படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
******************************************
பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும்
கொடியை தாங்கும் தகதோம்
ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
சிறுதங்கம் தாங்கும்
அங்கம் ஏங்கும் தகதோம்
ஆண் : தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும்
இளமைதான் கொடி கட்டும் ஹோய்
பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
******************************************
ஆண் : இரவில் உன்னோடு நர்த்தனம் தான்
இடையில் உண்டாகும் சத்தம்
உறவில் முன்னூறு கீர்த்தனம் தான்
இதழ்கள் கொண்டாடும் முத்தம்
பெண் : சுதந்திரம் தினம் தினம் தான்
நிரம்தரம் சுகம் சுகம்தான்
நலம் பெறும் மனம் மனம் தான்
வலம் வரும் நகர்வலம் தான்
ஆண் : இணையத்தான் இணையத்தான்
அணையத்தான் அணையத்தான்
பெண் : ஒரு அத்தான் ஒரு அத்தான்
உருகத்தான் உருகத்தான்
ஆண் : திசை எட்டும் இசை எட்டும்
தாளங்கள் முழங்கட்டும் ஹோய்
பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும்
கொடியை தாங்கும் தகதோம்
ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
சிறுதங்கம் தாங்கும்
அங்கம் ஏங்கும் தகதோம்
******************************************
பெண் : கழுவும் தண்ணீரில் நழுவிடுமே
வலையில் சிக்காத மீன்கள்
தடைகள் இல்லாமல் தாவிடுமே
நடைகள் கொண்டாடும் மான்கள்
ஆண் : சிறையினில் பறவைகள்தான்
சிறகினை விரித்திடத்தான்
பிறந்தது துணிச்சலுந்தான்
பறந்திடும் இருப்பிடம்தான்
பெண் : இதயத்தில் துணிவைத்தான்
குடி வைக்கும் குடி வைக்கும்
ஆண் : எதிரிக்கும் உதிரிக்கும்
வெடி வைக்கும் வெடி வைக்கும்
இருவரும் :
திசை எட்டும் கொடி கட்டும்
தாளங்கள் முழங்கட்டும் ஹோய்
ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
பெண் : ஹா
ஆண் : பட்டும் படாமல் பட்டோம்
பெண் : ஹா
ஆண் : சிறுதங்கம் தாங்கும்
அங்கம் ஏங்கும் தகதோம்
பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
ஆண் : ஹே
பெண் : தொட்டும் தொடாமல் தொட்டோம்
ஆண் : ஹா
பெண் : கனியை தாங்கும்
கொடியை தாங்கும் தகதோம்
ஆண் : தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும்
இளமைதான் கொடி காட்டும் ஹோய்
பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
ஆண் : தத்த தத்தோம் தளாங்கு தத்தோம்
பெண் : தத்த
ஆண் : பட்டும் படாமல் பட்டோம்
பெண் : தத்த
******************************************