தமிழில் தேட.....

Thursday, October 31, 2019

கொண்டையில் தாழ்ம்பூ- அண்ணாமலை பாடல் வரிகள்



படம்: அண்ணாமலை
இசை: தேவா

******************************************

குழு:
பாபபப்ப பாபபப்ப பப்பபா
பாபபப்ப பாபபப்ப பப்பபா
பபபபப்பா பபப்பா பபப்பா
பபபபப்பா பபப்பா பபப்பா

ஆண்:
கொண்டையில் தாழ்ம்பூ
நெஞ்சிலே வாழப் பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ ஆ
கொண்டையில் தாழ்ம் பூ நெஞ்சிலே வாழப் பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ
ஒன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லாம் உன் பேச்சு தானடி
அல்லி ராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா

பெண்:
வீரத்தில் மன்னன் நீ
வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி
உண்மைக்கு பேர் சொல்லும் மனிதனே
நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞனே
மின்னல் போல நீ வந்து நின்றால்
கூட்டம் கை தட்டுமே கோடி பூக்கள் கொட்டுமே

ஆண்:
கொண்டையில் தாழ்ம்பூ
நெஞ்சிலே வாழப் பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ

குழு:
பா பாபாபாபா பா பாபாபாபா
பா பாபாபாபா பா பாபாபாபா

******************************************

ஆண்:
பஞ்சு மெத்த கால்
மொளச்சி நடந்து வந்தது போல
நீ சுத்தி வந்து இழுக்குறியே
சும்மா கெடந்த ஆள
ஆ அஹா ஏ எ அஹா

பெண்:
கன்று கண்டா
கயிரறுக்கும் காரா பசுவப் போல
நீ எதுக்க வந்தா ஒதுங்குதையா
இழுத்து கட்டிய சேல

ஆண்:
கண்டாங்கிச் சேலையாக மாறவா
ஓங்கண்ணாடி மேனி தொட்டு மூடவா

பெண்:
கல்யாணத் தாலி கட்டிப் புட்டு
கட்டில் மேல் ஆடு ஜல்லிக் கட்டு

ஆண்:
ஆனி வந்தா தாலி வந்து
கட்டுவேன் சத்தியம் இன்னும் என்ன பத்தியம்

பெண்:
வீரத்தில் மன்னன்
நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி

******************************************

பெண்:
மின்னல் போல நீ
நடக்கும் சுறுசுறுப்ப பாத்து
ஜன்னல் திறந்து கொண்டதையா
சனிக்கிழம நேத்து
ஆ ஆஹா ஹா

ஆண்:
தாஜ்மகால் நடந்து வந்து
தழுவிக் கொண்டத பாத்து
அடி தண்ணியாக வேர்த்துப் போச்சு
சட்டை எல்லாம் நேத்து

பெண்:
உன் கண்ணில் காந்த சக்தி உள்ளது
அது என் கண்ணை வந்து வந்து கிள்ளுது

ஆண்:
கண்ணுக்குள் பார்த்தேன் காதல் மச்சம்
கல்யாணம் ஆனால் இன்னும் சொச்சம்

பெண்:
அந்த யோகம் வந்து சேர்ந்தால்
கண்களும் தூங்குமா கட்டில் என்ன தாங்குமா

ஆண்:
குஷ்பூ குஷ்பூ குஷ்பூ
கொண்டையில் தாழ்ம் பூ நெஞ்சிலே வாழப் பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ
ஒன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லாம் உன் பேச்சு தானடி
அல்லி ராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா

பெண்:
வீரத்தில் மன்னன்
நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி

******************************************

கண்ணன் ஒரு கை குழந்தை - பத்ரகாளி பாடல் வரிகள்



படம்: பத்ரகாளி
இசை: இளையராஜா

******************************************

பெண்:
கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மை விழியேதாலேலோ
மாதவனே தாலேலோ
கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம்சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என்மனதை

******************************************

ஆண்:
உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

பெண்:
உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

ஆண்:
ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சம் அம்மா

பெண்:
அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன் அருகில் நான் இருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது

ஆண்:
காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா

******************************************

பெண்:
மஞ்சள் கொண்டு நீராடி
மொய்குழலில் பூச்சூடி

ஆண்:
வஞ்சி மகள் வரும் போது
ஆசை வரும் ஒருகோடி

பெண்:
மஞ்சள் கொண்டு நீராடி
மொய்குழலில் பூச்சூடி

ஆண்:
வஞ்சி மகள் வரும் போது
ஆசை வரும் ஒருகோடி

பெண்:
கட்டழகன் கண்களுக்கு
மை எடுத்து எழுதட்டுமா
கண்கள் படக்கூடும் என்று
பொட்டு ஒன்றுவைக்கட்டுமா
கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை

ஆண்:
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என்மனதை

பெண்:
கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ

ஆண்: மை விழியே தாலேலோ

பெண்:
மாதவனே தாலேலோ
ஆராரிரோ

ஆண்: ஆராரிரோ
பெண்: ஆராரிரோ
ஆண்: ஆராரிரோ
இருவரும்: ஆராரா ரிரோ

******************************************

ஓ பட்டர் ஃப்லை (சோகம்) - மீரா பாடல் வரிகள்



படம்: மீரா
இசை: இளையராஜா

******************************************

ஓ பட்டர் ஃப்லை பட்டர் ஃப்லை
நீ எனக்கோர் குழந்தை

ஓ பட்டர் ஃப்லை பட்டர் ஃப்லை
நீ எனக்கோர் குழந்தை
அன்பே ஓ பட்டர்ஃப்லை பட்டர்ஃப்லை
நீ எனக்கோர் குழந்தை
மடியில் நான் உனைத் தாங்கி
படிப்பேனே புதிதாய் இனிதாய் கவிதை
ஓ பட்டர்ஃப்லை பட்டர்...ஃப்லை

******************************************

இருவர் வாழ்வில் இணையும்போது
விளையும் சோகங்கள்
இனிய காற்று வீசும்போது கலையும் மேகங்கள்
இலை உதிர்ந்த பின்பு மீண்டும்
பூக்கும் வசந்த காலங்கள்
அன்று உனது கண்கள் எழுதி
பார்க்கும் இளமை கோலங்கள்
இனிமேல் சொர்க்கம் தான்
அது நம் பக்கம் தான்
இணைந்தே புது பாடல்
இசைப்போம் குயிலே
பட்டர்ஃப்லை பட்டர்ஃப்லை
அன்பே ஓ பட்டர்ஃப்லை பட்டர்ஃப்லை

******************************************

அணைகள் தாண்டி அலைகள்
பாயும் நதிகள் அல்லவா
துணிவு என்னும் துணையை
கொண்டு விதியை வெல்லவா
இங்கு இனிமை பாதி கொடுமை
பாதி மனிதர் வாழ்விலே
என்றும் மழையும் தோன்றும்
வெயிலும் தோன்றும் நெடிய வானிலே
கலங்கும் கண்ணென்ன மயங்கும் நெஞ்சென்ன
நினைத்தால் நிறைவேறும்
திருநாள் வரலாம் பட்டர்ஃப்லை பட்டர்ஃப்லை
அன்பே ஓ பட்டர்ஃப்லை பட்டர்ஃப்லை
நீ எனக்கோர் குழந்தை
அன்பே ஓ பட்டர்ஃப்லை பட்டர்ஃப்லை
நீ எனக்கோர் குழந்தை
மடியில் நான் உனைத் தாங்கி
படிப்பேனே புதிதாய் இனிதாய் கவிதை
அன்பே ஓ பட்டர்ஃப்லை பட்டர்...ஃப்லை

******************************************

Wednesday, October 30, 2019

கண்மணியே பேசு - காக்கிச்சட்டை பாடல் வரிகள்



படம்: காக்கிச்சட்டை
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ

பெண்:  ஆஹா

ஆண்: உன் கண்கள் இரு ஊதாப்பூ
பெண்: ஹாஹ்

ஆண்:
இது பூவில் பூத்த பூவையோ
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

******************************************

ஆண்:
அந்தப்புறம் எந்தப்புறமோ விழி மையிட்டு
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு
அந்தப்புறம் எந்தப்புறமோ விழி மையிட்டு
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு

பெண்:
ஆயிரம் பொன் பூக்கும் எந்தன்
தேகம் எங்குமே

ஆண்:
லல லல லலலா

பெண்:
அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே

ஆண்:
லல லல லலலா
தோளிலும் என் மார்பிலும்
கொஞ்சிடும் என் அஞ்சுகம்
நான் நீ ஏது ஓய் ஓய்

