தமிழில் தேட.....

Tuesday, December 15, 2020

நிலா காயும் நேரம் - செம்பருத்தி பாடல் வரிகள்



படம்: செம்பருத்தி

இசை: இளையராஜா 


*********************************


ஆண்: 

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும் 


பெண்: 

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும் 


ஆண்: 

பார்வையில் புது புது

கவிதைகள் மலர்ந்திடும்

காண்பவை யாவுமே தேன்

அன்பே நீயே அழகின் அமுதே 

அன்பே நீயே அழகின் அமுதே 


பெண்: 

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும் 


*********************************


ஆண்: 

தென்றல் தேரில் நான் தான்

போகும் நேரம் பார்த்து

தேவர் கூட்டம் பூ தூவி

பாடும் நல்ல வாழ்த்து 


பெண்: 

கண்கள் மூடி நான் தூங்க

திங்கள் வந்து தாலாட்டும்

காலை நேரம் ஆனாலே

கங்கை வந்து நீராட்டும் 


ஆண்: 

நினைத்தால் இதுப் போல் 

ஆகாததேது 


பெண்: 

அணைத்தால் உனைத்தான்

நீங்காது பூ மாது 


ஆண்: 

நெடு நாள் திருத்தோள்

எங்கும் நீ கொஞ்ச

அன்பே நீயே அழகின் அமுதே 

அன்பே நீயே அழகின் அமுதே 


பெண்: நிலா காயும் நேரம் சரணம்


ஆண்: உலா போக நீயும் வரணும் 


*********************************


பெண்: 

மின்னல் நெய்த சேலை

மேனி மீது ஆட

மிச்சம் மீதி காணாமல்

மன்னன் நெஞ்சம் வாட


ஆண்: 

அர்த்த ஜாமம் நான் சூடும்

ஆடை என்றும் நீயாகும்

அங்கம் யாவும் நீ மூட

ஆசை தந்த நோய் போகும்


பெண்: 

நடக்கும் தினமும்

ஆனந்த யாகம் 


ஆண்: 

சிலிர்க்கும் அடடா

ஸ்ரீதேவி பூந்தேகம் 


பெண்: 

அனைத்தும் வழங்கும்

காதல் வைபோகம்

அன்பே நீயே அழகின் அமுதே 

அன்பே நீயே அழகின் அமுதே 


ஆண்: 

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும் 


பெண்: 

பார்வையில் புது புது

கவிதைகள் மலர்ந்திடும்

காண்பவை யாவுமே தேன்


ஆண்: 

அன்பே நீயே அழகின் அமுதே 

அன்பே நீயே அழகின் அமுதே 


பெண்:  நிலா காயும் நேரம் சரணம்


ஆண்:  உலா போக நீயும் வரணும் 



*********************************


Monday, December 14, 2020

விழிகள் மேடையாம் - கிளிஞ்சல்கள் பாடல் வரிகள்


படம்: கிளிஞ்சல்கள்

இசை: டி ராஜேந்தர் 


*********************************


பெண்: 

பாப்ப பாப்ப பா 

பாப்ப பாப்ப பா


ஆண்:

பாப்ப பாப்ப பா 

பாப்ப பாப்ப பா


பெண்: 

லால லால லா 

லால லால லா

ஆண்:

லால லால லா 

லால லால லா


பெண்: 

விழிகள் மேடையாம்

இமைகள் திரைகளாம்

விழிகள் மேடையாம்

இமைகள் திரைகளாம்

பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

ஓஓஓஓஓஓஓஓ ஓ


ஆண்: 

ஜூலி ஐ லவ் யூ (பெண்: ஹஅ அஅஅஅ அஅஅஅ)

ஜூலி ஐ லவ் யூ (பெண்: ஹஅ அஅஅஅ அஅஅஅ)

பபப் பபப் பபப் பபப்

ஜூலி ஐ லவ் யூ ( பெண்: ஹோ )

பபப் பபப் பபப் பபப்

ஜூலி ஐ லவ் யூ


*********************************


பெண்:

மை தடவும் விழியோரம்

மோகனமாய் தினம் ஆடும்

மயக்கம் தரும்

மன்னவனின் திருவுருவம்

மை தடவும் விழியோரம்

மோகனமாய் தினம் ஆடும்

மயக்கம் தரும்

மன்னவனின் திருவுருவம்


மன வீணையிலே நாதமீட்டி

கீதமாகி நீந்துகின்ற தலைவா

இதழ் ஓடையிலே வார்த்தையென்னும்

பூக்களாகி மிதக்கின்ற பாட்டா


விழிகள் மேடையாம்

இமைகள் திரைகளாம்

பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

ஓஓஓஓஓஓஓஓ ஓ


ஆண்: 

ஜூலி ஐ லவ் யூ (பெண்: ஹஅ அஅஅஅ அஅஅஅ)

ஜூலி ஐ லவ் யூ (பெண்: ஹஅ அஅஅஅ அஅஅஅ)


*********************************



பெண்:

பப பப்பா

பா பா பா பா


ஆண்:

தரத தத்தா

ஹ்ம்ம்

பெண்:

நினைவென்னும் காற்றினிலே

மனமென்னும் கதவாட

தென்றலென வருகை தரும்

கனவுகளே

உன் நினைவென்னும் காற்றினிலே

மனமென்னும் கதவாட

தென்றலென வருகை தரும்

கனவுகளே


மது மாலையிலே மஞ்சள் வெயில்

கோலமென நெஞ்சமதில் நீ வீச

மனச் சோலையிலே வட்டமிடும்

வாசமென்னும் உள்ளமதில் நீ பொங்க

விழிகள் மேடையாம்

இமைகள் திரைகளாம்

பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

ஓஓஓஓஓஓஓஓ ஓ


ஆண்: 

ஜூலி ஐ லவ் யூ

ஜூலி ஐ லவ் யூ

பபப் பபப் பபப் பபப்

ஜூலி ஐ லவ் யூ ( பெண்: ஹோ )

பபப் பபப் பபப் பபப்

ஜூலி ஐ லவ் யூ ( பெண்: ஹோ )


*********************************


Saturday, December 5, 2020

சின்ன சின்ன கண்ணா - கிளிஞ்சல்கள் பாடல் வரிகள்



படம்: கிளிஞ்சல்கள்

இசை: டி ராஜேந்தர் 


*********************************


சின்ன சின்ன கண்ணா 

சேதி சொல்லும் மன்னா

உன்னில் என்னை என்னில் உன்னை காண 

கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண

ஓடி இங்கே வாராய் 

ஒண்ணே ஒண்ணு தாராய்

சின்ன சின்ன கண்ணா 

சேதி சொல்லும் மன்னா

உன்னில் என்னை என்னில் உன்னை காண 

கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண


*********************************


சுட்டி பையா சுற்றி வந்தால் 

முட்டி தருவேனோ

எட்டி நின்றால் கட்டிக் கொள்ள 

என்ன செய்வேனோ

அடம் ஒன்று பிடிக்காதே 

தேர் வலம் என்று இழுக்காதே

ஹே ஹே ஹே அடம் ஒன்று பிடிக்காதே 

தேர் வலம் என்று இழுக்காதே

பொடியுடன் சிலிர்த்திட கைகளில் தவழ்ந்திட 

சுகம் ஒன்று பிறக்காதோ

கேட்டதை கொடுத்திட தருவதை வாங்கிட

தடம் ஒன்றும் இருக்காதோ


சின்ன சின்ன கண்ணா 

சேதி சொல்லும் மன்னா

உன்னில் என்னை என்னில் உன்னை காண 

கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண


*********************************


துடிக்குது வாட்ச்சு கொதிக்குது மூச்சு 

வாட்டி வதைக்காதே

கண்ணாம் மூச்சு கண்டால்  போச்சு 

ஓடி ஒளியாதே 

தந்தது போதாதோ 

நீ தவிப்பது புறியாதோ

ஓ ஓ ஓ தந்தது போதாதோ 

நீ தவிப்பது புறியாதோ

கன்னத்தை திரிகிட கைவிரல் தொடுத்திட 

அணைத்திட வருவாயோ

காற்றினில் மிதந்திடும் கவிதையை படித்திட 

பொருள் அதை உறைப்பாயோ


சின்ன சின்ன கண்ணா 

சேதி சொல்லும் மன்னா

உன்னில் என்னை என்னில் உன்னை காண 

கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண

ஓடி இங்கே வாராய் 

ஒண்ணே ஒண்ணு தாராய்

சின்ன சின்ன கண்ணா 

சேதி சொல்லும் மன்னா

உன்னில் என்னை என்னில் உன்னை காண 

கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண


*********************************


Thursday, December 3, 2020

கிளையில்லா மரங்களில் - காதல் ஒரு வழி - கிளிஞ்சல்கள் பாடல் வரிகள்



படம்: கிளிஞ்சல்கள்

இசை: டி ராஜேந்தர் 


*********************************


கிளையில்லா மரங்களில் 

நிழல் தேடும் மனங்களே

அழிவில்லா காதலில் 

அழிகின்ற மலர்களே

ஆ ஆ ஆ ஆ ஆஆ

அழிகின்ற மலர்களே


காதல் ஒரு வழி பாதை பயணம் 

அதில் நுழைவது என்பது சுலபம்

பின்பு திரும்பிட நினைப்பது பாவம்

பின்பு திரும்பிட நினைப்பது பாவம்

அது ஆற்றிட முடியா காயம் 

காதல் ஆற்றிட முடியா காயம்


காதல் ஒரு வழி பாதை பயணம் 

அதில் நுழைவது என்பது சுலபம்



*********************************


மேகங்கள் போட்டிடும் கோலம் 

அது காற்றினில் கலைந்திட சோகம்

மேகங்கள் போட்டிடும் கோலம் 

அது காற்றினில் கலைந்திட சோகம்

காலை கதிரவன் அழித்திடும் பனி போல்

காலை கதிரவன் அழித்திடும் பனி போல்

காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ

காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ


காதல் ஒரு வழி பாதை பயணம் 

அதில் நுழைவது என்பது சுலபம்


*********************************


கோடையில் காய்ந்திடும் நதிகள் 

எந்த நிலையிலும் காயாத விழிகள்

கோடையில் காய்ந்திடும் நதிகள் 

எந்த நிலையிலும் காயாத விழிகள்

கதை சாகின்ற வரையும் தொடரும்

கதை சாகின்ற வரையும் தொடரும்

கட்டை வேகின்ற போதும் மலரும்

கட்டை வேகின்ற போதும் மலரும்


காதல் ஒரு வழி பாதை பயணம் 

அதில் நுழைவது என்பது சுலபம்

பின்பு திரும்பிட நினைப்பது பாவம்

பின்பு திரும்பிட நினைப்பது பாவம்

அது ஆற்றிட முடியா காயம் 

காதல் ஆற்றிட முடியா காயம்



*********************************


Wednesday, December 2, 2020

அழகினில் விளைந்தது - கிளிஞ்சல்கள் பாடல் வரிகள்



படம்: கிளிஞ்சல்கள்

இசை: டி ராஜேந்தர் 


*********************************


அழகினில் விளைந்தது

மழையினில் நனைந்தது

மனதுக்கு சுகம் தருது

அம்மம்மோ 

ஸ் ஹா ஸ் ஹா ஸ் ஹா

அம்மம்மோ

ஸ் ஹா ஹா ஹா


அழகினில் விளைந்தது

மழையினில் நனைந்தது

மனதுக்கு சுகம் தருது

அம்மம்மோ

ஸ் ஹா ஸ் ஹா ஸ் ஹா

அம்மம்மோ

ஹா ஹா ஹா ஹா ஹா


*********************************


விழியோ 

பிரம்மன் மயக்கத்தில்

வரைந்த கவிதை 

லலலல லல லலலா லாலா

லலலல லல லலலா லாலா

லலலல லல லலலா லாலா

தரத்த தரத்தாதா


விழியோ 

பிரம்மன் மயக்கத்தில்

வரைந்த கவிதை 

மொழியோ அமுதம் குரலாகி

பொழிகின்ற போதை

ஒரு ஆனந்தராகம்

இவள் அல்லிவிழி ஜாலம்

ஒரு ஆனந்தராகம்

இவள் அல்லிவிழி ஜாலம் 

ஓஓ ஓஓ ஓஓ


அழகினில் விளைந்தது

மழையினில் நனைந்தது

மனதுக்கு சுகம் தருது

அம்மம்மோ 

ஸ் ஹா ஸ் ஹா ஸ் ஹா

அம்மம்மோ

ஸ் ஹா ஹா ஹா


*********************************


சுகத்தை 

சுருதி மாறாமல் படிக்கின்ற வீணை

லாலலலாலா பபபாபா 

லாலலலாலா தரத்தாதா

தரத்த தரத்தாதா தரத்த தரத்த  தா


சுகத்தை 

சுருதி மாறாமல் 

படிக்கின்ற வீணை

திராட்சை 

ரசத்தை வசமாக்கி

தருகின்ற பார்வை

வான வில்லென்னும் நாணம் (ஹஹா)

