ்ச கொஞ்ச தேடி வந்தது
யார யார யார
அது யார யார யார
பொட்டு வச்சு எட்டு வச்சு
வக்கணையா கூட வந்தது
யார யார யார
அது யார யார யார

ஆண்:
தேடி தவிச்சது யாரடி..
மூடி மறச்சத கூறடி
சோடி கிளி ரெண்டும் சேர்ந்துச்சா....ம்
சோக.... கதயங்கு தீர்ந்துச்சாம்
பெண்: ஏ கேட்டாக்க சொல்லிடுவாளாம்
ஊர்ப்பார்க்க சேர்ந்திடுவாளாம்
மாமா மாமா மாமாமாமா

பெண்:
மைனா குஞ்சு மாதுளம் பிஞ்சு
மாமனை கொஞ்ச வந்தாளாம் டண்டக்கு டாண்டான்
டண்டண்டாண் டண்டக்கு டண்ட ன்
அவ நைசா பேசி செவ்விள நீரும்
தேன்கனி சாரும் தந்தாளாம்
டண்டக்கு டண்டான்
டண்டண்டாண் டண்டக்கு டண்ட ன்

******************************************

ஆண்:
சொல்ல சொல்ல வாயெடுத்து
சொல்லாமலே திண்டாடுது
பொண்ணு பொண்ணு பொண்ணு
சின்ன பொண்ணு பொண்ணு பொண்ணு
உள்ளுக்குள்ளே உள்ளதெல்லாம் தன்னாலே
தான் சொல்லிடுச்சு கண்ணு கண்ணு கண்ணு
ரெண்டு கண்ணு கண்ணு கண்ணு

பெண்:
பொண்ணா பொறந்தவ யாருமே ஏ ஏ
கண்ணால் சொல்வது நியாயமே
வந்தா அதுக்கொரு நேரமே ஏ
விளங்கும் ரகசியம் யாவுமே

ஆண்:
ஏ தேனான சங்கதி ஒண்ணு
நான் கேட்க சொல்லடி கண்ணு
யம்மா யம்மா யம்ம்மம்ம்ம்மா
மைனா குஞ்சு

பெண்:
மாதுளம் பிஞ்சு
மாமனை கொஞ்ச வந்தாளாம் டண்டக்கு டண்டான்
டண்டண்டான் டண்டக்கு டண்டன்
அவ நைசா பேசி செவ்விள நீரும்
தேன்கனி சாரும் தந்தாளாம்
டண்டக்கு டண்டான்
டணடண்டன் டண்டக்கு டண்டன்
வானம் வெளுக்கும் ஹோய்
நேரம் வரைக்கும் ஹோய்
மோக கடலில் ஹோய்
நெஞ்சம் மிதக்கும் ஹோய்
மைனா குஞ்சு
மைனா குஞ்சு மைனா குஞ்சு மாமாம்மம்மமம்மா
மைனா குஞ்சு
மாதுளம் பிஞ்சு
மாமனை கொஞ்ச வந்தாளாம் டண்டக்கு டண்டான்
டண்டண்டன் டண்டக்கு டண்டன்
ஆண்: அவ நைசா பேசி செவ்விள நீரும்
தேன்கனி சாரும் தந்தாளாம்
டண்டக்கு டண்டன்
டண்டண்டன் டண்டக்கு டண்டன்

******************************************

Sunday, June 2, 2019

செண்பகமே செண்பகமே - எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல் வரிகள்



படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை: இளையராஜா

******************************************

பெண்:
பட்டுப் பட்டு பூச்சி போல
எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனச
வாசம் வரும் மல்லிகையும்
தொட்டுத் தொட்டு நான் கறக்க
துடிக்குதந்த செண்பகமே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

******************************************

பெண்:
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
ஒம்மேலே ஆசைப்பட்டு
பாத்து காத்து நின்னேனே

உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
ஒம்மேலே ஆசைப்பட்டு
பாத்து காத்து நின்னேனே

ஒம் முகம் பார்த்து
நிம்மதி ஆச்சு
எம் மனம் தானா
பாடிடலாச்சு

என்னோட பாட்டு சத்தம்
தேடும் ஒன்னை பின்னாலே
எப்போதும் உன்னை தொட்டு
பாடப்போறேன் தன்னாலே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

******************************************

பெண்:
மூணாம்பிறையைப் போல
காணும் நெத்தி பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட

மூணாம்பிறையைப் போல
காணும் நெத்தி பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட

கருத்தது மேகம்
தலை முடி தானோ
இழுத்தது என்ன
பூவிழி தானோ

எள்ளுபூ நாசி பத்தி
பேசிப் பேசி தீராது

ஆண்: ஒம் பாட்டுக்காரன் பாட்டு
ஒன்னை விட்டுப் போகாது

ஆண்: செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
ஆண்: தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே

ஆண்: செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

******************************************

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு - குரு சிஷ்யன் பாடல் வரிகள்



படம்: குரு சிஷ்யன்
இசை: இளையராஜா

******************************************

ஆண்: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
இங்க என்னடி உன் மனக்கணக்கு
சொல்லடி சொல்லடி எனக்கு
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
இங்க என்னடி உன் மனக்கணக்கு
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு

******************************************

பெண்: அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது
அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது

ஆண்: ஏ கொஞ்சிக் கொஞ்சி நான் கொண்டாடிடும்
என் வஞ்சிக் கொடி நீ மிஞ்சாதடி
சிந்தாதடி இங்கு சில்லறைய
என் சிந்தாமணி அது செல்லாதடி

பெண்: ஆண்களுக்குத்தான் இங்கு என்ன இருக்கு
நல்ல பெண்ணைத் தவிர இந்த உலகத்திலே

ஆண்: அதைச் சொல்லாதே சொர்ணக் கிளியே

பெண்: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு உந்தன் கணக்கு
சொல்லிடு சொல்லிடு எனக்கு
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
என் வீர மகராஜா அடடடட
ஊரைச் சுத்தலாமா
என் வீர மகராஜா அடடடட
ஊரைச் சுத்தலாமா

******************************************

ஆண்: துரத்தித் துரத்தி
விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து இழுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும்
எண்ணம் இல்லையே ஹோய்
துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து இழுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே

பெண்: ஊர்க்காவலா நான் உன் காதலி
நீ ஊர் மேயவா உந்தன் பின்னால் வந்தேன்
காதல் கிளி எந்தன் காவல் உண்டு
சிறு மோதல் என்றால் இங்கு ரெண்டில் ஒன்று

ஆண்: பாமாவுக்கு நான் கண்ணனடி
நல்ல மாமி வீட்டு மகராஜனடி
என்னைச் சீண்டாதே செல்லக் கிளியே

பெண்: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு உந்தன் கணக்கு

ஆண்: அட சொல்லடி சொல்லடி எனக்கு
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு

பெண்: என் வீர மகராஜா அடடடட
ஊரைச் சுத்தலாமா

ஆண்: சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா ஆ

பெண்: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு உந்தன் கணக்கு

ஆண்: அட ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு

******************************************