பெண்:
கண்மணியே பேசு

ஆண்: ம்ம்

பெண்:
மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ

ஆண்: ஆஹ்

பெண்: என் கண்கள் இரு ஊதாப்பூ

ஆண்: ம்ம்

பெண்:
இது பூவில் பூத்த பூவையே
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

******************************************

பெண்:
உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்
சொல்லித் தருவேன் விழி மூடாமல்
உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்
சொல்லித் தருவேன் விழி மூடாமல்

ஆண்:
கண்களால் என் தேகம்
எங்கும் காயம் செய்கிறாய்

பெண்:
லல லல லலலா

ஆண்:
கைகளால் என் பாதம்
நீவி ஆறச் செய்கிறாய்

பெண்:
லல லல லலலா
வானகம் இவ்வையகம் யாவுமே
என் கையகம் நீதான் தந்தாய் ஓ ஓ…

ஆண்:
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

பெண்:
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

ஆண்:
கன்னங்கள் புது ரோசாப்பூ

பெண்: ஆஹா

ஆண்:
உன் கண்கள் இரு ஊதாப்பூ

பெண்:
இது பூவில் பூத்த பூவையே
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

******************************************

Friday, October 25, 2019

என்னைத் தொடர்ந்தது - மாமியார் வீடு பாடல் வரிகள்



படம்: மாமியார் வீடு
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா

பெண்:
தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது
முத்துச்சரமா ஒரு முல்லைச்சரமா

ஆண்:
ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை
வழியே தனித்து நான் நடக்க
என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா

******************************************

பெண்:
நாள்தோறும் நினைவில்
நான் வளர்த்தேன் கனவை
நீதானே மனதில் நான் சுமக்கும் சிலுவை

ஆண்:
தினமும் காலை மாலையும்
வணங்கும் தேவன் ஆலயம்
நாம் கொண்ட உறவைப்போற்றிடும்
நேசங்கள் விளங்க வாழ்த்திடும்

பெண்:
இதழ்த்தேன் வழங்க நான் மயங்க
தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது
முத்துச்சரமா ஒரு முல்லைச்சரமா
ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை
வழியே தனித்து நான் நடக்க

ஆண்:
என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா

******************************************

ஆண்:
கேட்காமல் உறவாய்
கிடைத்தவள் நீ எனக்கு
காற்றாய் நீ அணைக்க
கேள்வி எல்லாம் எதற்கு

பெண்:
பிறவி தோறும் கூடுவேன்
உறவு ராகம் பாடுவேன்
நீயின்றி எனது ஜீவிதம்
நீருக்குள் விழுந்த காகிதம்

ஆண்:
அந்த ஏழ் பிறப்பும் சேர்ந்திருக்க
என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வன மா

பெண்:
தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது
முத்துச்சரமா ஒரு முல்லைச்சரமா

ஆண்:
ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை
வழியே தனித்து நான் நடக்க
என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா
நந்தவனமா ஒரு சொந்த வனமா

******************************************

Thursday, October 24, 2019

பட்டுப் பூவே மெட்டுப் பாடு - செம்பருத்தி பாடல் வரிகள்



படம்: செம்பருத்தி
இசை: இளையராஜா

******************************************

பெண்:
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே

ஆண்:
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே

******************************************

ஆண்:
கைகளில் உன்னைத் தொடாமல்
கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல்
தாகம் நீங்குமா

பெண்:
காதலர் கைகள் படாமல்
காதல் ஏதய்யா
சித்திரப் பூவை உன்னோடு
சேர்த்துக் கொள்ளய்யா

ஆண்:
இதழ்களின் மேலே இதழ்களினாலே
கலைகளைத் தீட்டு சுபகொடி ஏற்று

பெண்:
மன்னவனே என் மன்மதனே
என்னைத் தொட்டு தொட்டு தழுவு

ஆண்:
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
பெண்:
கட்டி கலந்தாடி கவி பாட வா
ஆண்:
பட்டுப் பூவே

******************************************

பெண்:
மன்மத பாணம் இப்போது
பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம் இப்போது
நீங்கும் காலமே

ஆண்:
விண்ணுக்கு மேலே இல்லாத
சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கே கண்டேனே
இன்ப வேளையே

பெண்:
மது மொழிக் கேட்டு
மயங்குது நெஞ்சம்
மலர் மழைத் தூவி
அணைக்குது மஞ்சம்

ஆண்:
சின்னக் கிளி என் செல்லக் கிளி
என்னைத் தொட்டு தொட்டு தழுவ

பெண்:
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா

ஆண்:
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே

பெண்:
பட்டுப் பூவே மெட்டுப் பாடு

ஆண்:
கட்டி கலந்தாடி கவி பாட வா

ஆண்&பெண்: பட்டுப் பூவே

******************************************

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல - சின்ன மாப்ளே பாடல் வரிகள்



படம்: சின்ன மாப்ளே
இசை: இளையராஜா

*********************************

பெண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

ஆண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே


*********************************

பெண் :
மனசுல திறந்தது மணிக்கதவு
மரகத பதுமையை இனி தழுவு

ஆண் :
இடையில விழுந்தது இள மனசு
இருக்கிற சுகமது பல தினுசு

பெண் :
நாளெல்லாம் ராகம்
பாடுதே தேகம்

ஆண் :
வாழ்வெல்லாம் யோகம்
வாழ்த்துதே யாவும்

பெண் :
விதவிதமா விருந்து வச்சு
விழிவழியே மருந்து வச்சு
விரல் தொட அதில் பல
சுகம் வரும் பொழுதாச்சு

ஆண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

பெண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள


*********************************

ஆண் :
விழியிலே தெரியுது புது கணக்கு
விடியற வரையிலும் அது எனக்கு

பெண் :
தடைகளை கடந்தது மலையருவி
தனிமையை மறந்தது இளம் குருவி

ஆண் :
தேகமே தேனா
தேடினேன் நானா

பெண் :
மோகம்தான் வீணா
மூடுதே தானா

ஆண் :
தொடதொடதான் தொடர்கதையா
படப் படத்தான் பல சுவையா
அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா

பெண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

ஆண் :
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே
*********************************

Wednesday, October 23, 2019

நட்ட நடு கடல் மீது - செம்பருத்தி பாடல் வரிகள்



படம்: செம்பருத்தி
இசை: இளையராஜா

*********************************

ஆண்1:
கடலிலே தனிமையில் போனாலும்
ம்ம் ம்ம் ம்ம்ம்
கண்மணி உன் நினைவில் களைப்பாறுவேன்
அலைகளில் தத்தளித்தாலும்
அவள் நினைவில் முக்குளிப்பேனே
அடியே அமுதே இதுவே போதும்

ஆண்1:
நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து
நித்தம் உனை காணாது
நித்திரையும் தோணாது
சித்திரமே முத்து ரதமே
எட்டி எட்டி போனாலும்
கெட்டு மனம் போகாது
அற்புதமே அன்னக்கிளியே

ஆண்1:
பிரிந்தது உயிரல்ல உடல்தான்
விட்டு விலகாது உயிர் காதலே
கரையிலே கன்னி துடித்தாளே
கட்டுமரம் மீதில் காளை தவித்தானே
இதுதான் காதலில் இடைவேளை

*********************************

ஆண்1:
வந்தவர்கள் போனார்கள் போகாது காதல்
வங்கக் கடல் மீதாணை தேயாது காதல்
சுத்திவரும் புயலென்ன
கொட்டுகின்ற இடி என்ன
அன்பு விளக்கு என்றும் எரியும்
தெய்வத்துக்கு திரை என்ன
காதலுக்கு மறைவென்ன
உங்களுக்கு என்று புரியும்

ஆண்1:
ஆற்றிலே இக்கரையில் நின்று
அக்கரைக்கு தூது விட கூறலாம்
எண்ணத்தைச் சொல்ல நடு ஆழியில்
அன்னப்பறவையின் நான் எங்கு தேடுவேன்
அடியே அமுதே வருந்தாதே