காண ஜில்லென்னும் கோலம்

வான வில்லென்னும் நாணம்

காண ஜில்லென்னும் கோலம்

ஹே ஹே ஹே யே


அழகினில் விளைந்தது

மழையினில் நனைந்தது

மனதுக்கு சுகம் தருது

அம்மம்மோ 

ஸ் ஹா ஸ் ஹா ஸ் ஹா

அம்மம்மோ

ஸ் ஹா ஹா ஹா

அம்மம்மோ 

ஹஹஹஹா

அம்மம்மோ

ஹஹஹஹா ஹஹஹஹா


*********************************


Sunday, November 22, 2020

உறவெனும் புதிய வானில் - நெஞ்சத்தை கிள்ளாதே பாடல் வரிகள்

 

படம்: நெஞ்சத்தை கிள்ளாதே

இசை: இளையராஜா


*********************************


பெண்: 

ப ப ப பா 

ப ப ப பா பா

ப ப ப ப 

ப ப ப பா பா

உறவெனும் புதிய வானில்

பறந்ததே இதய மோகம்

ஓடும் அலை என மனம் ஏங்கும்

கனவிலும் (ஆண்: பப ப ப பா)

நினைவிலும் (ஆண்: பபபபா)

புது சுகம் (ஆண்: பபபபா)

உறவெனும் புதிய வானில்

பறந்ததே இதய மோகம்


*********************************


ஆண்: 

பார்வை ஒவ்வொன்றும் கூறும் 

பொன் காவியம்

பார்வை என்கின்ற கோலம் 

பெண் ஓவியம்


பெண்: 

மாலை வரும் போதிலே

நாளும் உந்தன் தோளிலே


ஆண்: 

கனவில் ஆடும் 

நினைவு யாவும்

கனவில் ஆடும் நினைவு யாவும்

இனிய பாவம் 


பெண்: 

உறவெனும் புதிய வானில்

பறந்ததே இதய மோகம்


*********************************



பெண்: 

நெஞ்சில் உள்ளூர ஓடும் 

என் ஆசைகள்

நேரம் இல்லாமல் நாளும் 

உன் பூஜைகள்


ஆண்: 

எந்தன் மனம் எங்கிலும்

இன்பம் அது சங்கமம்


பெண்: 

இணைந்த கோலம் 

இனிய கோலம்

இணைந்த கோலம் இனிய கோலம்

இளமை காலம்


ஆண்: 

உறவெனும் புதிய

வானில் பறந்ததே இதய மோகம்

ஓடும் அலை என மனம் ஏங்கும்

கனவிலும் (பெண்: பப ப ப பா)

நினைவிலும் (பெண்: பபபபா)

புது சுகம்(பெண்: பபபபா)


ஆண்: 

ப ப ப பா 

ப ப ப பா பா

ப ப ப ப 

ப ப ப பா பா


*********************************


Tuesday, November 17, 2020

பருவமே புதிய பாடல் - நெஞ்சத்தை கிள்ளாதே பாடல் வரிகள்



படம்: நெஞ்சத்தை கிள்ளாதே

இசை: இளையராஜா


*********************************


ஆண்: 

பருவமே 

புதிய பாடல் பாடு


பெண்: 

பருவமே 

புதிய பாடல் பாடு


ஆண்: 

இளமையின் 

பூந்தென்றல் ராகம்


பெண்: 

இளமையின் 

பூந்தென்றல் ராகம்


ஆண்: பருவமே 

பெண்: புதிய பாடல் பாடு


*********************************


ஆண்: 

பூந்தோட்டத்தில் ஹோய்

காதல் கண்ணம்மா

பூந்தோட்டத்தில் ஹோய்

காதல் கண்ணம்மா


பெண்: 

சிரிக்கிறாள் ஹோ ஹோ

ரசிக்கிறான் ராஜா

சிவக்கிறாள் ஹோ ஹோ

துடிக்கிறாள் ராணி


ஆண்: 

தீபங்கள் போலாடும்

பார்வை சேரும்


ஆண்:  பருவமே 

பெண்: புதிய பாடல் பாடு


*********************************


பெண்: 

தேனாடும் முல்லை

நெஞ்சில் என்னவோ

தேனாடும் முல்லை

நெஞ்சில் என்னவோ


ஆண்: 

அழைக்கிறான் ஹோ ஹோ

நடிக்கிறான் தோழன்

அணைக்கிறான் ஹோ ஹோ

தவிக்கிறாள் தோழி


பெண்: 

காலங்கள் பொன்னாக

மாறும் நேரம்


பெண்: பருவமே 

ஆண்: புதிய பாடல் பாடு

ஆண்: இளமையின்

பெண்: பூந்தென்றல் ராகம்

ஆண்: பருவமே 

பெண்: புதிய பாடல் பாடு


*********************************


Monday, November 16, 2020

ஏ தென்றலே - நெஞ்சத்தை கிள்ளாதே பாடல் வரிகள்



படம்: நெஞ்சத்தை கிள்ளாதே

இசை: இளையராஜா


*********************************


குழு : 

லலலல லலலல லலலல லலலலல

லலலல லலலல லலலல லலல

லலலல லலலல லலலல லலலலல

லலலல லலலல லலலல லலல

ல லலலல ல லலலல ல லலலல ல லலலல

ல லலலல ல லலலல ல லலலல ல லலலல


பெண் : 

ஏ தென்றலே

இனி நாளும் பாடவா  (குழு :  ல ல ல ல ல)

என் வாழ்வெல்லாம்

சுப மாலை சூடவா  (குழு :  ல ல ல ல ல)

இளமை கவிதை

மனதில் இனிமை

பாடவே நீ வா


ஏ தென்றலே

இனி நாளும் பாடவா  (குழு :  ல ல ல ல ல)


*********************************


பெண் : 

வாழ்வென்பதே ஆராதனை (குழு :  ல லல லல லல ல)

வாழ் நாளெல்லாம் உன் தேவதை (குழு :  ல லல லல லல ல)

நினைத்தே சிறு நெஞ்சமே

நிதமும் நலமே (குழு :  ல ல ல ல ல)

நிழல் போல் உன்னை சேருவேன்

வளரும் சுகமே (குழு :  ல ல ல ல ல)

இனிமேல் இனிமை இனி ஏன் தனிமை 


ஏ தென்றலே

இனி நாளும் பாடவா


*********************************


குழு :  

ல லல லல ல

ல லல லல ல

ல லல லல ல


பெண் : 

தென் காற்றிலே சங்கீதமே (குழு :  ல லல லல லல ல)

என் நெஞ்சிலே உன் பாவமே (குழு :  ல லல லல லல ல)

தினமும் ஜதி போடுதே

அதில் ஓர் சுகமே  (குழு :  ல ல ல ல ல)

சிரிக்கும் மனமீதிலே

தெரியும் முகமே  (குழு :  ல ல ல ல ல)

ரசித்தேன் அழகை ரசிக்கும் மனதை


பெண் : 

ஏ தென்றலே

இனி நாளும் பாடவா  (குழு :  ல ல ல ல ல)

என் வாழ்வெல்லாம்

சுபா மாலை சூடவா (குழு :  ல ல ல ல ல)

இளமை கவிதை

மனதில் இனிமை

பாடவே நீ வா


ஏ தென்றலே

இனி நாளும்  பாடவா(குழு :  ல ல ல ல ல)


*********************************


Thursday, November 12, 2020

ஆசை ராஜா ஆரீரோ - மூடு பனி பாடல் வரிகள்


படம்: மூடு பனி

இசை: இளையராஜா


*********************************


பெண் : 

ஆசை ராஜா ஆரீரோ

அம்மா பொன்னே  ஆரீரோ

தோளிலே மாலையாய் 

ஆடும் கண்ணா ஆரீரோ 

ஆடும் கண்ணா ஆரீரோ


ஆசை ராஜா ஆரீரோ

அம்மா பொன்னே  ஆரீரோ

தோளிலே மாலையாய் 

ஆடும் கண்ணா ஆரீரோ 

ஆடும் கண்ணா ஆரீரோ


ஆரீரோ ஆரீரோ


*********************************

Wednesday, November 11, 2020

பருவ காலங்களின் கனவு - மூடு பனி பாடல் வரிகள்



படம்: மூடு பனி

இசை: இளையராஜா


*********************************


பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


ஆண் : 

தகு திகு ததாங்கு தான் திகு திகு திகு 

தகு திகு ததாங்கு தான் திகு திகு திகு 

தகு திகு ததாங்கு தான் திகு திகு திகு 

தகு திகு ததாங்கு தான் திகு திகு திகு 


பெண் : 

ஜூ ரூரூரூரூ ரூரூரூரூ ரூரூ

ரூரூரூரூ ரூரூரூரூ ரூரூ 

தகு திகு ததாங்கு தான் திகு திகு திகு 

தகு திகு ததாங்கு தான் திகு திகு திகு 

தகு திகு ததாங்கு தான் திகு திகு திகு 

தகு திகு ததாங்கு தான் திகு திகு திகு 


பருவ காலங்களின் கனவு

நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு


ஆண் : 

தழுவி சேருகின்ற நினைவு

இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு

உன் நினவு பாம் பப பாம்ப பாம்


பெண் : 

பருவ காலங்களின் கனவு

நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு


*********************************


குழு : 

தாதாதாதா தாதாதாதா 

தாதாதாதா தாதாதாதா  


ஆண்:  இடை வெளி இல்லாத தொடர்கதை


குழு :  லாலாலாலா லாலாலாலா லாலாலாலா


ஆண்:  எழுத்திலும் சொல்லாத புது சுவை


குழு :  லாலாலாலா லாலாலாலா லாலாலாலா


பெண் : 

இதழின் மேலாக

இனிமை நூறாக 

எழுது


குழு : லாலாலா லாலாலா லாலாலா


பெண் : 

இரவு முடியாத

பொழுது விடிகின்ற பொழுது


குழு : லாலாலா லாலாலா லாலாலா


ஆண் : 

தழுவ தானே தவித்த மானே

இனிமை உன்னோடு பாபபாம்

பாம் பப பாம் ப பாம்


பெண் : 

பருவ காலங்களின் கனவு

நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு


பெண் : 

ஜூ ரூரூரூரூ ரூரூரூரூ ரூரூ

ரூரூரூரூ ரூரூரூரூ ரூரூ 

தகு திகு ததாங்கு தான் திகு திகு திகு 

தகு திகு ததாங்கு தான் திகு திகு திகு 

தகு திகு ததாங்கு தான் திகு திகு திகு 

தகு திகு ததாங்கு தான் திகு திகு திகு 


*********************************


குழு : 

ஆஆ ஆஆஆஆ

ஆஆ  ஆஆ


பெண்: நகங்களில் உறங்கிய சுகங்களில்

குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

பெண்: சுகங்களை பெறுகின்ற விதங்களில்

குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ


ஆண்: 

புதிய உணர்வோடு 

புரண்டு சுகம் தேடு கனியே 


குழு : லாலாலா லாலாலா லாலாலா


ஆண்: 

பிடித்த பிடியோடு 

ரசித்து உறவாடு பெண்ணே


குழு : லாலாலா லாலாலா லாலாலா


பெண்:

மலர்ந்த பூவும் மலரில் தேனும்

இணைந்து ஒன்றாகும் பபபா 

ப பாப்பா பபபா


பருவ காலங்களின் கனவு

நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு


ஜூ ரூரூரூரூ ரூரூரூரூ ரூரூ

ரூரூரூரூ ரூரூரூரூ ரூரூ 

தகு திகு ததாங்கு தான் திகு திகு திகு 

தகு திகு ததாங்கு தான் திகு திகு திகு 

தகு திகு ததாங்கு தான் திகு திகு திகு 

தகு திகு ததாங்கு தான் திகு திகு திகு 



*********************************


 


Tuesday, November 10, 2020

என் இனிய பொன் நிலாவே - மூடு பனி பாடல் வரிகள்


படம்: மூடு பனி 

இசை: இளையராஜா


*********************************


ஆண்:

என் இனிய பொன் நிலாவே

பொன் நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம்

த ர ர ரா த தா

தொடருதே தினம் தினம்

த ர ர ரா த தா


என் இனிய பொன் நிலாவே 

பொன் நிலவில் என் கனாவே


குழு : 

லா லாலாலாலா லாலா

லாலாலாலா லாலலா

தா ரா ர த ர த த த த த தா ரா த த

தா ரா ர த ர த த த த த தா ரா த த

தா ரா ர த த

தா ரா ர த த


*********************************


ஆண்:

பன்னீரைத் தூவும் மழை 

ஜில்லென்ற காற்றின் அலை 

சேர்ந்தாடும் இந்நேரமே


குழு : லா லாலலா


ஆண்:

என் நெஞ்சில் என்னென்னவோ

எண்ணங்கள் ஆடும் நிலை

என் ஆசை உன்னோரமே


குழு : லா லால லா


ஆண் : 

வெண் நீல  வானில்

அதில் என்னென்ன மேகம்

ஊர்கோலம் போகும் 

அதன் உள்ளாடும் தாகம் 

புரியாதோ என் எண்ணமே 

அன்பே


என் இனிய பொன் நிலாவே

பொன் நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம் 

த ர ர ரா த தா 

தொடருதே தினம் தினம்

த ர ர ரா த தா


என் இனிய பொன் நிலாவே 

பொன் நிலவில் என் கனாவே


*********************************


ஆண் : 

பொன்மாலை நேரங்களே

என் இன்ப ராகங்களே 

பூவான கோலங்களே


குழு : லா லாலலா லாலலா


ஆண் : 

தென் காற்றின் இன்பங்களே

தேனாடும் ரோஜாக்களே

என்னென்ன ஜாலங்களே


குழு : லா லால லா லாலலா


ஆண் : 