*********************************

ஆண்2:
விட்டு இனி போகாது விடிவெள்ளி தூரம்
கட்டுமரம் கடலாடி கரையேறும் நேரம்
உப்பெடுக்கும் நேரம் ஒன்று
முத்தெடுக்கும் நேரம் இன்று
சித்திரமே செப்பு குடமே
கட்டுமுண்டு காவலுமுண்டு
நம்மை என்ன செய்யும் என்று
நித்திலமே முத்து ரதமே
நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து
நித்தம் உன்னை காணாது
நித்திரையும் தோணாது
சித்திரமே முத்துரதமே
எட்டி எட்டிப் போனாலும்
கெட்டு மனம் போகாது
அற்புதமே அன்னக்கிளியே

*********************************

Tuesday, October 22, 2019

கஸ்தூரி மானே கல்யாண - புதுமைப்பெண் பாடல் வரிகள்



படம்: புதுமைப்பெண்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே
கச்சேரி பாடு
வந்து கைத்தாளம் போடு
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப்பார்க்கும் நேரம் இது

பெண்:
ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து
சூடிப்பார்க்கும் நேரம் இது
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே
கச்சேரி பாடு
வந்து கைத்தாளம் போடு

*********************************
குழு:
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஆண்:
கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது
கண்ணே வெட்கத்தை விட்டு தள்ளு

பெண்:
கன்னம் புண்பட்டு வெட்கத்தை நீ தொட்டு
நெற்றி பொட்டொன்று வைத்துக்கொள்ளு

ஆண்:
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூரும்
அருந்த நேரஞ்சொல்லு
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூரும்
அருந்த நேரஞ்சொல்லு

பெண்:
பெண்மையே பேசுமா
பெண்மையே பேசுமா

ஆண்:
மௌனம்தான் பள்ளியறை மந்திரமா

பெண்:
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே
கச்சேரி பாடு
வந்து கைத்தாளம் போடு

ஆண்:
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப்பார்க்கும் நேரம் இது
கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு
வந்து கைத்தாளம் போடு

*********************************

குழு:
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

பெண்:
ஆஹா பொன் முத்தம்
ரத்தத்தில் ஏன் சத்தம்
என்னை ஏதேதோ செய்கின்றதே

ஆண்:
வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல்
இங்கே தேன்மாரி பெய்கின்றதே

பெண்:
என் தேகம் எங்கெங்கும்
ஏதோ ஓர் பொன் மின்னல்

என் தேகம் எங்கெங்கும்
ஏதோ ஓர் பொன் மின்னல்
நடந்து போகின்றதே ஏ

ஆண்:
நாணமே போனது
நாணமே போனது

பெண்:
போதுமே ஆளை விடு ஆடை கொடு

ஆண்:
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே
கச்சேரி பாடு
வந்து கைத்தாளம் போடு
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப்பார்க்கும் நேரம் இது

பெண்:
ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து
சூடிப்பார்க்கும் நேரம் இது

ஆண்:
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே
கச்சேரி பாடு
வந்து கைத்தாளம் போடு

*********************************

Monday, October 21, 2019

குறுக்கு சிறுத்தவளே - முதல்வன் பாடல் வரிகள்



படம்: முதல்வன்
இசை: ஏ ஆர் ரஹ்மான்

*********************************

ஆண்:
குறுக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
எண்ணக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம் மாத்து தாயே
குறுக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
எண்ணக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம் மாத்து தாயே

பெண்:
ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசிர் கசிய
உன்னால சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும்
ஆனதே
அட ஆத்தோட விழுந்த இல
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒண்ணோடுதான்
பின்னோடுதே
அட காலம் மறந்து
காட்டு மரமும் பூக்கிறதே

ஆண்:
குறுக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
எண்ணக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம் மாத்து தாயே

*********************************

பெண்:
கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே
கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறயே

ஆண்:
கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே
ஒரு மொழி சிரிச்சு பேசடியே


பெண்:
வாயி மேல வாய வெச்சு
வார்த்தைகள உறிஞ்சி புட்ட
வெரல வெச்சி அழுத்திய கழுத்துல
கொளுத்திய வெப்பம் இன்னும்
போகல

ஆண்:
அடி உம்போல செவப்பு இல்ல
கணுக்கால் கூட கருப்பு இல்ல
நீ தீண்டும் இடம்
தித்திக்குமே
இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும்
பாக்கியமே
குறுக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
எண்ணக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம் மாத்து தாயே

*********************************


ஆண்:
ஒரு தடவ இழுத்து அணச்சபடி
உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே

பெண்:
உம்முதுக தொலச்சி வெளியேற
இன்னும் கொஞ்சம் இறுக்கு என்னவனே

ஆண்:
மழையடிக்கும் சிறு பேச்சு
வெயிலடிக்கும் ஒரு பார்வ
ஒடம்பு மண்ணில் புதையற வரையில்
உடன் வரக் கூடுமோ

பெண்:
உசிர் என்னோட இருக்கையில
நீ மண்ணோட போவதெங்கே
அட உன் ஜீவனில்
நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூடக்
குழம்புமய்யா

ஆண்:
குறுக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
எண்ணக் கொஞ்சம் பூசு தாயே
கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம் மாத்து தாயே


பெண்:
ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசிர் கசிய
உன்னால சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும்
ஆனதே
அட ஆத்தோட விழுந்த இல
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒண்ணோடுதான்
பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும்
பூக்கிறதே

ஆண்:
குறுக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்

பெண்:
உன்ன கொஞ்சம் பூசுவயா

ஆண்:
உன் கொலுசுக்கு மணியாக

பெண்:
என்னக் கொஞ்சம்மாத்துவயா

ஆண்:
ஒ ஹோ ஓ ஓ ஓ ஹோ

பெண்:
ஒ ஹோ ஓ ஓ ஓ ஹோ

*********************************

கோவில் மணி ஓசை தன்னை - கிழக்கே போகும் ரயில் பாடல் வரிகள்



படம்: கிழக்கே போகும் ரயில்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
<<பாஞ்சாலி பாஞ்சாலி>>

பெண்:
கோவில் மணி ஓசை தன்னை
செய்ததாரோ
அவர் என்ன பேரோ
<<பரஞ்சோதி  பரஞ்சோதி >>

ஆண்:
கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
கன்னி பூவோ பிஞ்சு பூவோ
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ
தூதானதோ

பெண்:
கோவில் மணி ஓசை தன்னை
செய்ததாரோ
அவர் என்ன பேரோ
பாட்டு பாடும் கூட்டத்தாரோ
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ
என்னை இங்கு

ஆண்:
கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ

*********************************

ஆண்:
பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசைக் கிளியே வந்தாயே பண்ணோடு
நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே
சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை
என்னை வென்றாளம்மா
கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ

பெண்:
ஊருக்கு போன பொண்ணு
உள்ளூரு செல்லக் கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே
பாவம் உந்தன் கச்சேரிக்கு
பொண்ணு நானா
பாடும் வரை பாடு
தாளத்தோடு
அதை நீயே கேளு
கோவில் மணி ஓசை தன்னை
செய்ததாரோ

*********************************

ஆண்:
என் மனது தாமரை பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே நீ கூட பெண்ணாக

பெண்:
ஊரில் ஒரு பெண்ணா இல்லை
தேடிப் பாரு
நல்ல பெண்ணை கண்டால்
கொஞ்சம் சொல்லு

ஆண்:
அது நீதானம்மா

ஆண்:
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ

பெண்:
பாட்டு பாடும் கூட்டத்தாரோ

ஆண்:
ஏழை குயில் கீதம் தரும் நாதம்

பெண்:
அது கொண்டாந்ததோ என்னை இங்கு

பெண்:
கோவில் மணி ஓசை தன்னை
செய்ததாரோ

*********************************

Friday, October 18, 2019

கஜுராஹோ கனவில் - ஒரு நாள் ஒரு கனவு பாடல் வரிகள்



படம்: ஒரு நாள் ஒரு கனவு
இசை: இளையராஜா

*********************************

பெண் :
தானானன நானனான நான
தானாஎன நானனான நானா

ஆண் :
கஜுராஹோ கனவில் ஓர்
சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே
ரகசிய வாசல் திறக்குதே
மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா
துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா
நான் உன்னுள்ளே உன்னுள்ளே
சிலையின் மொழிகளை பழகலாம்

கஜுராஹோ கனவில் ஓர்
சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே
ரகசிய வாசல் திறக்குதே
கஜுராஹோ கஜுராஹோ

*********************************

பெண் :
தகிட தீம்கிடத்தோம்
தகிட தீம்கிடத்தோம்
தகிட தீம்கிடத்தோம்
தகிட தீம்கிடத்தோம்

என் தேகம் முழுவதும்
மின்மினி மின்மினி ஓடுதே
மாயங்கள் செய்கிறாய்
மார்பினில் சூரியன் காயுதே

ஆண் :
பூவினுள் பனி துளி
தூறுது தூறுது தூறுதே
பனியோடு தேன் துளி
ஊருது ஊருது ஊருதே

பெண் :
ஆ ஆ காமனின் வழிபாடு
உடலினில் கொண்டாடு

ஆண் :
நானன நானானா
நனன நானானா

பெண் :
தீபம் போல் என்னை நீ ஏற்று
காற்றோடு காற்றாக
அந்தரங்க வழி மிதக்கலாம்

கஜுராஹோ கனவில் ஓர்
சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே
ரகசிய வாசல் திறக்குதே

ஆண் :
கஜுராஹோ கஜுராஹோ

*********************************

ஆண் :
நீராக உன் உடல்
நெளியுது வளையுது மூழ்கவா
தண்டோடு தாமரை
பூவினை கைகளில் ஏந்தவா

பெண் :
மேலாடை நீயென
மேனியில் நான் உனை சூடவா
நீ தீண்டும் போதிலே
மோகன ராட்டினம் ஆடவா

ஆண் :
பகலுக்கு தடை போடு
இரவினை எடை போடு

பெண் :
லாலல லாலா
லலலல லாலா லா

ஆண் :
எங்கே நான் என்றுநீ நீ தேடு
ஈரங்கள் காயாமல்
இன்ப ராக மழை பொழியலாம்

பெண் :
கஜுராஹோ கனவில் ஓர்
சிற்பம் கண்ணில் மிதக்குதே

ஆண் :
அறியாதோர் மனதிலே ரகசிய
வாசல் திறக்குதே

பெண் :
மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா

ஆண் :
துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா

பெண் :
நான் உன்னுள்ளே உன்னுள்ளேதும்
சிலையின் மொழிகளை பழகலாம்

இரு:
கஜுராஹோ கனவில் ஓர்
சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய
வாசல் திறக்குதே

ஆண் :
கஜுராஹோ கஜுராஹோ

*********************************

Thursday, October 17, 2019

ஒரு மந்தாரப்பூ - சின்ன ஜமீன் பாடல் வரிகள்



படம்: சின்ன ஜமீன்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா ஹோ
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா

பெண்:
ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா ஹோ
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா

ஆண்:
மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும்
சாயங்கால வேளையில்

பெண்:
ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா ஹோ
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா

*********************************

பெண்:
நித்தம் நித்தம்
நான் குளிக்கும் மஞ்சளுக்கு
ஒன்ன விட்டா
யாருமில்ல காவலுக்கு

ஆண்:
நெஞ்சுக்குள்ள
உன்னை வச்சேன் பத்திரமா
நான் ரசிக்க
தீட்டி வச்சேன் சித்திரமா

பெண்:
உன்னால ராத்திரி
தூக்கம் கெட்டுப் போவுது

ஆண்:
ஒத்தையில தூங்குனா
என் உடம்பு நோவுது

பெண்:
ஒன்ன விட்டு அஞ்சு நிமிஷம்
என்னால் வாழ ஆவாது

ஆண்:
ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா ஹோ
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா

பெண்:
மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும்
சாயங்கால வேளையில்

ஆண்:
ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா ஹோ
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா

*********************************

ஆண்:
வெத்தலைய
பாக்கு வச்சு நான் கொடுப்பேன்
நீ சுவைச்சு
மிச்சம் மீதி நான் எடுப்பேன்

பெண்:
செம்பெடுத்து
பால் நிரப்பி நான் கொடுப்பேன்
நீ குடிச்ச
மிச்சம் மீதி நான் குடிப்பேன்

ஆண்:
ஒண்ணாகச் சேர்ந்து தான்
சந்திரனைப் பாக்கணும்

பெண்:
உண்டான ஏக்கத்தை
ரெண்டு பேரும் தீர்க்கணும்

ஆண்:
நள்ளிரவில் நாம கலந்தா
கோழி கூவக் கூடாது

பெண்:
ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா ஹோ
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா

ஆண்:
மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும்
சாயங்கால வேளையில்

பெண்:
ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா ஹோ

ஆண்:
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா

*********************************

Wednesday, October 16, 2019

காதல் என்னும் கோவில் - கழுகு பாடல் வரிகள்



படம்: கழுகு
இசை: இளையராஜா

*********************************

காதல் என்னும் கோவில்
கட்டி வைத்தேன் நெஞ்சில்
காதல் என்னும் கோவில்
கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன் பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில்

காதல் என்னும் கோவில்
கட்டி வைத்தேன் நெஞ்சில்

*********************************

பூவோடு பொன்னலங்காரம்
பார்த்தாலே என் நெஞ்சாறும்
பாவம் ஆயிரம்
வேனில் காலப் பூஞ்சோலை
கோடை காலம் நீரோடை
வேனில் காலப் பூஞ்சோலை
கோடை காலம் நீரோடை
நினைவெல்லாம் நீ

காதல் என்னும் கோவில்
கட்டி வைத்தேன் நெஞ்சில்

*********************************

காலங்கள் பொன்னாகட்டும்
தீபங்கள் கொண்டாடடும்
நாளும் வாழ்விலே
நீயில்லாமல் நானில்லை
தேனில்லாத பூவில்லை
நீயில்லாமல் நானில்லை
தேனில்லாத பூவில்லை

மனமெல்லாம் நீ

காதல் என்னும் கோவில்
கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன் பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில்
காதல் என்னும் கோவில்
கட்டி வைத்தேன் நெஞ்சில்

*********************************

Tuesday, October 15, 2019

மலரே குறிஞ்சி மலரே - டாக்டர் சிவா பாடல் வரிகள்



படம்: டாக்டர் சிவா
இசை: எம் எஸ் விஸ்வநாதன்

*********************************

ஆண்:
மலரே குறிஞ்சி மலரே

பெண்:
மலரே குறிஞ்சி மலரே

ஆண்:
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே

*********************************

பெண்:
யார் மடி சுமந்து தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பல்லவோ

ஆண்:
கொடி அரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனைத் சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ

பெண்:
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே

*********************************

ஆண்:
நாயகன் நிழலே நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்

பெண்:
தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்

ஆண்:
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே

*********************************

பெண்:
பாடிடும் காற்றே பறவையின் இனமே
பனி மலைத் தொடரில் பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களேன்

ஆண்:
பால் மனம் ஒன்று
பூ மனம் ஒன்று
காதலில் இன்று கலந்தது கண்டு

இருவரும்:
நல்வாழ்த்து கூறுங்களேன்
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்

பெண்:
மலரே குறிஞ்சி மலரே

ஆண்:
மலரே குறிஞ்சி மலரே

*********************************

ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு - படிக்காதவன் பாடல் வரிகள்



படம்: படிக்காதவன்
இசை: இளையராஜா

*********************************

பெண் :
ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு
சொந்த கிளியே நீ வந்து நில்லு
ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு
சொந்த கிளியே நீ வந்து நில்லு
ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு
சொந்த கிளியே நீ வந்து நில்லு

கன்னி கிளி தான்
காத்து கெடக்கு கண்ணுறங்காம
பட்டு கிளி இத கட்டி கொள்ளு
தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு
ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு
சொந்த கிளியே நீ வந்து நில்லு

ஆண் :
அடி அத்த மக ரத்தினமே
ஆசையுள்ள பெண்மயிலே
அடி அத்த மக ரத்தினமே
ஆசையுள்ள பெண்மயிலே
முத்தான முத்தே என்னோட சொத்தே
அள்ளாம கொள்ளாம என் ஆச தீராது

ஜோடி கிளி இங்கே பக்கத்திலே
சொந்த கிளி இப்போ வெட்கத்திலே
ஜோடி கிளி இங்கே பக்கத்திலே
சொந்த கிளி இப்போ வெட்கத்திலே

கூடி குழவி பாடி தழுவி
கொஞ்சிடும் நேரம்
பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு
தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு
பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு
தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு

*********************************

ஆண் :
ஒரு கர்ப்பிணியை காதலிச்சேன்
கன்னி பொண்ண கை பிடிச்சேன்
அவ கண் அசைச்சா நான் விழுந்தேன்
கை அணைச்சா நான் எழுந்தேன்