கண்ணோடு தோன்றும்

சிறு கண்ணீரில் ஆடும் 

கைசேரும் காலம் 

அதை என் நெஞ்சம் தேடும்

இது தானே என் ஆசைகள்

அன்பே


என் இனிய பொன் நிலாவே

பொன் நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம் 

த ர ர ரா த தா 

தொடருதே தினம் தினம்

த ர ர ரா த தா


என் இனிய பொன் நிலாவே 

பொன் நிலவில் என் கனாவே


*********************************


Monday, November 9, 2020

வேதம் அணுவிலும் - சலங்கை ஒலி பாடல் வரிகள்

வேதம் அணுவிலும் - சலங்கை ஒலி பாடல் வரிகள்


படம்: சலங்கை ஒலி

இசை: இளையராஜா


*********************************


ஆண் : 

க ம நி

க ம க ஸ (க ம க ஸ)

ம க ஸ (ம க ஸ)

கஸ (கஸ) 

நீ ஸ (ஸ ) 

நி த ம க (நி த ம க)

த ம க (த ம க) 

ம க

ஸரி ஸநி

கம கரி

கமக மதம தநித நிஸநிரி 


வேதம் அணுவிலும் ஒரு நாதம்

வேதம் அணுவிலும் ஒரு நாதம்

நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்

சாவின் ஓசை கேட்கும் போதும்

பாதம் ஆடாதோ

வேதம்

வேதம் அணுவிலும் ஒரு நாதம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆ 


*********************************


ஆண் : 

சங்கீத நாட்டியமே ஒரு யாகம்

நிரிஸநி தமக

கதமக ரிஸநி

நிரிஸநி தமக

மத நிஸரிஸ கரி மகதம

கமதநி ஸநி தநிமத கமரிகஸ


சங்கீத நாட்டியமே ஒரு யாகம்

வேதங்கள் எரியும் 

தியாகங்கள் புரியும்

ஆடுகிறேன் இது அமைதியின் கீதம்

ஜீவிதமே ஒரு நாட்டியமாகும்


உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே

உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே

என்னுயிரைத் தேடுகிறேன் நானே


வேதம் அணுவிலும் ஒரு நாதம் (பெண் : ஆ........)


பெண் : 

ஆஆஆஆ ஆஆஆஆ 

ஆஆஆஆ ஆஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ

ஆஆஆஆ ஆஆஆஆ 

ஆஆஆஆ ஆஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ

ஆஆஆஆ ஆ


ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ


மாத்ரு தேவோ பவ (ஆண்: ம்ம்ம்ம்)

பித்ரு தேவோ பவ (ஆண்: ம்ம்ம்ம்)

ஆச்சார்ய தேவோ பவ (ஆண்: ம்ம்ம்ம்)

ஆச்சார்ய தேவோ பவ (ஆண்: ம்ம்ம்ம்)

அதிதி தேவோ பவ (ஆண்: ம்ம்ம்ம்)

அதிதி தேவோ பவ (ஆண்: ம்ம்ம்ம்)


பெண் : 

எனையாளும் குருவென்ற தெய்வம்

எதிர்வந்து நடமாட வேண்டும்

சலங்கைக்குள் ஒலிதானே வேதம்

சந்நிதானம் இனி உந்தன் பாதம்


ஆண் : 

நடராஜன் பாதத்தில் கலை சாயுமா

நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா


பெண் : 

நடராஜன் பாதத்தில் கலை சாயுமா

நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா


ஆண் : 

கனவிலும் நனவிலும்

கனவிலும் நனவிலும்

அழகிய பரதங்கள் ஆட


பெண் : 

வேதம் அணுவிலும் ஒரு நாதம்

நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்

சாவின் ஓசை கேட்கும் போதும்

பாதம் ஆடாதோ 

வேதம்


வேதம் அணுவிலும் ஒரு நாதம்  (ஆண்: ஜெயந்தி தே சுக்ருதினோ ரஸ சித்தாஹ)

நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்  (ஆண்:  கவீஷ்வராஹ நாஸ்தி யேஷாம் யஷ காயே)

சாவின் ஓசை கேட்கும் போதும்  (ஆண்:  ஜரா மரணஜம்  பயம் )

பாதம் ஆடாதோ  (ஆண்:  நாஸ்தி ஜரா மரணஜம்  பயம் )

வேதம்  (ஆண்:   நாஸ்தி ஜரா )

வேதம் வேதம் ( ஆண் : மரணஜம்  பயம் )

வேதம்


*********************************







 



நிறம் பிரித்து பார்த்தேன் - டைம் பாடல் வரிகள்


படம்: டைம்

இசை: இளையராஜா


*********************************


ல லா ல லா ல லா லா

ல லா ல லா ல லா லா 


நிறம் பிரித்து பார்த்தேன்

உன் நெஞ்சின் வண்ணம் என்ன

சுரம் பிரித்து கேட்டேன்

சங்கீத வண்ணம் என்ன


பறந்தேன் திரிந்தேன்

உன் ஆசையில் ஓஓஓஓ

கரைந்தேன் உறைந்தேன்

உன் காதலில் ஓஓஓஓ


நிறம் பிரித்து பார்த்தேன்

உன் நெஞ்சின் வண்ணம் என்ன

நிறம் பிரித்து பார்த்தேன்


*********************************


எந்த மேகம் எந்த ஊரில்

இன்று சென்று பொழியும்

முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்

எந்த கல்லில் என்ன சிற்பம்

யார் வடிக்க கூடும்

முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்


காலமே படைத்தது

காலமே மறைத்தது

நாளைகள் என்பது

நாளைதான் உள்ளது


காலமகள் சுட்டு விரல்

எந்த திசை காட்டும்

அங்குதான் மேகமும்

மழை நீர் ஊற்றும்


நிறம் பிரித்து பார்த்தேன்

உன் நெஞ்சின் வண்ணம் என்ன

சுரம் பிரித்து கேட்டேன்

சங்கீத வண்ணம் என்ன


பறந்தேன் திரிந்தேன்

உன் ஆசையில் ஓஓஓஓ

கரைந்தேன் உறைந்தேன்

உன் காதலில் ஓஓஓஓ


நிறம் பிரித்து பார்த்தேன்

உன் நெஞ்சின் வண்ணம் என்ன

நிறம் பிரித்து பார்த்தேன்


*********************************


ஓவியத்தில் எந்த கோடு

எங்கு சேர கூடும்

எல்லாமே எல்லாமே நம் கையிலே

வாழ்க்கை என்னும் சாலை ஒன்று

எங்கு யாரை சேர்க்கும்

எல்லாமே எல்லாமே யார் கையிலே


வசந்தத்தின் சோலைகள்

வழியிலே தோன்றலாம்

காலமும் காதலும்

தோழமை ஆகலாம்


முத்து சிப்பி மூடிவைக்கும்

முத்துக்கள் போல் ஆசை

மூடிவைத்த நெஞ்சுக்குள்ளே

அலைகடல் ஓசை


நிறம் பிரித்து பார்த்தேன்

உன் நெஞ்சின் வண்ணம் என்ன

சுரம் பிரித்து கேட்டேன்

சங்கீத வண்ணம் என்ன


பறந்தேன் திரிந்தேன்

உன் ஆசையில் ஓஓஓஓ

கரைந்தேன் உறைந்தேன்

உன் காதலில் ஓஓஓஓ


நிறம் பிரித்து பார்த்தேன்

உன் நெஞ்சின் வண்ணம் என்ன

நிறம் பிரித்து பார்த்தேன்

பார்த்தேன் பார்த்தேன்


*********************************


Thursday, October 1, 2020

தென்றலது உன்னிடத்தில் - அந்த ஏழு நாட்கள் பாடல் வரிகள்



படம்: அந்த ஏழு நாட்கள்

இசை: M S விஸ்வநாதன் 


*********************************


ஆண் : 

ஸகமப கமகஸ

நிஸநிப கமநிப ஸ ஸ

ஸகமப கமகஸ

நிஸநிப கமநிப ஸ ஸ

ககரி மமக 

பபமபத ரிநிஸ


பெண் : 

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண்மையின் சொர்க்கமே

பார்வையில் வந்ததோ

காவியம் தந்ததோ

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ


*********************************


ஆண் : 

உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை

இன்று தங்கரதம் ஏறியது


பெண் : 

உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை

இன்று கங்கை என மாறியது

உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை

இன்று கங்கை என மாறியது


ஆண் : 

இதுவரை கனவுகள்

இளமையின் நினைவுகள்

ஈடேறும் நாளின்றுதான்


பெண் : 

எதுவரை தலைமுறை

அதுவரை தொடர்ந்திடும்

என்னாசை உன்னோடுதான்


ஆண் : 

பெண்மையின் சொர்க்கமே

பார்வையில் வந்ததோ

காவியம் தந்ததோ


பெண் : 

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ


*********************************


பெண் : 

சந்தம் தேடி சிந்து பாடி

உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்


ஆண் : 

தஞ்சை கோவில் சிற்பம் போலே

ஒரு முத்திரையை நான் பதிப்பேன்

தஞ்சை கோவில் சிற்பம் போலே

ஒரு முத்திரையை நான் பதிப்பேன்


பெண் : 

அனுதினம் இரவெனும்

அதிசய உலகினில்

ஆனந்த நீராடுவோம்


ஆண் : 

தினமொரு புது வகை

கலைகளை அறிந்திடும்

ஏகாந்தம் நாம் காணுவோம்


பெண்:

பெண்மையின் சொர்க்கமே

பார்வையில் வந்ததோ

காவியம் தந்ததோ


ஆண் : 

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண் : 

பெண்மையின் சொர்க்கமே

பார்வையில் வந்ததோ


இருவர் : 

காவியம் தந்ததோ


*********************************



கவிதை அரங்கேறும் நேரம் - அந்த ஏழு நாட்கள் பாடல் வரிகள்



படம்: அந்த ஏழு நாட்கள்

இசை: எம் எஸ் விஸ்வநாதன்


*********************************


ஆண்: 

ஸஸக நிஸபநி ஸஸ 

ஸஸ ஸமக நிஸபநி  ஸ 

நிஸ ஸபப பபப பதமம

மம கமக கம கமநிப கரிஸநி


சப்த ஸ்வரதேவியுணரு

இனி என்னில் வரதானமருளு

நீ அழகில் மமனாவில் வாழு

என் கழிவில் ஒளி தீபமேற்று

சப்த ஸ்வரதேவி உணரு


கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்

இனி நாளும் கல்யாண ராகம்

இந்த நினைவு சங்கீதமாகும்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


*********************************


பெண்: 

பார்வை உன் பாதம் தேடி

வரும் பாவை என் ஆசை கோடி

பார்வை உன் பாதம் தேடி

வரும் பாவை என் ஆசை கோடி

இனி காமன் பல்லாக்கில் ஏறி

நாம் கலப்போம் உல்லாச ஊரில்


ஆண்: 

உன் அங்கம் தமிழோடு சொந்தம்

அது என்றும் திகட்டாத சந்தம்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


*********************************


ஆண்: 

கைகள் பொன்மேனி கலந்து

மலர்ப்பொய்கை கொண்டாடும் விருந்து

கைகள் பொன்மேனி கலந்து

மலர்ப்பொய்கை கொண்டாடும் விருந்து

இனி சொர்க்கம் வேறொன்று எதற்கு

எந்த சுகமும் ஈடில்லை இதற்கு


பெண்: 

மனம் கங்கை நதியான உறவை

இனி எங்கே இமை மூடும் இளமை

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


*********************************


பெண்: 

நீரில் நின்றாடும் போதும்

சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்

அது நேரில் நீ வந்த மாயம்

இந்த நிலைமை எப்போது மாறும்


ஆண்: 

என் இளமை மழை மேகமானால்

உன் இதயம் குளிர் வாடை காணும்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


பெண்: 

இனி நாளும் கல்யாண ராகம்

இந்த நினைவு சங்கீதமாகும்


இருவரும்: 

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


*********************************


Thursday, June 18, 2020

பண்பாடும் தாமரையே- நீ தொடும்போது பாடல் வரிகள்



படம்: நீ தொடும்போது
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
பண்பாடும் தாமரையே வாவா
இசையில் விளையும் தேமாங்கனி
பொன்பார்வை பூவின் பனி
பண்பாடும் தாமரையே வாவா
இசையில் விளையும் தேமாங்கனி
பொன்பார்வை பூவின் பனி

*********************************

ஆண்:
மயக்கம் கொண்டிருக்கும்
உன் இசைக்கும் உனக்கும் வணக்கம்

பெண்:
எனக்கும் பொன்மயக்கம்
உன் இதயம் இசையின் இயக்கம்

ஆண்:
கண்ணிலே போவது மின்னல் தானோ
சொர்க்கத்தை காட்டிடும் ஜன்னல்தானோ

பெண்:
ஆ ஆ ஆ
ஆனந்தமே  வா வா
பூலோகமே உன்பாட்டில் தேனாகுமே

ஆண்:
பண்பாடும் தாமரையே வாவா
இசையில் விளையும் தேமாங்கனி
பொன்பார்வை பூவின் பனி

*********************************

பெண்:
இதற்கா சம்மதித்தேன் உன் மனதை
உயர்வாய் மதித்தேன்

ஆண்:
அதற்கா நான் கொடுத்தேன்
உன் இசைக்கே பிறவி எடுத்தேன்

பெண்:
பொங்கி தான் போனது கன்னித் தேனே
அன்பினால் நான் உன்னை மன்னித்தேனே

ஆண்:
ஆ ஆ ஆ
ஆனந்தமே வா வா

பெண்:
காமன் நிலா
கொண்டாடும் காதல் விழா

ஆண்:
பண்பாடும் தாமரையே வாவா
இசையில் விளையும் தேமாங்கனி
பொன்பார்வை பூவின் பனி

பெண்:
லா லா லா ஆஆஆ ஆ
லா ல லா லா லா
லா ல லா லா ல லா
லா லா ல லா.. ல லா லா ...லா ல ல லா