பெண்:
நீ வந்து சேர்ந்ததும் மாறிடுச்சு
அட இப்போதான் என் மனம் தேறிடுச்சு
நீ வந்து சேர்ந்ததும் மாறிடுச்சு
அட இப்போதான் என் மனம் தேறிடுச்சு

ஆண்:
போனது போகட்டும் போன படி
நான் சொல்வத கேளடி நல்லபடி
பொய் ஆகி போனத மெய் ஆக்கி காட்டணும்

பெண்:
ஜோடி கிளி இங்கே பக்கத்துலே
சொந்த கிளி இப்போ வெட்கத்திலே

ஆண் :
கூடி குழவி பாடி
தழுவி கொஞ்சிடும் நேரம்

பெண்:
பட்டு கிளி இத கட்டி கொள்ளு
தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு

ஆண்:
பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு
தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு

*********************************

ஆண்:
உன் சுண்டு விரல் பட்டதுல
சூடு ரொம்ப ஏறுதடி
அடி சுந்தரியே முந்திரியே ஆதரிக்க வேணுமடி

பெண்:
மாலையை போடுங்க நல்ல படி
வந்து அப்புறம் கேளுங்க உள்ளபடி
மாலையை போடுங்க நல்ல படி
வந்து அப்புறம் கேளுங்க உள்ளபடி

ஆண்:
மார்கழி மாசமும் போகட்டும்டி
மாலையை தோளுல மாட்டுறேண்டி
மச்சான நெஞ்சோடு ஒண்ணாக சேர்த்துக்க

ஜோடி கிளி இங்கே பக்கத்திலே
சொந்த கிளி இப்போ வெட்கத்திலே
ஜோடி கிளி இங்கே பக்கத்திலே
சொந்த கிளி இப்போ வெட்கத்திலே

பெண்:
கூடி குழவி பாடி தழுவி
கொஞ்சிடும் நேரம்
பட்டு கிளி இத கட்டி கொள்ளு
தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு

ஆண்:
பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு
தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு

பெண்:  ஜோடி கிளி இங்கே பக்கத்துலே

ஆண் : சொந்த கிளி இப்போ வெட்கத்திலே

*********************************

Monday, October 14, 2019

ஏய் ஷப்பா - கர்ணா பாடல் வரிகள்



படம்: கர்ணா
இசை: வித்யாசாகர்

*********************************

ஆண் :
ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா
ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா

ஆண் :
எண்ணி வந்த

பெண் :
வேலை

ஆண் :
வெற்றியாகும்

பெண் :
வேலை

ஆண் :
காமன் செஞ்சான்

பெண் :
லீலை

ஆண் :
நடப்பது நடக்கட்டுமே

ஆண் :
ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா
ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா

ஆண் :
ஏ ஹு ஏ

*********************************

பெண் :
விதை ஏதும் இல்லாத
மாதுளை மாதுளை இல்லை

குழு :
ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ

ஆண் :
விளையாட்டு இல்லாத
வாலிபம் வாலிபம் இல்லை

குழு :
ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ

பெண் :
நீ பகைவனை எதிர்த்து
ஒரு படை கொண்டு நடத்து
நீ பகைவனை எதிர்த்து
ஒரு படை கொண்டு நடத்து

ஆண் :
வெற்றி உனதாக
விரல்கள் உளியாக படிக்கல்
செதுக்கி விடு தடைக்கல்லை
உடைத்து

குழு :
ஏ ஏ ஏ ஏ ஏ

ஆண் :
ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா

*********************************

ஆண் :
ஏ ஹு ஏ
யார் என்ன சொன்னாலும்
விடிந்திடும் விடிந்திடும்
கிழக்கு

குழு :
ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ

பெண் :
நீ என்ன செய்தாலும்
முடிந்திடும் முடிந்திடும்
வழக்கு

குழு :
ஹோ ஹோ ஷப்பா
ஹோ ஹோ ஹோ ஷப்பா
ஹோ

ஆண் :
நான் ஜகத்தினை ஜெயிக்க
என் ஜாதகம் இருக்கு
நான் ஜகத்தினை ஜெயிக்க
என் ஜாதகம் இருக்கு

ஆண் :
யானை பலம்
நல்ல புலியின் திறம்
இந்த இரண்டும் சேர்ந்ததிந்த
இளைஞனின் சரக்கு

குழு :
ஏ ஏ ஏ ஏ ஏ

ஆண் :
ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா
நினைச்ச கனவு பலிக்காதா
ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா

ஆண் :
எண்ணி வந்த

பெண் :
வேலை

ஆண் :
வெற்றியாகும்

பெண் :
வேலை

ஆண் :
காமன் செஞ்சான்

பெண் :
லீலை

ஆண் :
நடப்பது நடக்கட்டுமே

ஆண் :
ஏ ஷப்பா

*********************************

சிந்து நதிக்கரை ஓரம் - நல்லதொரு குடும்பம் பாடல் வரிகள்



படம்: நல்லதொரு குடும்பம்
இசை: இளையராஜா

*********************************

பெண்:
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
என்னை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்

ஆண்:
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
என்னை பூவைப் போல சூடினாள்
சிந்து நதிக்கரை ஓரம்

*********************************

பெண்:
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர்வரிசை

ஆண்:
சொல்லிக் கொடுத்தேன் கதை கதை
அள்ளிக் கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்

பெண்:
தமிழ் கீதம் பாடினான்
என்னை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்

*********************************

ஆண்:
தெள்ளுத்தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
தெள்ளுத்தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்

பெண்:
வான வெளியில் இதம் இதம்
சோலை வெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்

ஆண்:
தமிழ் கீதம் பாடினாள்
என்னை பூவைப் போல சூடினாள்

இருவரும் : சிந்து நதிக்கரை ஓரம்

*********************************

Sunday, October 13, 2019

கண்ணுக்குள் நூறு நிலவா - வேதம் புதிது பாடல் வரிகள்



படம் :வேதம் புதிது
இசை: தேவேந்திரன்

*********************************

பெண்: பபப பபப

ஆண்: ததத ததத

பெண்: நிநிநி நிநிநி

ஆண்: ஸஸஸ ஸஸஸ

பெண்: நிரிகரி நிதபம கமபம கரிஸநி

ஆண்: த பநி த ஸ நிரி ஸ ரிகமப

பெண்: த பநி த ஸ நிரி ஸ நிதபமப

ஆண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா

ஆண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா

பெண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

*********************************


பெண்:
அம்பா சாம்பவி சந்த்ரமௌளி ராபளா
அபர்ணா உமா பார்வதி
காளி ஹைமவதி ஷிவத்ரி நயனா
காத்யாயினி பைரவி
சாவித்ரி நவயொவ்வன சுபஹரி
சாம்ராஜ்ய லஷ்மிப்ரதா

ஆண்:
தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா

பெண்:
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா

ஆண்:
வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது

பெண்:

சாத்திரம் தாண்டி தப்பி செல்வதேது

ஆண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

*********************************


குழு:
பூவே பெண் பூவே
இதில் என்ன அதிசயம் இளமையின் அவசியம்
இது என்ன ரகசியம் இவன் மனம் புரியலயா

பெண்:
ஆணின் தவிப்பு அடங்கி விடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்

ஆண்:
உள்ளம் என்பது உள்ளவரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்

பெண்:
என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண் உள்ளம் இன்று ரெண்டானது

ஆண்:
ரெண்டா ?
ஏது ?
ஒன்று பட்ட போது

பெண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை

ஆண்:
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா

பெண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா

ஆண்:
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

கொட்டுக்களி கொட்டு நாயனம் - சின்னவர் பாடல் வரிகள்



படம் :சின்னவர்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே
முத்துத் திரவியமே

பெண்:
வெள்ளி மணிச் சத்தம்
துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக்
கயல்களும் நாளும் கூட

ஆண்:
கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே

பெண்:
தொட்டுக் குலவிட வா அன்பே
முத்துத் திரவியமே

*********************************


பெண்:
சின்னவரு பார்க்கும்போது
தேகம் மோகம் கேக்குது
மன்னவரு கூடும்போது
மயக்கமாகுது

ஆண்:
கண்ணிரண்டும் ஜாலம் பேசிக்
காதல் போதை ஏத்துது
பொண்ணு இட்ட தூண்டில்
என்னைப் போட்டு இழுக்குது