*********************************

Tuesday, June 16, 2020

துளித் துளி மழையாய் - கண்ணுகொரு வண்ணக்கிளி பாடல் வரிகள்


படம்: கண்ணுகொரு வண்ணக்கிளி
இசை: இளையராஜா

*********************************

குழு :
தகு தகு தகு தகுதகுகு
தகு தகு தகு தகுதகுதகு

பெண்:
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே
காதோரம் வா தேவாரம் தா
நாளும் பண்பாடும் ராகங்கள் தா ஹா

ஆண்:
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே

குழு :
தகுதகுத தகுதகுதகு
தகு தகு தகு தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகு தகு தகு தகுதகுதகு

*********************************

பெண்:
தாவிடும் நீரோடையில்
கூடிடும் தேனோடையில்

குழு :
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு

பெண்:
தாவிடும் நீரோடையில்
கூடிடும் தேனோடையில்

ஆண்:
மனம் போலவே மழை தூவவே
தளிர் மீதிலே மலர் பூத்ததே
மனம் போலவே மழை தூவவே
தளிர் மீதிலே மலர் பூத்ததே

பெண்:
நெஞ்சில் என்னை சூடி
கொஞ்சிக் கொஞ்சிப் பாடி
சொந்தம் இன்று சுவையானது

குழு :
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு

ஆண்:
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே
காதோரம் வா தேவாரம் தா
நாளும் பண்பாடும் ராகங்கள் தா ஹா

பெண்:
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே

*********************************


குழு :
ஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆ ஆஆ ஆஆஆ ஆஆ
ஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆ

ஆண்:
மாலையும் செந்தூரமும்
சேர்ந்திடும் நாள் வந்ததே

குழு :
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு

ஆண்:
மாலையும் செந்தூரமும்
சேர்ந்திடும் நாள் வந்ததே

பெண்:
நான் தேடிய தேவாலயம்
பூந்தேரிலே தான் வந்ததே
நான் தேடிய தேவாலயம்
பூந்தேரிலே தான் வந்ததே

ஆண்:
என்னில் சரி பாதி
உன்னில் உள்ள சேதி
தேனாற்றில் நான் நீந்துவேன்

குழு :
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு

பெண்:
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே

ஆண்:
காதோரம் வா தேவாரம் தா

பெண்:
நாளும் பண்பாடும்
ராகங்கள் தா ஹா

ஆண்:
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே

குழு :
தகுதகுத தகுதகுத
தகுதகுத தகுதகுத
தகுதகுத தகுதகுத

*********************************

Monday, June 15, 2020

உன்னை நான் பார்க்கையில்- கண்ணுகொரு வண்ணக்கிளி பாடல் வரிகள்



படம்: கண்ணுகொரு வண்ணக்கிளி
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய்ப் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ரா..கம்
வார்த்தை தேடும் காதல் ரா..கம்
எங்கெங்குமே ஓ ஓ
போகின்றதே ஓ ஓ

பெண்:
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய்ப் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்

*********************************

ஆண்:
ஆவாரம்பூவுக்கு
மேலாடை ஏன் இங்கே

பெண்:
ஆடைக்கும் மேலாடை நீயுண்டு
வா இங்கே

ஆண்:
உன் கூந்தலில் பார்க்கிறேன்
தொங்கும் தோட்டங்கள்

பெண்:
பொன் மாலையில் மல்லிகைப் பூவைச்
சூட்டுங்கள்

ஆண்:
என் மார்பிலே ஆடும் பொன்னாரமே

பெண்:
செந்தூரமே உந்தன் கண்ணோரமே

ஆண்:
நீ கொஞ்சினால் அஞ்சுகம் கெஞ்சுமே

*********************************

ஆண்:
மை வைத்த கண்ணோரம்
பொய் வைக்கக் கூடாது

பெண்:
மாதங்கமோ தங்கம்
கை வைக்க கூடாது

ஆண்:
நீ பார்த்திடும் பார்வையில்
முள்ளும் பூப்பூக்கும்

பெண்:
நீ பேசிடும் சொல்லிலே
கல்லும் தேனூறும்

ஆண்:
பிருந்தாவனம் எங்கே போகின்றது

பெண்:
என் கண்ணனைத் தேடிப் போகின்றது
நீ கண்ணனா என்னுயிர் கள்வனா

ஆண்:
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய்ப் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்

பெண்:
எங்கெங்குமே  ஓ ஓ
போகின்றதே ஓ ஓ
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய்ப் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
லாலலா லாலா லாலலா லாலா

*********************************

மா தவம் ஏன் மாதவனே- ராஜரிஷி பாடல் வரிகள்



படம்: ராஜரிஷி
இசை: இளையராஜா

*********************************

பெண்:
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ

மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய்
மாதுறவை ஏன் மறந்தாய்
தவமும் தனமும் சுகமும் என் வசம்

மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே

*********************************

பெண்:
செவ்விதழோ இது தேன் கனிக் கோவை
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆஆஆஆஆ ஆஆஆஆ

செவ்விதழோ இது தேன் கனிக் கோவை
தேவா உன் பானமுதம்
தேவா உன் பானமுதம்
சேயிழை நூலிடை மின்னல் தோரணம்
காமனின் கோயிலில் நானே கோபுரம்
தேனூறும் ஆகாய கங்கை
சலசல சலவென வருகிறதே
வழிகிறதே ஆஆ ஆ  ஆஆ ஆ
மடியினில் நீராடு

மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே

*********************************

பெண்:
தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி
ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆ ஆஆ

தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி
நான் அங்கே தங்கையினால்
ம்ஹும் ஹும் ஹும் ம்ஹும் ஹும்
ஞானியின் ஐம்புலன் என்னில் சங்கமம்
தியாகமும் யோகமும் என்ன நாடகம்

ஆண்:
ஆ ஆஆஆஆ
ஆ ஆஆஆஆ ஆ


பெண்:
பிரம்மாவின் கை வண்ணம் நானே
இளமையில் ஒருமையில் தனிமையிலே
தவிக்கிறதே ஒரு முறை பாராயோ

மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே

அந்தி மா கலையில் இந்த மேகலைகள்
அசையும் அசைவிலே இசைவிலே
இடை ஒடிய ஒடிய
நடைகள் பயிலும் மயில் இது தானே

ஆண்:
தத்த ஜம்த தக தகிட ஜம்த தக
தகதீம்த தகதீம்த தக தாம் தக
தகிட திகிட தோம்கிட நம்கிட தகதிமி
தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட தாம்

பெண்:
தீயிலே மரகதம் இதழில் சோமபானம்

ஆண்:
தகிட தாம் தகிட தாம் தகிட தாம்
தத் தரிகிட தாம் தரிகிட தாம்
கிடதக தரிகிட தாம்

பெண்: நித்தம் பரிமாற வரவா தலைவா

ஆண்: ரிம்ம ரிமபாப்ப மபநிநி பமபா

பெண்: ரிம்ம ரிமபாப்ப மபநிநி பமபா

ஆண்: தாம்த தக தாம்த தக தீம்தக தா

பெண்:
இளைய தேகம் இரவு நேரம்
விரக தாபம் எரியுதே

ஆண்:
தகிட ஜம்த திகிட ஜம்த
தொம்கிட ஜம்த நம்கிட ஜம்

பெண்:
முகிலிலான குழலும்
உந்தன் உறவு தேடி அலையுதே

ஆண்:
தகிட ஜம்த திகிட ஜம்த
தொம்கிடதக ஜம்த நம்கிடதக ஜம்

பெண்:
தவம் அது கலைவது தெரிகிறது
அருள் கொடு மா தேவா

ஆண்: அருகினில் மாதே வா

பெண்:
மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய்
மாதுறவை ஏன் மறந்தாய்
தவமும் தனமும் சுகமும் என் வசம்

மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே

*********************************

Tuesday, June 9, 2020

அழகிய கலை நிலவே (கருணைக் கடலே) - ராஜரிஷி பாடல் வரிகள்


படம்: ராஜரிஷி
இசை: இளையராஜா

*********************************

ஆண் குழு: கருணைக் கடலே
பெண் குழு: வாழ்க வாழ்க
ஆண் குழு: காக்கும் நிழலே
பெண் குழு: வாழ்க வாழ்க
ஆண் குழு: அறத்தின் வடிவே
பெண் குழு: வாழ்க வாழ்க
ஆண் குழு: அரசர்க்கரசே
பெண் குழு: வாழ்க வாழ்க
ஆண் குழு: வாழ்க வாழ்க
பெண் குழு: வாழ்க வாழ்க
குழு: வாழ்க வாழ்க

பெண்:
அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே
இமய மலை போல் புகழில் உயர்ந்தாய்
உனது கொடையால் மனதில் நிறைந்தாய்
நலம் பெறவே
ஆஆஆஆ ஆஆஆஆ

அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே

பெண் குழு:
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க

*********************************

பெண்:
முரசு கொட்டி வருகிற பகைவரின்
செருக்கினை தகர்த்திடும் புஜபலம் உடையவனே
பனி மலையில் உறைகிற பிறை மதி
சிவனது திருவடி தினம் தினம் தொழுபவனே
ஏழைகளின் இதயம் குளிரவே
ஆளுகின்ற தருமத்தின் துணைவா
காசினிக்கு ஒளியை கொடுக்கவே
கண் விழித்து எழுந்திடும் தலைவா
ராஜதிலகா
ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

பெண் குழு:
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க

*********************************

பெண்:
சதுர் மறைகள் புகழ்ந்திடும் வகையினில்
பெரியவர் வழியினில் கடமைகள் புரிவபனே
தினமும் உன்னை திருமகள் கலைமகள்
இருவரும் வலம் வரும் பெருமைகள் உடையவனே
காவியங்கள் புகழும் முதல்வனே
கண்ணியங்கள் தழைத்திட வருக
ஞானியர்கள் வணங்கும் அறிஞனே
புண்ணியங்கள் பொலிந்திட வருக
வீர வடிவே

நிஸஸ நீப பநிநி பாம மப கமப
கமப கம பநி பஸநிப கமப கமப ஸகமப
தரிகிட தரிகிட தரிகிட தாம்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தரிகிடத தீம்த தரிகிடத தீம்த
தரிகிடத தீம்த தரிகிடத தீம்த

அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே
இமய மலை போல் புகழில் உயர்ந்தாய்
உனது கொடையால் மனதில் நிறைந்தாய்
நலம் பெறவே
ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ

அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே

பெண் குழு:
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க

*********************************

Monday, June 8, 2020

ஆடையில் ஆடும் பொன் மணிகள் - ராஜரிஷி பாடல் வரிகள்



படம்: ராஜரிஷி
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

பெண்:
ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
கை வளை ஆட மை விழி ஆட
காதல் நெஞ்சம் ஆடுமே
மஞ்சம் தேடுமே

ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்

*********************************

பெண்:
குக்கு குகு கூ கூ கூ என்று குயில் கூவாதோ
சொர்க சுக லோகத்தில் ராகம் வருமே
தத்த தத தா தா தா நித்தம் உனை நீ தா தா
தத்தை இவள் பாதங்கள் தாளம் இடுமே

உந்தன் அருகே வந்து தழுவும் இன்ப நிலையம்
எந்தன் இடை தான் சொர்கபுரியே என்று புரியும்
பட்டுத் துகில் இது கலைந்தாடி வர
ஆசை சிறகினை விரிக்கின்றதே
தொட்டுத் தழுவிடும் சுகம் கோடி பெற
தோகை இள மனம் துடிக்கின்றதே
இவள் ஒரு சிறு கிளி ஒரு கொடி இரு கனி
குலுங்கிட நடமிடும் அபினய அழகு

ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
கை வளை ஆட மை விழி ஆட
காதல் நெஞ்சம் ஆடுமே மஞ்சம் தேடுமே

ஆடையில் ஆடும் பொன் மணிகள்

*********************************

ஆண்:
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

பெண்:
என் உடல் இது பொன் நிற அரவிந்தம்
ஏங்கிடும் இடை தாங்கிட வரலாம்  (ஆண் : ஓம் நமசிவாய)

எங்கிலும் இதில் சிந்திடும் மகரந்தம்
நித்தமும் அதில் முத்திரை இடலாம் (ஆண் : ஓம் நமசிவாய)

அஞ்சன நிறம் கொஞ்சிடும் இரு கண்கள்
ஆயிரம் கலை கூறிட வருமே (ஆண் : ஓம் நமசிவாய)

அந்தியில் வரும் இந்திர தனுசின்று
பார்த்தவர் விழி பூத்திட வருமே (ஆண் : ஓம் நமசிவாய)

மறை பயிலும் தவ முனியே
கலை பயில்வோம் வா
மது ரசமா இதழ் ரசமா நவ ரசமா வா

மாமுனி என வாழுவதா ஞானம் (ஆண் : ஓம் நமசிவாய)
காமனின் கலை தேறுவதே ஞானம் (ஆண் : ஓம் நமசிவாய)
நான்மறைகளை ஓதுவதா இன்பம் (ஆண் : ஓம் நமசிவாய)
நான்மறைவினில் கூடுவதே இன்பம் (ஆண் : ஓம் நமசிவாய)

மங்கையும் ஒரு கங்கையும் தலை மீதினில் (overlap ஆண் : ஓம் நமசிவாய)
கொண்டவன் சுகம் கண்டவன் சிவனே
முதலிது முடிவிது இதிலெது வருவது வா
இகம் இது பரம் இது அது தரும் சுகம் இது வா
தவம் இது வரம் இது அறிவிது அருளிது வா வா

*********************************

மான் கண்டேன் மான் கண்டேன் - ராஜரிஷி பாடல் வரிகள்



படம்: ராஜரிஷி
இசை: இளையராஜா

*********************************

குழு:
ஆஆஆ
ஆஆஆஆஆ ஆ
ஆஆஆ
ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

ஆண்:
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

பெண் :
நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத் தான் கண்டேன்
நான் என்னை காணேன்

ஆண்:
புள்ளி மானா மானிட மானே

பெண் :
பள்ளி மானாய் வந்தவள் நானே

ஆண்:
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

*********************************

ஆண்:
ஆடை கட்டும் ரோஜாவே
கண்ணில் அம்பு வீசாதே
கூந்தல் என்ன நாக சர்ப்பமோ

பெண் :
என்னை ஆளும் ராஜாவே
உன்னில் என்னை மூடாதே
அங்கம் உந்தன் தங்க வாகனம்

ஆண்:
கூந்தலில் நீ பாய் விரி

பெண் :
கூடலில் நீ ஆதரி

ஆண்:
காய்ச்சாத பால் உண்ணும் பெண் அன்னம்
காமத்து பால் உண்ண ஏங்கும்

பெண் :
கையோடு நீ எந்தன் மெய் சேர்க்க
காற்றுக்கும் உள்மூச்சு வாங்கும்

ஆண்:
ஆஆஆஆஆஆஆஆ.

பெண் :
ஆஆஆஆஆஆ

ஆண்:
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

பெண் :
நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத் தான் கண்டேன்
நான் என்னை காணேன்

ஆண்:
புள்ளி மானா மானிட மானே

பெண் :
பள்ளி மானாய் வந்தவள் நானே

ஆண்:
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
ஆ ஆஆஆஆஆ
ஆ ஆஆஆஆ
ஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ
ஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஆ

*********************************

குழு:
லா லீ லா லீ லா
லா லீ லா லீ லா
லா லீ லா லீ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

ஆண்:
தேனிலூரும் தீவுக்குள்
நாகலிங்க பூவுக்குள்
மோக வண்டு பாட வந்தது

பெண் :
தான தந்த சந்தத்தில்
காதல் தந்த சொந்தத்தில்
மோகமென்னும் ராகம் வந்தது

ஆண்:
பூமியில் ஓர் வானவில்

பெண் :
ஆடிடும் உன் தோள்களில்

ஆண்:
வானுக்கும் பூமிக்கும் ஓர் பாதை
பெண்ணென்று நான் இன்று பார்த்தேன்

பெண் :
கந்தர்வலோகத்தை நான் காணும்
நாள் இந்த நாள் என்று பார்த்தேன்

ஆண்:
ஆஆஆஆஆஆஆ

பெண் :
ஆஆஆஆஆஆ.

ஆண்:
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

பெண் :
நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத் தான் கண்டேன்
நான் என்னை காணேன்

ஆண்:
புள்ளி மானா மானிட மானே

பெண் :
பள்ளி மானாய் வந்தவள் நானே

இருவரும்:
லாலாலா லாலாலா
லாலாலா லாலாலா
லாலாலா லாலா

*********************************

Sunday, June 7, 2020

கனவு ஒன்று தோன்றுதே‌ - ஒரு ஓடை நதியாகிறது பாடல் வரிகள்



படம்: ஒரு ஓடை நதியாகிறது
இசை: இளையராஜா

*********************************

கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல

விழி ஓரங்கள்‌ மிக சூடாக
எதிர்பாராமல்‌ சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல

*************************

பூமகள்‌ மேலாடை
நெளியுமோ
நகர்ந்திடுமோ நழுவிடுமோ
ஓ ஓஓஓ ஓஓ
காமனே வாராதே
காமனே வாராதே
மனமே பகையா மலரும்‌ சுமையா
ஆஆஆஆஆ
உறக்கம்‌ கலைக்க உறுதி குலைக்க

கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல

விழி ஓரங்கள்‌ மிக சூடாக
எதிர்பாராமல்‌ சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல

************************************

பார்வைகள்‌ பார்த்தானே
ஏஏஏஏ ஏஏ
இருதயம்‌...
இடம்‌ பெயர்ந்து கிறங்கஇடுதே
கேள்விகள்‌ கேட்டானே
கேள்விகள்‌ கேட்டானே
புனிதம்‌ இனிமேல்‌ புதிதாய்‌ கெடுமோ ஓஓஓஓ
சிறையை உடைக்க பறவை நினைக்க

கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல

விழி ஓரங்கள்‌ மிக சூடாக
எதிர்பாராமல்‌ சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
லலல லா ல லா ல லா
லா லா லா லா லா லா
லலல லா ல லா ல லா
லா லா லா லா லா லா

************************************

Saturday, June 6, 2020

ஒரு காத்துக்‌ கருப்பக்‌ கண்டா - வெற்றிப்படிகள் பாடல் வரிகள்



படம்: வெற்றிப்படிகள்
இசை: இளையராஜா

*********************************

பெண்:
ஒரு காத்துக்‌ கருப்பக்‌ கண்டா
பயமும்‌ உனக்கிருக்குது தரனன்னா
உடல்‌ வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம்‌ கறுக்குது தரனன்னா

அட போயா பொட்ட எதுக்கு பேன்டு சட்ட
அட வீணா ஏன்யா ஆணா பொறந்துட்ட ஹோய்

ஒரு காத்துக்‌ கருப்பக்‌ கண்டா
பயமும்‌ உனக்கிருக்குது தரனன்னா
உடல்‌ வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம்‌ கறுக்குது தரனன்னா

*********************************

பெண்:
அட எங்க வீட்டுப்‌ பிள்ளையிலே
பாட்டெடுப்பார்‌ சாட்டையிலே
எம்‌ ஜி ஆரப்‌பாத்தியா
கட்டபொம்மன்‌ வேஷத்திலே
கர்ஜிப்பாரு சிங்கம்போலே
நடிகர்‌ திலகம்‌ பாத்தியா

அட பாயும்‌ புலியாக வந்து
பாஞ்சு பாஞ்சு சண்ட போடும்‌
ரஜினிகாந்தப்‌ பாத்தியா
வில்லன்கள பெண்டெடுக்கும்
நாயகனா வந்து நிக்கும்‌
கமல ஹாஸன்‌ பாத்தியா

பொங்கி எழு நீதான்‌ ஹீரோக்களப்‌ போல
இல்லா விட்ட நீதான்‌ கட்டிக்கயா சேல
அதுக்கும்‌ இதுக்கும்‌ தெனம்‌
அச்சப்பட்டு அச்சப்பட்டு
எதுக்கு பொழப்பு சொல்லு
வெக்கங்கெட்டு வெக்கங்கெட்டு ஹே ஹே

ஒரு காத்துக்‌ கருப்பக்‌ கண்டா
பயமும்‌ உனக்கிருக்குது தரனன்னா
உடல்‌ வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம்‌ கறுக்குது தரனன்னா

அட போயா பொட்ட எதுக்கு பேன்டு சட்ட
அட வீணா ஏன்யா ஆணா பொறந்துட்ட ஹோய்

ஒரு காத்துக்‌ கருப்பக்‌ கண்டா
பயமும்‌ உனக்கிருக்குது தரனன்னா
உடல்‌ வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம்‌ கறுக்குது தரனன்னா

*********************************

ஆண்:
ஆதி பத்துப்‌ பேரை ஓத்தையிலே
சுத்துகிற வித்தை எல்லாம்‌
என்னால்‌ காட்டக்‌ கூடுமா
பல்லொடஞ்சு சில்லொடஞ்சு
கை ஒடஞ்சு  கால்‌ ஒடஞ்சு
முன்னால்‌ நிற்க வேணுமா

ஆதி அச்சப்படும் சங்கதிக்கு
அச்சப்‌ பட வேணுமுன்னு
சொன்னான்‌ அந்த வள்ளுவன்‌
என்னப்‌ போல வள்ளுவனும்‌
வம்பு தும்ப வெச்சுக்காம
மண்ணில்‌ வாழ்ந்த நல்லவன்‌

இந்த உயிர்‌ போனா இன்னும்‌ ஒண்ணு ஏது (பெண் : ஹா ஹா )
ஆசை இதன்‌ மேலே வெக்காதவன்‌ யாரு (பெண்: ம்ம்)
நடந்தக்‌ கொலையக்‌ கண்ணில்‌
கண்டு புட்டேன்‌ கண்டு பட்டேன்‌
வரட்டு இழுப்பில்‌ வந்து
சிக்கிக்கிட்டேன் சிக்கிக்கிட்டேன் ஆஹா

ஒரு காத்துக்‌ கருப்பக்‌ கண்டா
பயமும்‌ எனக்கிருக்குது தரனன்னா
உடல்‌ வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம்‌ கறுக்குது தரனன்னா


அடி வீரம்‌ வீரம்‌ எனக்கு ரொம்ப ரொம்ப தூரம்‌
அடி ஜான்சி ராணி நீ தான்‌ உதவணும்‌
ஹோ ஹோ ஹோ‌ ஹோய்‌

ஒரு காத்துக்‌ கருப்பக்‌ கண்டா
பயமும்‌ எனக்கிருக்குது தரனன்னா
உடல்‌ வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம்‌ கறுக்குது தரனன்னா

*********************************

Wednesday, June 3, 2020

என்‌ தேகம்‌ அமுதம்‌ - ஒரு ஓடை நதியாகிறது பாடல் வரிகள்



படம்: ஒரு ஓடை நதியாகிறது
இசை: இளையராஜா

*********************************

என்‌ தேகம்‌ அமுதம்‌
என்‌ தேகம்‌ அமுதம்‌
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்‌
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்‌

என்‌ தேகம்‌ அமுதம்‌

*********************************

முல்லை மலர்‌ வாசம்‌ வீசவில்லையா
பெண்‌ மனசின்‌ ஆசை பேசவில்லையா
பூத்திருப்பவள்‌ தாரமல்லவா
காத்திருப்பதே பாரமல்லவா

துள்ளி எழும்‌ பிள்ளை பிஞ்சு
சத்தம்‌ இன்றி முத்தம் கொஞ்சு
விளக்கை அணைத்து விடு

என்‌ தேகம்‌ அமுதம்‌
மார்கழி மார்கழி மார்கழி
ராத்திரி பிரிவது பாவம்‌
என்‌ தேகம்‌ அமுதம்‌
ஆ ஆ ஆ

*********************************

வாவாவா வாவாவா ஆ
ஆஹாஹா ஆஹா ஹா ஆ
ஆ ஹா ஹா

வீணைகளின்‌ மெளனம்‌ ஓட வேண்டுமே
ஆளுக்கொரு ராகம்‌ பாட வேண்டுமே
கூந்தல்‌ இருக்கு போர்வை எதுக்கு
காலை வரைக்கும்‌ காமன்‌ வழக்கு
நெஞ்சம்‌ எங்கும்‌ மின்னல்‌ அலை
பஞ்சமில்லை பன்னீர்‌ மழை
எனக்கு பொறுக்கவில்லை

என்‌ தேகம்‌ அமுதம்‌
மார்கழி மார்கழி மார்கழி
ராத்திரி பிரிவது பாவம்‌
என்‌ தேகம்‌ அமுதம்‌
ம்‌ம்‌ ம்‌ம்‌ ஆ ஆ




Tuesday, June 2, 2020

ஒரு மூடன் கதை சொன்னால்- நெஞ்சில் ஆடும் பூவொன்று பாடல் வரிகள்



படம் : நெஞ்சில் ஆடும் பூவொன்று
இசை : இளையராஜா

*********************************

ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்
இது காதல் தெய்வீகம்
அட போடா
ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்

*********************************

கல்லரையிலே இருக்கின்ற பல சமாதிகள்
காதலிலே தோல்வியுற்றவைதான் போலிருக்கிறது

பெண்ணைப் படைக்காதே
பிரம்மனே
பாவம் ஆண்களே
பரிதாபம் நாங்களே

பெண்ணைப் படைக்காதே
பிரம்மனே
பாவம் ஆண்களே
பரிதாபம் நாங்களே

ஆலகாலமா விழியா
சொல்லடா
காதல் காவியம் வேஷமே ஓ

ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்

*********************************

பிரீத்தி உன்னைநினைக்க விரும்புகிறேன்
நீ விடவில்லை
உன்னை மறக்க விரும்புகிறேன்
அதுவும் முடியவில்லை