பெண்:
கோடி ஆசை கூடிக் கூடிக்
கோலம் போடுது

ஆண்:
கோலம் போட்டுப் பாடிப் பாடித்
தாளம் போடுது

பெண்: ராஜராஜனும் கைகோர்த்த ராணியாகணும்

ஆண்:
காதல் சாகரம் அதில்
இன்பத் தோணி போகணும்

பெண்:
ஏழு லோகம் மாலை போட
வாழ்ந்து பார்க்கணும்

ஆண்:
கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே
முத்துத் திரவியமே

பெண்:
வெள்ளி மணிச் சத்தம்
துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக்
கயல்களும் நாளும் கூட

ஆண்:
கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே

பெண்:
தொட்டுக் குலவிட வா அன்பே
முத்துத் திரவியமே

*********************************


ஆண்:
முத்துமணி மாலை போல
மோதிப் பார்க்க ஆசைதான்
வெட்கம் இனி ஓட வேணும்
விலகித் தூரந்தான்

பெண்:
பொட்டு வைத்து பூவைச் சூடிப்
பார்த்து ஏங்கும் பாவை தான்
தொட்டணைத்துத் தூக்கும்போது
தீரும் பாரம்தான்

ஆண்:
காத்துவாக்கில் பூத்த வாசம்
கன்னி வாசந்தான்

பெண்:
நேத்து பூத்த பூவின் மீது
என்ன பாசந்தான்

ஆண்:
மூட மூடவே என்னோட மோகம் ஏறுது

பெண்:
பாடப் பாடவே என்னோட
பாட்டும் சேருது

ஆண்:
தேடத் தேட கோடிக் கோடி சேதி தெரியுது

பெண்:
கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணா
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா அன்பே
முத்துத் திரவியமே

ஆண்:
வெள்ளி மணிச் சத்தம்
துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக்
கயல்களும் நாளும் கூட

பெண்:
கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணா
பட்டுக் களஞ்சியமே

ஆண்:
தொட்டுக் குலவிட வா பெண்ணே
முத்துத் திரவியமே

*********************************

மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா பாடல் வரிகள்



படம் : ராஜாதி ராஜா
இசை: இளையராஜா

*********************************

குழு:
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆஆஆஆஆஆ

ஆண்:
மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா
நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம்
உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண
துணை வேண்டாமோ
ஓஓஓ ஓஓஓ

பெண்:
மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா
நெஞ்சம் தேனம்மா

*********************************

பெண்:
சிங்கம் ஒன்று நேரில் வந்து
ராஜ நடை போடுதே
தங்க மகன் தேரில் வந்தால்
கோடி மின்னல் சூழுதே

ஆண்:
முத்தை அள்ளி வீசி இங்கு
வித்தை செய்யும் பூங்கொடி
தத்தித் தத்தி தாவி வந்து
கையில் என்னை ஏந்தடி

பெண்:
மோகம் கொண்ட மன்மதனும்
பூங்கணைகள் போடவே
காயம் பட்ட காளை நெஞ்சம்
காமன் கணை மூடுதே

ஆண்:
மந்திரங்கள் காதில் சொல்லும்
இந்திரனின் ஜாலமோ
சந்திரர்கள் சூரியர்கள்
போவதென்ன மாயமோ

பெண்:
இதமாக சுகம் காண
துணை நீயும் இங்கு வேண்டுமே
சுகமான புது ராகம்
இனி கேட்கத்தான்

ஆண்:
மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா

பெண்:
ஆஹா தேனம்மா தேனம்மா
நெஞ்சம் தேனம்மா

குழு:
லலலல லலலல லலலல லா
லலலல லலலல லலலல லா
லலலா லா லா லலலா
லலலா லா லலலா

*********************************

ஆண்:
இட்ட அடி நோகுமம்மா
பூவை அள்ளித் தூவுங்கள்
மொட்டு உடல் வாடுமம்மா
பட்டு மெத்தைப் போடுங்கள்

பெண்:
சங்கத்தமிழ் காளை இவன்
பிள்ளைத் தமிழ் பேசுங்கள்
சந்தனத்தை தான் துடைத்து
நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்

ஆண்:
பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி
லாலி லல்லி கூறுங்கள்
நெஞ்சமென்னும் மஞ்சமதில்
நான் இணைய வாழ்த்துங்கள்

பெண்:
பள்ளியறை நேரமிது
தள்ளி நின்று பாடுங்கள்
சொல்லித் தர தேவை இல்லை
பூங்கதவை மூடுங்கள்

ஆண்:
சுகமான புது ராகம்
உருவாகும் வேளை நாணமோ

பெண்:
இதமாக சுகம் காண
துணை வேண்டாமோ
ஓஓஓ ஓஓஓ

ஆண்:
மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா
நாணம் ஏனம்மா

பெண்:
சுகமான புது ராகம்
உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண
துணை வேண்டாமோ
ஓஓஓ ஓஓஓ

ஆண்:
மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா

பெண்:
ஆஹா தேனம்மா தேனம்மா
நெஞ்சம் தேனம்மா

*********************************

Friday, October 11, 2019

ராசாவே உன்ன (பெண்) - வைதேகி காத்திருந்தாள் பாடல் வரிகள்



படம் : வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா

*********************************

லா லா லா லா
லா லா லா லா
லா லா ல லா லா
லா லா ல லா லா
லா லா லா லா லா லா

ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

ஸ்ரீ ராமனோட
பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

*********************************

கண்ணுகொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி
நான்தானையா

கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி
நான்தானையா

தத்தித் தவழும்
தங்கச் சிமிழ் நான்
பொங்கி பெருகும்
சங்கத் தமிழ் நான்

முத்தம் தர நித்தம் வரும்
நட்சத்திரம்

யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணா நான் வாங்கும் மூச்சு

வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணா

ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

ஸ்ரீ ராமனோட பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

*********************************

மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை
சொன்னால் என்ன

மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை
சொன்னால் என்ன

அத்தை மகனோ மாமன் மகனோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ

சந்தித்ததும் சிந்தித்ததும்
தித்தித்திட

அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

ஸ்ரீ ராமனோட
பூ மாலை போட
வைதேகி உள்ளம்
வாடுது

ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

காத்தாடி போலாடுது

*********************************

பாடு நிலாவே - உதயகீதம் பாடல் வரிகள்



படம் : உதயகீதம்
இசை: இளையராஜா

*********************************

பெண் :
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆ ஆ ஆஆஆஆ

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

*********************************

பெண் :
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதான போதும் கை சேர வேண்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே

ஆண் :
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

*********************************

ஆண் :
ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேரத் துள்ளும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

பெண் : உன் பாடலை நான் கேட்கிறேன்

ஆண் : பாமாலையை நான் கோர்க்கிறேன்

பெண் : பாடும் நிலாவே

ஆண் : தேன் கவிதை

பெண் : பூ மலரே

*********************************

Wednesday, October 9, 2019

பூவண்ணம் போல நெஞ்சம் - அழியாத கோலங்கள் பாடல் வரிகள்



படம் : அழியாத கோலங்கள்
இசை: சலில் சௌத்ரி

*********************************

ஆண் :
பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்
என்னுள்ளம் போடும் தாளம்

பெண் :
பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்
என்னுள்ளம் போடும் தாளம்

இருவரும் :
பூவண்ணம்
போல நெஞ்சே
ஹே ஏஹே

ஆண் : ஆ ஹா ஹா
பெண் : ஆ ஹா ஹா

*********************************

பெண் :
இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

ஆண் :
பிறக்கும் ஜென்மங்கள்
பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ

பெண் :
இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

ஆண் :
பிறக்கும் ஜென்மங்கள்
பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ

பெண் :
இணைந்த வாழ்வில்
பிரிவும் இல்லை
தனிமையும் இல்லை

ஆண் :
பிறந்தால் எந்த நாளும்
உன்னோடு சேர வேண்டும்

பெண் : பூவண்ணம் போல நெஞ்சம்

ஆண் :
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்

பெண் :
எங்கெங்கும் இன்ப ராகம்
என்னுள்ளம் போடும் தாளம்

இருவரும் :
பூவண்ணம் போல நெஞ்சே
ஹே ஏஹே

*********************************

ஆண் :
படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்

பெண் :
கனிக்குள் வாட்டங்கள்
அணைக்கும் ஊட்டங்கள்
என் இன்பங்கள்

ஆண் :
படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்

பெண் :
கனிக்குள் வாட்டங்கள்
அணைக்கும் ஊட்டங்கள்
என் இன்பங்கள்

ஆண் :
இணையும்போது இனிய
எண்ணம் என்றும்
நம் சொந்தம்

பெண் :
இமைக்குள் ஏழு தாளம்
என்றென்றும் காண வேண்டும்

ஆண் : பூவண்ணம் போல நெஞ்சம்

பெண் :
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்

ஆண் :
எங்கெங்கும் இன்ப ராகம்
என்னுள்ளம் போடும் தாளம்

இருவரும் :
பூவண்ணம் போல நெஞ்சே
ஹே ஏஹே
ஹே ஏஹே
ஹே ஏஹே

*********************************

ஏகாந்த வேளை - பாடும் பறவைகள் பாடல் வரிகள்



படம் : பாடும் பறவைகள்
இசை: இளையராஜா

*********************************

ஆண்: ஏகாந்த வேளை
பெண்: ம்ம்ம்
ஆண்: இன்பத்தின் வாசல்
பெண்: ம்ம்ம்

ஆண்: ஏகாந்த வேளை
பெண்: இனிக்கும்
ஆண்: இன்பத்தின் வாசல்
பெண்: திறக்கும்
ஆண்: ஆரம்ப பாடம்
பெண்: நடக்கும்
ஆண்: ஆனந்த கங்கை
பெண்: சுரக்கும்

ஆண்:
பெண்ணின்பமே என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஆண்: ஏகாந்த வேளை
பெண்: இனிக்கும்
ஆண்: இன்பத்தின் வாசல்
பெண்: திறக்கும்
ஆண்: ஏகாந்த வேளை

*********************************

ஆண்: கூந்தல் என்பது
பெண்: இருட்டு
ஆண்: கண்கள் என்பது
பெண்: விளக்கு
ஆண்: உந்தன் புன்னகை
பெண்: கிழக்கு
ஆண்: இன்னும் ஏனடி
பெண்: வழக்கு
ஆண்: மேகம் வந்து
பெண்: பாய் விரிக்க
ஆண்: நீயும் நானும்
பெண்: சேர்ந்திருக்க
ஆண்: காமன் அம்புகள்
பெண்: பாயட்டும்
ஆண்: காதல் வம்புகள்
பெண்: ஓயட்டும்
ஆண்: ராச லீலைகள்
பெண்: ஆகட்டும்
ஆண்: விண்ணில் வெண்ணிலா
பெண்: வேகட்டும்
பெண்: வா
ஆண்: மெல்ல வா
பெண்: பூ
ஆண்: அல்லவா
பெண்: நான்
ஆண்: கிள்ளவா ஹோய்

ஆண்: ஏகாந்த வேளை
பெண்: இனிக்கும்
ஆண்: இன்பத்தின் வாசல்
பெண்: திறக்கும்
ஆண்: ஆரம்ப பாடம்
பெண்: நடக்கும்
ஆண்: ஆனந்த கங்கை
பெண்: சுரக்கும்

ஆண்:
பெண்ணின்பமே என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஆண்: ஏகாந்த வேளை
பெண்: இனிக்கும்
ஆண்: இன்பத்தின் வாசல்
பெண்: திறக்கும்
ஆண்: ஏகாந்த வேளை

*********************************

ஆண்: நேற்று ராத்திரி
பெண்: மலர்ந்தேன்
ஆண்: நீல ஆற்றிலே
பெண்: நனைந்தேன்
ஆண்: ஈர ஆடைகள்
பெண்: களைந்தேன்
ஆண்: பூவில் ஆடைகள்
பெண்: புனைந்தேன்
ஆண்: வண்ணப் பூக்களும்
பெண்: வெடிக்க
ஆண்: பூவில் வண்டு தேன்
பெண்: குடிக்க
ஆண்: தங்கம் போன்றது
பெண்: அங்கங்கள்
ஆண்: எங்கு வேண்டுமோ
பெண்: தங்குங்கள்
ஆண்: காமன் யாத்திரை
பெண்: செல்லுங்கள்
ஆண்: காலை வந்ததும்
பெண்: சொல்லுங்கள்
பெண்: நம்
ஆண்: நெஞ்சங்கள்
பெண்: பூ
ஆண்: மஞ்சங்கள்
பெண்: தேன்
ஆண்: சிந்துங்கள் ஹோய்

பெண்: ஏகாந்த வேளை
ஆண்: இனிக்கும்
பெண்: இன்பத்தின் வாசல்
ஆண்: திறக்கும்
பெண்: ஆரம்ப பாடம்
ஆண்: நடக்கும்
பெண்: ஆனந்த கங்கை
ஆண்: சுரக்கும்

பெண்:
பெண்ணின்பமே என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்
ஏகாந்த வேளை

ஆண்:
இனிக்கும்
இன்பத்தின் வாசல்

பெண்: திறக்கும்
இருவரும்: ஏகாந்த வேளை

*********************************

Tuesday, October 8, 2019

ஏ ராசாத்தி ரோசாப்பூ - என் உயிர் தோழன் பாடல் வரிகள்



படம் : என் உயிர் தோழன்
இசை: இளையராஜா

*********************************

இருவரும்:
ஹே ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
ஹே ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
ஜூம் ஜூம் ஜூம் ஜூம் ஜூம்
ஆண்1:ராசாத்தி
இருவரும்: ஜூம் ஜூம் ஜூம் ஜூம் ஜூம்
ஆண்1: ராசாத்தி
ஆண்1: ராசாத்தி
ஆண்2: ராசாத்தி ராசாத்தி
ஆண்1: ராசாத்தி
ஆண்2: ராசாத்தி ராசாத்தி
ஆண்1: ராசாத்தி
ஆண்2: ராசாத்தி ராசாத்தி
ஆண்1: ராசாத்தி
ஆண்2: ராசாத்தி ராசாத்தி
ஆண்1: ராசாத்தி

இருவரும்: ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா
தேவதையே திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே

இருவரும்: ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா

*********************************

ஆண்2:
கண்கள் இமை மூடும் போதும் (பெண் குழு: ம்ம்ம்ம்)
உனதன்பு எனதன்பைத் தேடும் (பெண் குழு: அடடட)
மஞ்சம் இரண்டான போதும் (பெண் குழு: ம்ம்ம்ம்)
நம் எண்ணம் ஒன்றாக தூங்கும்  (பெண் குழு: அடடட)
தூர இருந்தும் (பெண் குழு: ஆ ஆ ஆ ஆ ஆஆஆ)
அருகில் இருப்போம்  (பெண் குழு: ஆஆஆ ஆஆ ஆஆ)
தனித்து இருந்தும்  (பெண் குழு: ஆ ஆ ஆ ஆ ஆஆஆ)
இணைந்து இருப்போம் (பெண் குழு: ஆஆஆ ஆஆ ஆஆ)

இருவரும்:
ஆகாயம் பூப்பந்தல்
அங்கே பொன்னூஞ்சல்
நீயாட அதில் நானாட நேரம் வந்தாட
ஆகாயம் பூப்பந்தல்
அங்கே பொன்னூஞ்சல்
நீயாட அதில் நானாட நேரம் வந்தாட
மின்னும் வெள்ளிமீன்களை
மேனி எங்கும் சூடுவேன்
மேடை என்னும் தேவியை
ஆடை என்று மூடுவேன்
அங்கம் எங்கும் தங்கம்
ஹே எங்கும் இன்பம் பொங்கும்

ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா  (பெண் குழு: தனன)
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா   (பெண் குழு: தனனனன)
தேவதையே திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே
ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா  (பெண் குழு: தனன)
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா  (பெண் குழு: தனனனன)

*********************************

ஆண்2:
பந்தலிட்டு பரிசம் போட்டு
சொந்தம் கூடி நாள் குறிக்க

பெண் குழு:
பந்தலிட்டு பரிசம் போட்டு
சொந்தம் கூடி நாள் குறிக்க

ஆண்2:
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து (பெண் குழு: ஆஆஆ ஆஆ ஆஆ)
அழகாக மங்கைக்கு மாலை அணிந்து (பெண் குழு: ஆஆஆ ஆஆ ஆஆ)
மங்கள வாத்தியம் மந்திரம் முழங்க (பெண் குழு: ஆஆஆ ஆஆ ஆஆ)
மஞ்சள் கயிறு மணிக்கழுத்தில்  (பெண் குழு: ஆஆஆ ஆஆ ஆஆ)
ஏறிடும் அந்நாள் வந்திடும் வந்திடும் (பெண் குழு: குலவை)

இருவரும்:
வான்வெளியில் பூ விரித்து
காண்போம் முதலிரவு
தேன்மொழியில் இசைதான் கலந்து
படிப்போம் இணைந்திருந்து
வான்வெளியில் பூ விரித்து
காண்போம் முதலிரவு
தேன்மொழியில் இசைதான் கலந்து
படிப்போம் இணைந்திருந்து

வானும் இந்த பூமியும்
நானும் தந்தேன் சீதனம்
கையில் வந்த பூவுடல்
காதல் மலர்ப்பூவனம்
கண்ணே காதல் பெண்ணே
காமன் கோயில் வாசல் முன்னே

ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா (பெண் குழு: தனன)
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா  (பெண் குழு: தனனனன)
தேவதையே திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே
ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா (பெண் குழு: தனன)
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா  (பெண் குழு: தனனனன)


*********************************

குருவாயூரப்பா குருவாயூரப்பா - புதுப்புது அர்த்தங்கள் பாடல் வரிகள்



படம் : புதுப்புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா

*********************************

ஆண் :
குருவாயூரப்பா குருவாயூரப்பா
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட
காதலுக்கு நீதானே சாட்சி

பெண் :
குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வம் இல்லை
நீதானே பாக்கி

ஆண் :
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை
என்னாளும் உன் பாதை
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை
என்னாளும் உன் பாதை

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி

*********************************

ஆண் :
தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில்
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்

பெண் :
தினம் தோறும் இரவில்
நடு ஜாமம் வரையில்
நான்தானே அதைக் கேட்டிருந்தேன்

ஆண் :
அரங்கேற்றம் தான் ஆகாமல்தான்
அலைபாயும் என் ஜீவன் தான்

பெண் :
வா வா என் தேவா
செம்பூவா என் தேகம்
சேராதோ உன் கைகளிலே

ஆண் :
குருவாயூரப்போ குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி

*********************************

பெண் :
ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்
என் மேல் ஒரு போர் தொடுக்க

ஆண் :
எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு
மானே வா உனை யார் தடுக்க

பெண் :
பரிமாறலாம் பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்

ஆண் :
மாது உன் மீது
இப்போது என்மோகம்
பாயாதோ சொல் பூங்குயிலே

ஆண் :
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி

பெண் :
குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வம் இல்லை
நீதானே பாக்கி

ஆண் :
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை
என்னாளும் உன் பாதை

பெண் :
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி

ஆண் :
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி

*********************************

Thursday, October 3, 2019

செம்பூவே பூவே உன் மேகம் - சிறைச்சாலை பாடல் வரிகள்



படம் : சிறைச்சாலை
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
செம்பூவே பூவே உன் மேகம்
நான் வந்தால் ஒரு வழியுண்டோ

பெண்:
சாய்ந்தாடும் சங்கில் துளி
பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

ஆண்:
படை கொண்டு நடக்கும்
மன்மதச் சிலையோ ஹோ

பெண்:
மன்னவன் விரல்கள்
பல்லவன் உளியோ ஹோ

ஆண்:
இமைகளும் உதடுகள் ஆகுமோ

பெண்:
வெட்கத்தின் விடுமுறை
ஆயுளின் வரைதானோ

ஆண்:
செம்பூவே பூவே உன் மேகம்
நான் வந்தால் ஒரு வழியுண்டோ

பெண்:
சாய்ந்தாடும் சங்கில் துளி
பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

*********************************

ஆண்:
அந்திச் சூரியனும் குன்றில் சாய
மேகம் வந்து கச்சையாக
காமன் தங்கும் மோகப்
பூவில் முத்தக் கும்மாளம்

பெண்:
தங்கத் திங்கள்
நெற்றிப் பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சில் ஆடும் சுவாசச்சூட்டில்
காதல் குற்றாலம்

ஆண்:
தேன் தெளிக்கும் தென்றலாய்
நின்னருகில் வந்து நான்
சேலை நதியோரமாய்
நீந்தி விளையாடவா

பெண்:
நாளும் மின்னல் கொஞ்சும்
தாழம்பூவைச் சொல்லி

ஆண்:
ஆசைக் கேணிக்குள்ளே
ஆடும் மீன்கள் துள்ளி

பெண்:
கட்டிலும் கால்வலி கொள்ளாதோ
கைவளை கைகளை கீறியதோ

ஆண்:
செம்பூவே பூவே உன் மேகம்
நான் வந்தால் ஒரு வழியுண்டோ

பெண்:
சாய்ந்தாடும் சங்கில் துளி
பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

*********************************

பெண்:
இந்த தாமரைப்பூ தீயில் இன்று
காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் தூண்டில்
தும்பி பாடிச் செல்லாதோ

ஆண்:
அந்த காமன் அம்பு என்னைச் சுட்டு
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும்
சேலைப் பொன் பூவே

பெண்:
விம்மியது தாமரை
வண்டு தொடும் நாளிலோ
பாவை மயில் சாயுதே
மன்னவனின் மார்பிலோ

ஆண்:
முத்தத்தாலே பெண்ணே
சேலை நெய்வேன் கண்ணே

பெண்:
நாணத்தாலோர் ஆடை
சூடிக் கொள்வேன் நானே

ஆண்:
பாயாகும் வழி சொல்லாதே
பஞ்சணை புதையல் ரகசியமே

பெண்:
சாய்ந்தாடும் சங்கில் துளி
பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

ஆண்:
செம்பூவே பூவே உன் மேகம்
நான் வந்தால் ஒரு வழியுண்டோ

பெண்:
மன்னவன் விரல்கள்
பல்லவன் உளியோ ஹோ

ஆண்:
படை கொண்டு நடக்கும்
மன்மதச் சிலையோ ஹோ

பெண்:
இமைகளும் உதடுகள் ஆகுமோ

ஆண்:
வெட்கத்தின்
விடுமுறை ஆயுளின் வரைதானோ
செம்பூவே பூவே உன் மேகம்
நான் வந்தால் ஒரு வழியுண்டோ

பெண்:
சாய்ந்தாடும் சங்கில் துளி
பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

*********************************

ஆலோலம் கிளி தோப்பிலே - சிறைச்சாலை பாடல் வரிகள்



படம் : சிறைச்சாலை
இசை: இளையராஜா

*********************************

குழு :
ஹே ல லா லா லா லா ல லா
லா லா லா லா லா லா
லா லா லா லா லா லா

பெண்:
ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிட கூடாதடி கூத்துக்காரி

ஆண் :
ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி

பெண் :
நெஞ்சிலொரு தும்பி பறக்கும்
ஹைய்யோ ஹையய்யோ

ஆண் :
செல்லக்கிளி சிந்து படிக்கும்
ஹைய்யோ ஹையய்யோ

பெண் :
ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

*********************************

ஆண் :
கடல் கடக்குது இதயம்
உன் கண்ணில் நீந்தித்தானோ ஹோய்

பெண் :
துடிதுடிக்கிற நெஞ்சில்
இனி தூவானம் மழைதானோ

ஆண் :
காதல் விழாக் காலம்
கைகளில் வாவா
ஈர நிலாப் பெண்ணே

பெண் :
தெம்மாங்கை ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன்னூஞ்சல் ஆடி வா

ஆண் :
வீணை புது வீணை சுதி சேர்த்தவன்
நானே நம் காதலின் கீதங்களில்
வானம் வளைப்பேனே

பெண் :
ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

*********************************

பெண் :
கனவு கொடுத்த நீயே
என் உறக்கம் வாங்கலாமோ

ஆண் :
கவிதை விழிக்கும் நேரம்
நீ உறங்கப் போகலாமோ ஹோய்

பெண் :
பூவிழியின் ஓரம் வானவில் கோலம்
பொன்மகளின் நாணம்

ஆண் :
நிலாவின் பிள்ளை இங்கு நீதானோ
பூஞ்சோலை பூக்களுக்குத் தாய்தானோ

பெண் :
ஆசை அகத்திணையா
வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வாவா
புதுக்காதல் குறுந்தொகையா

ஆண் :
ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி

பெண் :
நெஞ்சிலொரு தும்பி பறக்கும்
ஹைய்யோ ஹையய்யோ

ஆண் :
செல்லக்கிளி சிந்து படிக்கும்
ஹைய்யோ ஹையய்யோ

பெண் :
ஆலோலம் கிளி தோப்பிலே
தங்குமே கிளி தங்குமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

*********************************