கல்லை உடைத்தாலும்
நீர் வரும்
பாலைவனங்களோ
அழகான பெண்களே

கல்லை உடைத்தாலும்
நீர் வரும்
பாலைவனங்களோ
அழகான பெண்களே

எந்த மடையனோ சொன்னான்
சொர்க்கமாம்
பெண்கள் உலகமே நரகமே ஓ

ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்
இது காதல் தெய்வீகம்
அட போடா
ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்

*********************************

மருத மஞ்சக் கெழங்கு - நெஞ்சில் ஆடும் பூவொன்று பாடல் வரிகள்



படம்: நெஞ்சில் ஆடும் பூவொன்று
இசை: இளையராஜா

*********************************

பெண்:
தானா னானா னானா னானா னா
தானா னானா னானா னா
னானானா னானானா னானானா ஹா

பெண்:
மருத மஞ்சக் கெழங்கு
எம் மேல தான் வாசம்
உம் மேல தான் நேசம்
மச்சான் உன்ன நெஞ்சோட தான்
வெச்சாள் இந்த பச்சக் கிளி

மருத மஞ்சக் கெழங்கு
எம் மேல தான் வாசம்
உம் மேல தான் நேசம்
மச்சான் உன்ன நெஞ்சோட தான்
வெச்சாள் இந்த பச்சக் கிளி
மருத மஞ்சக் கெழங்கு

ஆண்:
ஏஏ ஏஏஏஏ ஏஏஏஏ
தானானா னானானா னானா னானா
தானானா னானா தானா னானா னானா

*********************************

ஆண்:
கிளிக்கொரு இணை உண்டு சத்தம் கொடுக்க
அதுக்கொரு இதழ் உண்டு முத்தம் கொடுக்க

கிளிக்கொரு இணை உண்டு சத்தம் கொடுக்க
அதுக்கொரு இதழ் உண்டு முத்தம் கொடுக்க
மூடாதே முந்தானைய போட்டு ஹோய்
முத்தாடும் வித்தைகள காட்டு

பெண்:
முடியாதையா இப்ப படியாதையா
ஒரு பூ மால நீ போட காலம் நேரம் பாரு

ஆண்:
மருத மஞ்சக் கெழங்கு
உம் மேல தான் வாசம்
எம் மேல தான் நேசம்
மச்சான் என்ன நெஞ்சோட தான்
வெச்சாள் இந்த பச்சக் கிளி
மருத மஞ்சக் கெழங்கு

*********************************

பெண்:
தழுவுற ஆசை தான் முன்னால் நடக்க
தடுக்குற நாணம் தான் பின்னால் இழுக்க

தழுவுற ஆசை தான் முன்னால் நடக்க
தடுக்குற நாணம் தான் பின்னால் இழுக்க
தானாக தள்ளாடுது தேகம்
தாளத்த விட்டோடுமா ராகம்

ஆண்:
விலகாததே விட்டுப் பிரியாததே
இது நேற்றல்ல இன்றல்ல நாளும் வாழும் சொந்தம்

பெண்:
மருத மஞ்சக் கெழங்கு
எம் மேல தான் வாசம்
உம் மேல தான் நேசம்
மச்சான் உன்ன நெஞ்சோட தான்
வெச்சாள் இந்த பச்சக் கிளி

ஆண்:
மருத மஞ்சக் கெழங்கு
உம் மேல தான் வாசம்
எம் மேல தான் நேசம்
மச்சான் என்ன நெஞ்சோட தான்
வெச்சாள் இந்த பச்சக் கிளி

இருவர்: மருத மஞ்சக் கெழங்கு

Saturday, May 30, 2020

உன்னை காணும் நேரம் - உன்னை நான் சந்தித்தேன் பாடல் வரிகள்



படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா

*********************************

பெண் :
ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆ ஆஆஆ ஆஆ
ஆ ஆஆஆ ஆஆ


ஆண் :
உன்னை காணும் நேரம்
நெஞ்சம்
ராகம் பல நூறு
பாடும் தினம் தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை
உன்னை காணும் நேரம்
நெஞ்சம்

*********************************

பெண் :
கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி

ஆண் :
கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் என்ன நாணம் மீதி

பெண் :
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்

ஆண் :
தொட வேண்டி கைகள் ஏங்கும்
பட வேண்டும் பார்வை எங்கும்

பெண் :
இந்த பார்வை ஒன்று போதும்
போதும் இடைவேளை
மீதி இனி நாளை

ஆண் :
மாலை வேளை வீணாய் போகும்
இந்த பார்வை ஒன்று போதும்

*********************************

ஆண் :
கண்ணால் உன்னை கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்

பெண் :
மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்

ஆண் :
மடிமீது சாயும் சாபம்
தர வேண்டும் ஆயுள் காலம்
மடிமீது சாயும் சாபம்
தர வேண்டும் ஆயுள் காலம்

பெண் :
பலகோடி காலம் வாழ
பனி தூவி வானம் வாழ்த்தும்

ஆண் :
உன்னை காணும் நேரம் நெஞ்சம்

பெண் : ராகம் பல நூறு

ஆண் :  பாடும் தினம் தோறும்

பெண் : காலம் நேரம் ஏதும் இல்லை

ஆண் : உன்னை காணும் நேரம் நெஞ்சம்

*********************************

Thursday, May 28, 2020

தாலாட்டு மாறிப் போனதே - உன்னை நான் சந்தித்தேன் பாடல் வரிகள்


படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா

*********************************

தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண் மூடு
என் சொந்தம் நீ

தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே

*********************************

உன் சோகம் என் ராகம்
ஏனென்று கேட்கிறாய்
பெண் மானே செந்தேனே
யாரென்று பார்க்கிறாய்

உன் அன்னை நான்தானே
என் பிள்ளை நீதானே
இது போதுமே

தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண் மூடு
என் சொந்தம் நீ

தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே

*********************************

கண்ணீரில் சந்தோஷம்
நான் இன்று காண்கிறேன்
தாயாக இல்லாமல்
தாலாட்டுப் பாடினேன்

என் வாழ்வே உன்னோடு
என் தோளில் கண் மூடு
சுகமாய் இரு

தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண் மூடு
என் சொந்தம் நீ

தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
ஆராரோ ஆரிராரிரோ
ஆராரோ ஆரிராரிரோ

*********************************

Wednesday, May 27, 2020

தலையைக் குனியும் தாமரையே - ஒரு ஓடை நதியாகிறது பாடல் வரிகள்



படம்: ஒரு ஓடை நதியாகிறது
இசை: இளையராஜா

*********************************

ஆண் :
தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே

என்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே

*********************************

ஆண் :  நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்

பெண் :
ஆஆஆ ஆ ஆஆ ஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஆண் : நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்

பெண் :
பாற்கடலின் ஓரம்
பந்தி வைக்கும் நேரம்
பாற்கடலின் ஓரம்
பந்தி வைக்கும் நேரம்

ஆண் :
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து

பெண் :
தலையைக் குனியும் தாமரை நான்
உன்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து

ஆண் : தலையைக் குனியும் தாமரையே

*********************************

பெண் :
காத்திருந்தேன் அன்பே
இனிக்காமனின் வீதியில் தேர் வருமோ

ஆண் :
பூமகள் கன்னங்கள்
இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ

பெண் :
ஆயிரம் நாணங்கள் இந்த
ஊமையின் வீணையில் இசை வருமா

ஆண் :
நீயொரு பொன்வீணை அதில்
நுனிவிரல் தொடுகையில் பலசுரமா

பெண் : பூவிர கந்தது முதல்முறையா

ஆண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
வேதனை வேலையில் சோதனையா

பெண் : முதல் முறையா

ஆண் : இது சரியா

பெண் :
சரி சரி
பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து

ஆண் :
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

பெண் : பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து

ஆண் :
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி

பெண் :
இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்

ஆண் :
தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே

பெண் :
உன்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து

ஆண் :
தலையைக் குனியும் தாமரையே

*********************************

Tuesday, May 26, 2020

தேவன் தந்த வீணை - உன்னை நான் சந்தித்தேன் பாடல் வரிகள்



படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா

*********************************

பெண் :
ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆ

தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகம் இன்றி போகுமோ

தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

*********************************

பெண் :
மேகம் பாடும்
மேகம்
பாடும்

ஆண் :
மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடி பார்க்கிறேன்

பெண் :
மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடி பார்க்கிறேன்

ஆண் :
மோகமோ ஓஓஓஓ ஓஓஓஓ ஓ
மோகமே சோகமோ
இனியும் நெஞ்சம் தூங்குமோ

பெண் :
நாளும் நாளும் தேடுவேன்

தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகம் இன்றி போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

*********************************

பெண் :
வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே
வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே

ஆண் :
வண்ணங்கள்
நான் எண்ணும் எண்ணங்கள்
எங்கிருந்தோ இங்கு வந்தேன்
இசையினிலே எனை மறந்தேன்
இறைவன் சபையில் கலைஞன் நான்

பெண் :  தேவன் தந்த வீணை

ஆண் : அதில் தேவி செய்த கானம்

பெண் :
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகம் இன்றி போகுமோ

இருவரும்:
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

*********************************

Monday, May 25, 2020

ஒரு பூவன குயில் மாமரத்துல - மரகத வீணை பாடல் வரிகள்



படம்: மரகத வீணை
இசை: இளையராஜா

*********************************

பெண்:
ஒரு பூவன குயில் மாமரத்துல கூடு கட்டினது
அது கூவுறதுல குரல் இனிக்கிது மனம் மயங்கினது
அது ஏன் இனிக்கிது மனம் மயங்குது
என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது
தேன் குளத்துல தான் குதிச்சது
ஆனந்தத்துல தான் குளிச்சது
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா

குழு:
ஆஹா அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா

பெண்:
ஒரு பூவன குயில் மாமரத்துல கூடு கட்டினது
அது கூவுறதுல குரல் இனிக்கிது மனம் மயங்கினது

***************************

பெண்:
ஆத்தோரம் ஒரு கிளி காத்தாடும் நேரம்
கூட்டாளி ஒரு கிளி கூத்தாடி போகும்
ஆத்தோரம் ஒரு கிளி காத்தாடும் நேரம்
கூட்டாளி ஒரு கிளி கூத்தாடி போகும்

ஏதேதோ மெல்ல மெல்ல
காதோட சொல்ல சொல்ல
ஜோரா சிரிச்சிக்கிரிச்சாம்

என்னென்ன சீதனம் கேட்குதே
என்றது பெண் கிளியே
ஆசை வந்துருச்சே நெஞ்சுக்குள்ள
அன்பு வந்துருச்சே
இன்னும் என்ன தங்க நகைகளும்
வைர நகைகளும் தேவையில்லையடி

குழு:
அடி அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
ஆஹா என்னடி என்னடி என்னடி கண்ணம்மா

பெண்:
ஒரு பூவன குயில் மாமரத்துல கூடு கட்டினது

குழு:
அது கூவுறதுல குரல் இனிக்கிது மனம் மயங்கினது

பெண்:
அது ஏன் இனிக்கிது மனம் மயங்குது
என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது

குழு:
தேன் குளத்துல தான் குதிச்சது
ஆனந்தத்துல தான் குளிச்சது

பெண்:
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா

குழு:
ஆஹா என்னடி என்னடி என்னடி கண்ணம்மா

***************************************

பெண்:
பால் போல அருவியில் யாரோட சேலை
நூலின்றி யார் வந்து நெய்தார் இங்கே
மேங்கங்கள் அணிந்திடும் ஆடைகள் மேலே
யாரந்த கிழிசலை தைத்தார் அங்கே

கொம்பாதி கொம்பர்களும் கொம்பேறி மூக்கர்களும்
வந்தே கைக்கட்டி நிக்கோணும்
சந்தனம் பூசிய சூரியன் வந்தது பாருங்களேன்
வானம் எட்டுதடி கையிரண்டும் மேளம் கொட்டுதடி

இன்னும் என்ன ஆசைப்பட்டது
யாரும் கிட்டுது கூவு ஏன் குயிலே

குழு:
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
ஆஹா என்னடி என்னடி என்னடி கண்ணம்மா

பெண்:
ஒரு பூவன குயில் மாமரத்துல கூடு கட்டினது

குழு:
அது கூவுறதுல குரல் இனிக்கிது மனம் மயங்கினது

பெண்:
அது ஏன் இனிக்கிது மனம் மயங்குது
என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது

குழு:
தேன் குளத்துல தான் குதிச்சது
ஆனந்தத்துல தான் குளிச்சது

பெண்:
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா

குழு:
ஆஹா என்னடி என்னடி என்னடி கண்ணம்மா

பெண் & குழு:
ஒரு பூவன குயில் மாமரத்துல கூடு கட்டினது
அது கூவுறதுல குரல் இனிக்கிது மனம் மயங்கினது

***************************************

Sunday, May 24, 2020

மரகத வீணை - மரகத வீணை பாடல் வரிகள்



படம்: மரகத வீணை
இசை: இளையராஜா

*********************************

ஆண் :
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்
எனக்குள் வீசாதோ
ஓஓஓஓ ஓஓஓ

மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ

*********************************

பெண் :
வீசும் காற்றே நீ மெல்ல வீசு
மலரின் வேகம் தாங்காது

ஆண் :
பேசும் கண்ணே நீ மெல்ல பேசு
ஊரார் கேட்டால் ஆகாது

பெண் :
இதயம் எங்கும் பன்னீரின் ஓடை
இங்கும் அங்கும் பாய்கின்றது

ஆண் :
பருவ வயலில் ஒரு அமுத பாசனம்
இரவு விடிய ஒரு வருஷமாகணும்
இருவர் கூடலாம் ஒருவராகலாம்
மதன வேதம் தினமும் ஓதலாம்

பெண் :
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ

*********************************

ஆண் :
கூந்தல் வந்து பாய் போடும் நேரம்
கோடைத் தென்றல் பூத்தூவும்

பெண் :
ஊஞ்சல் நெஞ்சில் நீ போடும் நேரம்
உள்ளம் எங்கே கண் மூடும்

ஆண் :
கனலும் கள்ளும் ஒன்றானபோது
கண்ணே பெண்மை உண்டானது

பெண் :
எனது விழியில் ஒரு கனவு பூத்தது
எனது இதயம் உன்னை எழுதிப் பார்த்தது
புதிய வானமும் புதிய பூமியும்
இணையும் காலம் எதிரில் வந்தது

ஆண் :
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ

பெண் :
இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்
எனக்குள் வீசாதோ
ஓஓஓஓ ஓஓஓ

இருவரும்:
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ

*********************************

கண்ணா வா கவிதை - மரகத வீணை பாடல் வரிகள்



படம்: மரகத வீணை
இசை: இளையராஜா

*********************************


கண்ணா வா கவிதை சொல்வேன் வா
தலைவா
அன்பே வா அழுது நின்றேன் வா
துணைவா
என்ன சோதனை ஜீவ வேதனை
கான வேளை காணவில்லை நாதனை
கண்ணா வா கவிதை சொல்வேன் வா
தலைவா

************************************

சுதி சேரும் முன்பே
இசை பாட வந்தேன்
விதி சேரும் முன்பே
விளையாட வந்தேன்

புறாவை போல வாழ்ந்தவள்
நிலாவை போல தேய்கிறேன்
வராத மேடை வந்தவள்
அனாதை போல பாடினேன்

இளைய மேகம் திரும்புமா
எனது மண்ணில் பொழியுமா
உறவுப்பூக்கள் அரும்புமா

கண்ணா வா கவிதை சொல்வேன் வா
தலைவா
அன்பே வா அழுது நின்றேன் வா
துணைவா

**************************************

உரு தந்தவனை இவள் பாடுகின்றாள்
வரம் தந்தவனை இவள் தேடுகின்றாள்

வராத கூட்டம் வந்தது
சங்கீதம் செய்த வேளையோ
இந்நேரம் உன்னை தேடினேன்
என்னோடு என்ன லீலையோ

எந்தன் கண்ணில் நீர் வரும்
என்று உந்தன் பேர் வரும்
இணைய வேண்டும் இருவரும்

கண்ணா வா கவிதை சொல்வேன் வா
தலைவா
என்ன சோதனை ஜீவ வேதனை
கான வேளை காணவில்லை நாதனை
கண்ணா வா கவிதை சொல்வேன் வா
தலைவா

***********************************

Saturday, May 23, 2020

பூவென்றும் பொன்னே என்றும் - துருவ நட்சத்திரம் பாடல் வரிகள்



படம்: துருவ நட்சத்திரம்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
பூந்தேகம் நான் ஏந்தும் பொன்னோடம் தான்
உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம் தான்

பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

*********************************

பெண்:
தேகத்திலே தந்த மோகத்திலே
வந்த வேகத்தில் விளைந்ததென்ன

ஆண்:
நேரத்திலே வந்த பாரத்திலே
இதழ் ஈரத்தில் மலர்ந்ததென்ன

பெண்:
தோற்றத்திலே மனம் தோற்றதிலே
தூக்கம் கெட்டு உனைப் பார்த்ததிலே

ஆண்:
பூ மாலை போல் என்னை
நீ சேரும் பொன் மாலை
நான் காண்பேன் ஆனந்தம்

பெண்:
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

*********************************

ஆண்:
சொர்கத்திலே உந்தன் பக்கத்திலே
தந்த சொந்தத்தில் சுகம் வடித்தேன்

பெண்:
கூடத்திலே மணி மாடத்திலே
தந்த பாடத்தில் எனை இழந்தேன்

ஆண்:
கூந்தல் என்னும் ஒரு வீட்டுக்குள்ளே
கூடு கட்டும் இசைப் பூங்குயிலே

பெண்:
பூ மேனி நூலானேன்
பூ இன்று ஆளானேன்
பாலாடை போல் ஆனேன்

ஆண்:
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

பெண்:
பூந்தேகம் நீ ஏந்தும்
பொன்னோடம் தான்

ஆண்:
உன் மோகம் என் நெஞ்சின்
பூபாளம் தான்

பெண்:
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

ஆண்:
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

*********************************

Friday, May 22, 2020

வராத காலங்கள் - நதியை தேடி வந்த கடல் பாடல் வரிகள்



படம்: நதியை தேடி வந்த கடல்
இசை: இளையராஜா

*********************************

வராத காலங்கள்‌ வந்த பொன்‌ நாளம்மா
பெறாத இன்பங்கள்‌ கொண்ட நன்னாளம்மா
ஒரு தெய்வம்‌ வந்தது
என்‌ சோகம்‌ கண்டது
காவலாய்‌ நின்றது

வராத காலங்கள்‌ வந்த பொன்‌ நாளம்மா
பெறாத இன்பங்கள்‌ கொண்ட நன்னாளம்மா

*********************************

காலங்கள்‌ மாறும்‌ கவலைகள்‌ தீரும் ‌
காத்திருந்தால்‌
தாயிடம்‌ பிள்ளை சேர்ந்தது முல்லை
யார் மறுப்பார்

நடுவில்‌ வந்தவர்‌ கெடுதல்‌ செய்தவர்‌
உறவை அங்கும்‌ இங்குமாகதான்‌ மாற்றினார்‌
இது காலம்‌ செய்த கோலம்‌ அன்றி வேறேது

வராத காலங்கள்‌ வந்த பொன்‌ நாளம்மா
பெறாத இன்பங்கள்‌ கொண்ட நன்னாளம்மா

*********************************

பேதையைப் போல வாழ்ந்து விட்டேனே
சூழ்ச்சியினால்
பிள்ளையை இன்று பார்த்து விட்டேன் உன்
ஆதரவால்
நன்றி சொல்லுவேன் என்றும் என்றுமே
மனதில் இன்பம் கோடியாக நீ காட்டினாய்
இனி நானும் எந்தன் பிள்ளை கூட வாழ்வேனே

வராத காலங்கள்‌ வந்த பொன்‌ நாளம்மா
பெறாத இன்பங்கள்‌ கொண்ட நன்னாளம்மா
ஒரு அன்னை நெஞ்சிலே புது இன்பம் சேர்ந்தது
தாய்மையைக் கண்டது

வராத காலங்கள்‌ வந்த பொன்‌ நாளம்மா
பெறாத இன்பங்கள்‌ கொண்ட நன்னாளம்மா

*********************************




எங்கேயோ ஏதோ - நதியை தேடி வந்த கடல் பாடல் வரிகள்



படம்: நதியை தேடி வந்த கடல்
இசை: இளையராஜா

*********************************

பெண்:
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்

குளிர் மேகங்கள் பனிக் காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
ஏஏஏஏஏஏ
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

*********************************

ஆண்:
பூஞ்சோலையில் பூந்தென்றலில்
பொன்மேனி நடமாடுது
என் நெஞ்சம் தடுமாறுது

பெண்:
தோளோடு நான் சாய்ந்தாடவா
சொல்லாத சுவை கூறவா
சூடான கதை சொல்லவா

ஆண்:
பொன்மாலை நேரம் தேனானது
பூ மஞ்சள் மேனி ஏன் வாடுது
சொர்கத்தைக் கண்டேனம்மா
ஆ ஆஆ ஆ

பெண்:
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

*********************************

பெண்:
லாலா லாலா லாலா லாலா லாலாலா லாலாலாலா
லாலாலாலா லாலாலாலா லா லா
லாலாலாலா லாலாலாலா லா லா

தாயாகினேன் தாலாட்டினேன்
கண்ணா என் ராஜாங்கமே
நீதான் என் ஆதாரமே

ஆண்:
மணிப்பிள்ளைகள் மான்குட்டிகள்
உறவாடும் தெய்வங்களே
ஒளி வீசும் தீபங்களே

பெண்:
வாடாத முல்லை பூ மேனியே
தேடாமல் வந்த செல்வங்களே
என் ஜீவன் உன்னோடுதான்
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்

ஆண்:
குளிர் மேகங்கள் பனி காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
ஏ ஏ ஏ ஏ

பெண்:
எங்கேயோ ஏதோ
பாட்டொன்று கேட்டேன்

*********************************

Thursday, May 21, 2020

பூந்தோட்டம் பூவில் - நதியை தேடி வந்த கடல் பாடல் வரிகள்



படம்: நதியை தேடி வந்த கடல்
இசை: இளையராஜா

*********************************

லாலாலா லாலா லாலா லாலாலா
லாலாலா லாலா லாலா லாலாலா
லாலா லாலா லாலா லாலாலா
லாலா லாலா லாலா லா லா லா

பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூஜை செய்யும் பச்சை
கிள்ளைகள்
ஆடல் மங்கை தோகை
வண்ணங்கள்

பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம்

*********************************

கவிதைகள் எழுதுக புதிய மேகங்கள்
இனிய நாதங்கள்
பசுமையில் மலருக அழகு மஞ்சங்கள்

காலங்கள் தெய்வத்தின் வேதங்கள்
உள்ளங்கள் ஆனந்த மேளங்கள்
எங்கே என்றோ ராஜாங்கமோ
இளமை நெஞ்சம் தெய்வீகமோ

பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம்

*********************************

கிளைகளில் குயில்களின் புதிய சந்திப்பு
அதிலும் தித்திப்பு
நதிகளில் அலைகளின் புதிய தாளங்கள்

எங்கெங்கும் கல்யாணக் கோலங்கள்
ஏமாற்றம் இல்லாத ஜீவன்கள்
தன்னைத் தானே ஆள்கின்றன
மண்ணில் இன்று வாழ்கின்றன

பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம்

*********************************

மனிதர்கள் மனதிலே உதய காலங்கள்
நிழலைப் பாருங்கள்
மரங்களின் நிழலிலே கனவு ஜாலங்கள்
நாளொன்றும் பொழுதொன்றும் போகுது
நாளுக்கு நம் எண்ணம் மாறுது
எங்கே சொந்தம் உண்டாகுமோ
அங்கே நெஞ்சம் சென்றால் என்ன

பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூஜை செய்யும் பச்சை கிள்ளைகள்
ஆடல் மங்கை தோகை வண்ணங்கள்

பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம்

*********************************

Tuesday, May 19, 2020

முதல் முத்த மோகம் - புதிர் பாடல் வரிகள்



படம்: புதிர்
இசை: இளையராஜா

*********************************

பெண்:
முதல் முத்த மோகம்
இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
புது சுவை சுகம்
நான் கண்டேன்
முதல் முத்த மோகம்
இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்

*********************************

ஆண்:
தேவை இந்த பாவை என்று
ஆசைத்  தேடுதே
பூவை சூடும் பூவை மீது
மாலைப்  போடுதே

பெண்:
மோதல் காதல் ஆனதே
ராகம் தாளம் சேருதே

ஆண்:
பூந்தேரோடும் பாதையில்
மான் நீராடுதோ

பெண்:
நான் காணாத மோகமே
என் போராடுதோ

ஆண்:
தேகம் எங்கும் தாகம்
இன்ப தேனில் ஊரும் வேகம்
சுகமே

பெண்:
முதல் முத்த மோகம்
இது என்ன மாயம்

*********************************

பெண்:
கண்ணில் நாணும் மின்னல் உந்தன்
கையில் காணுதே
கைகள் தீண்டும் பொது தேகம்
பெண்மை காணுதே

ஆண்:
காதல் ராஜ கோபுரம்
காண வேண்டும் சீக்கிரம்

பெண்:
நீ தூங்காத ராவிலே
நான் தாலாட்டுவேன்

ஆண்:
நீ தாலாட்டும் பாடலை
நான் பாராட்டுவேன்

பெண்:
கீதம் பாடும் வானம்பாடி
நானும் நீயும் ஆவோம்
புதுமை

முதல் முத்த மோகம்
இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
புது சுவை சுகம்
நான் கண்டேன்
முதல் முத்த மோகம்
இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்

*********************************

Monday, May 18, 2020

ஆவாரம் காட்டுக்குள் - அர்ச்சனை பூக்கள் பாடல் வரிகள்



படம்: அர்ச்சனை பூக்கள்
இசை: இளையராஜா

*********************************

பெண்:
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
மணி ஆத்தோட நானும்
ஒரு சேதி கேட்டேன்
காதோரமா
இளம் காத்தோடு ராகம்
கல்யாண மேளம்
ஆதாரமா

ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா

*********************************


ஆண்:
புள்ளி மயில் முகத்தில்
வெள்ளி ரதம் இழுத்து
உள்ளம் என்னும் இடத்தில
உற்சவத்தை நடத்த

புள்ளி மயில் முகத்தில் முகத்தில்
வெள்ளி ரதம் இழுத்து இழுத்து
உள்ளம் என்னும் இடத்தில இடத்தில
உற்சவத்தை நடத்த

ஆளோட அரசாட்சி ஆலிங்கனம்
ஆனந்தம் இல்லாட்டி நானெங்கேனோ
அம்மா நீ மறவாதே சாயந்தரம்
ஆலிங்கனம் நூறாகனும்

ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா

*********************************


பெண்:
வேதம் சொல்லி கொடுத்து
வேண்டும் மட்டும் படித்து
அம்மனையும் அழைச்சா
என்ன உந்தன் கருத்து
வேதம் சொல்லி கொடுத்து கொடுத்து
வேண்டும் மட்டும் படித்து படித்து
அம்மனையும் அழைச்சா அழைச்சா
என்ன உந்தன் கருத்து


என்னத்த சொன்னாலும் எனக்கில்லையா
என் போல உள்ளாச உனக்கில்லையா

உன்னோடு ஒண்ணானா கணக்கில்லையா
கணக்கில்லையா கூட்டுங்கய்யா

ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா

ஆண்:
மணி ஆத்தோட நானும்
ஒரு சேதி கேட்டேன்
காதோரமா

பெண்:
இளம் காத்தோடு ராகம்
கல்யாண மேளம்
ஆதாரமா

இருவரும்:
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா

*********************************

வழிமேல் விழியாய் - அர்ச்சனை பூக்கள் பாடல் வரிகள்



படம்: அர்ச்சனை பூக்கள்
இசை: இளையராஜா

*********************************

வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

சுகம் ஏகாந்தமாய் மலர
அது ஆகாயமாய் விரிய
வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

*********************************

ஒரு நாதன் கை கூடும்
திருநாளும் கைக்கூடும்
குழல் நீளும் மலர் சூடும்
வளைக் கோலம் நலம் பாடும்

ஒரு நாதன் கை கூடும்
திருநாளும் கைக்கூடும்
குழல் நீளும் மலர் சூடும்
வளைக் கோலம் நலம் பாடும்

அலங்காரம் அரங்கேறும்
புது நாணம் உருவாகும்
அலங்காரம் அரங்கேறும்
புது நாணம் உருவாகும்

மணமாலை கொள்ளும்
வேளை வந்தால் வைபோகமே

வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

*********************************

உனை நாளும் அர்ச்சிக்க
எனை நீயும் வர்ணிக்க
ஒரு பந்தம் ஒரு சொந்தம்
அது பாடும் புது சந்தம்

உனை நாளும் அர்ச்சிக்க
எனை நீயும் வர்ணிக்க
ஒரு பந்தம் ஒரு சொந்தம்
அது பாடும் புது சந்தம்

சுக நாதம் சுப கீதம்
இரு நெஞ்சம் இசை போடும்
சுக நாதம் சுப கீதம்
இரு நெஞ்சம் இசை போடும்
பல ராகம் தாளம்
பாவம் யாவும் உண்டாகிட

வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

சுகம் ஏகாந்தமாய் மலர
அது ஆகாயமாய் விரிய

வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

*********************************

Sunday, May 17, 2020

காவிரியே - அர்ச்சனை பூக்கள் பாடல் வரிகள்


படம்: அர்ச்சனை பூக்கள்
இசை: இளையராஜா

*********************************


ஆண் :
லால்லல் லா லால்லல் லா

காவிரியே காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது
காவிரியே

பெண் :
காவிரியே
காதலன் போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலி நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது
காவிரியே

ஆண் :
காவிரியே
காதலி போல் விளையாடுறியே

*********************************

பெண் :
பொன்னை அள்ளித் தூவுதே
மஞ்சள் நிற மேகம்
என்னை அள்ளிப் போகுதே
கொஞ்சுகிற ராகம்
என்னமோ

ஆண் : ம்ம்
பெண் : பண்ணுதே
ஆண் : ம்ம்
பெண் : இந்த மன வேகம்

ஆண் :
அள்ளிக்கொள்ள வந்தேனம்மா
அன்பை அள்ளித் தந்தேனம்மா
இனிமேல் யாவும் நீதானம்மா

பெண் :
ஆசை வச்சேன் ஆசை வச்சேன்
அம்மன் கோவிலு பூஜை வச்சேன்
ஒன்ன பார்த்தொரு பாசம் வச்சேன்
உன் உள்ளம் பார்த்ததும் நேசம் வச்சேன்
காலம் நேரம் ஒண்ணாச் சேர்ந்தது

ஆண் :
காவிரியே காவிரியே
காதலி போல் விளையாடுறியே

*********************************

ஆண் :
காதலுக்கு மார்கழி
ரொம்ப நல்ல மாசம்
ஹோய் கண்டபடி வீசுதே
மல்லியப்பூ வாசம்
கையிலே

பெண் : ஹா
ஆண் : கையிலே
பெண் : ம்ம்
ஆண் : கன்னிப்பொண்ணு பேசும்

பெண் :
புதுசா பாடம் சொல்லி
மெதுவாய் என்னை அள்ளி
சுகமா தாங்க வாழ் நாளெல்லாம்

ஆண் :
காவிரியே காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

பெண் :
லால்லல் லா லால்லல் லா
லாலா லல லா லால்லல் லா

*********************************

பூவே இது பூஜை - கிராமத்து அத்தியாயம் பாடல் வரிகள்


படம்: கிராமத்து அத்தியாயம்
இசை: இளையராஜா

*********************************

பூவே
இது பூஜை காலமே
இளம் பூவை ராகமே
மனம் தாவி வந்த வேகம் தீர்க்க
நாளும் வேண்டுமே

நாளும்‌ உனை நினைத்து நினைத்து
தவித்து தவித்து ஏங்கும்‌ உள்ளம்‌ பாடாதோ
வாழையென வளர்ந்து வளர்ந்து
தினமும் துடிப்பதோ

பூவே
இது பூஜை காலமே

*********************************

சலங்கை தாளமே
எந்தன்‌ காதில்‌ கேட்குமோ
குயிலே ஏஏஏஏஏஏஏஏஏ
சலங்கை தாளமே
எந்தன்‌ காதில்‌ கேட்குமோ
வாழை மாவிலை
மஞ்சள்‌ வாசம்‌ தோன்றுமோ
பனி வாடைக்‌ காற்று வீசும்போது
பாவி மேனி வாடுதே

பூவே
இது பூஜை காலமே

*********************************

கண்ணை மூடியும்‌
மனம்‌ தூங்கவில்லையே
நெஞ்சே ஏஏஏ ஏஏஏஏஏஏ
கண்ணை மூடியும்‌
மனம்‌ தூங்கவில்லையே
கண்ணன்‌ ஞாபகம்‌ உன்னில்‌ நீங்கவில்லையே
திருமாலை சேர்ந்த தேவி ஏக்கம்‌
தரவேண்டி ஏங்குதே

பூவே
இது பூஜை காலமே
இளம் பூவை ராகமே
மனம் தாவி வந்த வேகம் தீர்க்க
நாளும் வேண்டுமே

நாளும்‌ உனை நினைத்து நினைத்து
தவித்து தவித்து ஏங்கும்‌ உள்ளம்‌ பாடாதோ
வாழையென வளர்ந்து வளர்ந்து
தினமும் துடிப்பதோ

பூவே

*********************************

Saturday, May 16, 2020

ஊத காத்து வீசயிலே - கிராமத்து அத்தியாயம் பாடல் வரிகள்



படம்: கிராமத்து அத்தியாயம்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே

கொஞ்சிடும் ஆசையிலே  குருவிங்க பேசயிலே
வாடதான் என்னை ஆட்டுது  வாட்டுது

பெண்:
யே ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே
கொஞ்சிடும் ஆசையிலே  குருவிங்க பேசயிலே
வாடதான் என்னை ஆட்டுது  வாட்டுது
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே

*********************************

பெண்:

கொத்தமல்லி பூவாசம் அத்தமகன் உன் நேசம்
சுத்துது என்ன வேகமா  மோகமா

கொத்தமல்லி பூவாசம் அத்தமகன் உன் நேசம்
சுத்துது என்ன வேகமா  மோகமா

ஆண்:
நான் என்னத்த செய்ய ஆஆஆஆஆ

இருவரும் : நான் என்னத்த செய்ய

பெண்:
நீ வந்து கைய
தொட்டதும் ஏறுது
ஆசை கட்டளை போட்டு
கட்டுறபாட்டு என்னயும் மீறுது
ஊத காத்து வீசயிலே குயிலு கூவயிலே

*********************************

பெண்:
பக்கத்திலே நீ வேணும்
கட்டி கொள்ளத்தான் வேணும்
சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது
பக்கத்திலே நீ வேணும்
கட்டி கொள்ளத்தான் வேணும்
சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது

ஆண்:
அத சொல்லடி புள்ள
ஆஆஆ ஆஆ ஆஆஆஆ

பெண்:
அத சொல்லுறபுள்ள வெக்கத்தமெல்ல
விட்டுட்டுபேசுது
நீயும் அள்ளுறபோதும் கிள்ளுறபோதும்
அசந்து பாக்குது
ஊத காத்து வீசயிலே குயிலு கூவயிலே


*********************************


பெண்:
வாசமுள்ள பூமுல்ல
வாடைபட்டுத்தான் மெல்ல
வாடுறேன் ரொம்ப நேரமா ஓரமா

ஆண்:
அத எங்கிட்டசொல்லு

பெண்:
யேயே யேயே யேயே  ஆஆஆ ஆஆ ஆஆ
அத உங்கிட்ட சொன்னா அசந்த பொண்ணா
என்னையும் மெரட்டுது நீ பாக்குற போதும்
கேக்குறபோதும் பார்வையும் மெரட்டுது
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே
கொஞ்சிடும் ஆசையிலே  குருவிங்க பேசயிலே
வாடதான் என்னை ஆட்டுது  வாட்டுது
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே

*********************************

ஆத்து மேட்டுல - கிராமத்து அத்தியாயம் பாடல் வரிகள்



படம்: கிராமத்து அத்தியாயம்
இசை: இளையராஜா

*********************************

பெண்:
ம் ஹ்ம் ஹ்ம்
ம் ஹ்ம் ஹ்ம்
லால லால லா
லா லால லால லா
லால லால லா லால லா
லா லால லால லா
லா லால லால லா

ஆண்:
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல கீத்துல
தாளம் போட்டு
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது


பெண்:
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல கீத்துல
தாளம் போட்டு
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது

*********************************

ஆண்:
காட்டுல
கட்டில் ஒண்ணு போடவா
கையில
கட்டி கொண்டு ஆடவா

பெண்:
ஏஹே என்ன ஆசை
ஏக்கம் வந்து பேச

ஆண்:
கண்ணுக்குள்ள மோகம் தோணுது
கன்னி பொண்ண காணும்போது
ஆத்து மேட்டுல

பெண்: ஒரு பாட்டு கேக்குது

ஆண்:
ஆடும் காத்துல கீத்துல
தாளம் போட்டு

பெண்:
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது

*********************************

ஆண்:
கேக்கவா
ஒண்ணே ஒண்ணு கேக்கவா
சேக்கவா
கையில் உன்ன சேக்கவா

பெண்:
ஊஹும் மாட்டேன் மாட்டேன்
ஏதும் பேச மாட்டேன்

ஆண்:
சொல்ல சொல்ல வேகம் ஏறுது
தூக்கிகிட்டு போக போறேன்
ஆத்து மேட்டுல

பெண்: ஆ

ஆண்: ஒரு பாட்டு கேக்குது

பெண்:
ஆஹா
ஆடும் காத்துல கீத்துல
தாளம் போட்டு
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது

*********************************

Wednesday, May 13, 2020

செவ்வரளி தோட்டத்தில - பகவதிபுரம் ரயில்வேகேட் பாடல் வரிகள்



படம்: பகவதிபுரம் ரயில்வேகேட்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
தானானே ஏஏ ஏஏஏஏஏ
தானானா ஆஆஆஆ ஆஆஆஆ
தானானா ஆஆஆஆ

பெண்:
செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே
துடிப்பும் அடங்குதில்ல

செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

*********************************

ஆண்:
கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே
பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே
பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல
அன்னமே

பெண்:
வெக்கமது உங்களுக்கில்ல
வெக்கம் மறந்தா பொம்பள இல்ல
ஆசைய சொல்ல நெனச்சேன்
சொல்லாமத்தான் விட்டேனே

ஆண்:
செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு

*********************************


ஆண்:
ஆ ஆஆஆ ஆஆஆ

ஐலேசா ஐலேசா ஹோய் ஹா  ஹோய் ஹா
ஐலேசா ஐலேசா ஹோய் ஹா  ஹோய் ஹா

ஆடும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம்
மனசுல கொண்டாட்டம்
மலருற செண்டாட்டம்
ஆடும் அலை ஓயாதம்மா
ஆசை அது தேயாதம்மா

*********************************

பெண்:
ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்
சொந்தத்திலே பலமிருந்தா சொர்க்கத்திலும் இடமிருக்கும்
உன்னைவிட யாருமில்லே ஒட்டுறவு தேவையில்லே
என்னய்யா

ஆண்:
என்னமோ சொல்ல நெனச்சேன்
என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
என்ன என்ன எண்ணமிருக்கோ
எல்லாத்திலும் நீதானே

பெண்:
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு (ஆண்: ஆ )
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

ஆண்:
அக்கம் பக்கம் யாருமில்லே
ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே
துடிப்பும் அடங்குதில்ல
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு

*********************************